திங்கள், 13 மார்ச், 2017

#ஒசூரில்_நூதன_திருட்டுக்கு பலியாக இருந்த பெண் காப்பாற்றப்பட்டார்.

ஓசூர் முனிஸ்வர நகர் பகுதியில், வீடு வாடகைக்கு கேட்பது போல் வந்த இருவர், தனியாக இருந்த பெண்னை கொலை செய்து நகை, பணத்தையும் திருட நடந்த முயற்சி இன்று மதிய வேளையில் முறியடிக்கப்பட்டது.

பார்பதற்கு  இளம் தம்பதி போல் உள்ள இவர்கள், வாடகைக்கு வீடு கேட்டு உள்ளே நுழைந்து தனியாக இருந்த வீட்டுக்காரப் பெண்னை கழத்தை நெறித்துள்ளனர். அந்த பெண் எப்பிடியோ சமாளித்து கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் அந்த இரண்டு திருடர்களை சுற்றி வளைத்து பிடித்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து கைப்பற்ற கைப்பையில் திருட்டு மற்றும் தேவைப்பட்டால் கொலை செய்யப் பயண்படும் ஆயுதங்களும் இருந்தது. தற்போது காவல்துறை வசம் ஒப்படைக்க பட்டு விட்டனர்.

திருடர்களின் முகத்தை போட்டாவில் பாருங்கள்,  நம்மால் கணிக்க முடியாதவாறு டிப்டாப் ஆசாமிகளாக இருக்கிறார்கள். ஆனால் கொடுரமானவர்கள்,  இன்று சற்று தாமதித்து இருந்து சத்தமில்லாமல் கொலை செய்து வெளியேறியிருப்பார்கள்.

1. தனியாக இருக்கும் பெண்கள் தேவை இருப்பின் மட்டும் கதவை திறங்கள். மற்ற நேரங்களில் கதவை திறந்து வைப்பதை தவிர்த்து விடுங்கள்.

2. அறிமுகமில்லாதவர்களிடம் வாசல் வெளியே வைத்தே எதையும் பேசி விடுங்கள். வீட்டில் அழைக்கும் நிமிர்த்தம் ஏற்பட்டால் அக்கம் பக்கத்தினர் ஒருவரையும் அழைத்து கொள்ளுங்கள்.

3. தனியாக வாழும் பெண்கள் நகைகளை அதிகம் அணிந்து ஆடம்பர படுத்திக் கொள்ள வேண்டாம்.

4. அக்கம் பக்கதினராக இருப்பினும்,  அவர்களின் செயல் சந்தேகத்தை ஏற்படுத்தினாலும்,  வீட்டில் அழைத்து பேசுவதை தவிர்த்து கொள்ளவும்.

5. தனியாக இருக்கும் பெண்கள்,  பால்காரர், சிலிண்டர் போட வருபவர், பேப்பர்காரர்,  மளிகைகடைகாரர் என இவர்களிடம் கூட தேவைக்கு மேல் பேசுவது,  டெலி போன் நம்பர் கொடுப்பதையும் தவிர்த்துக் கொள்ளவும்.

6. எப்பொழுதும் விழிப்புணர்வுடன் இருப்பது,  தனக்கும் , தன் குழந்தைகளுக்கும், தங்கள் செல்வங்களுக்கும் பாதுகாப்பான ஒன்று. அலட்சியம் செய்தால் இழந்ததை பெருவது இயலாத காரியமாகிவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக