செவ்வாய், 16 மே, 2017

பி.இ., 2-ம் ஆண்டு சேர்க்கை நாளை முதல் விண்ணப்பம்.

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள அரசு, தனியார் இன்ஜி., கல் லுாரிகளில், டிப்ளமோ, பி.எஸ்சி., முடித்தவர்கள் பி.இ., பி.டெக்., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்ந்து படிப்பதற்கு, நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம், என இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை செயலர் இளங்கோ கூறினார்.
அவர் கூறும்போது: இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை விண்ணப்பங்கள் நாளை முதல் ஆன்லைனில் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் www.accetlea.com என்ற இணையதளத்தில் சென்று, விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.பூர்த்தி செய்தவுடன், விண்ணப்ப எண் வரும். அலைபேசி எண்ணுக்கு பாஸ்வேர்டு வரும். விண்ணப்ப எண் மற்றும் பாஸ்வேர்டு மூலம் அவர் அனுப்பிய விண்ணப்பத்துக்கான தகவல்களை பார்க்க முடியும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து,அதனுடன் டிப்ளமோ மாற்று சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், ஜாதி, இருப்பிடம், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் உள்ளிட்டவையின் நகலையும், ரூ.300-ன் காசோலை அசலையும், செயலர், இரண்டாம் ஆண்டு பி.இ., நேரடி சேர்க்கை 2017, அழகப்ப செட்டியார் இன்ஜி., கல்லுாரி, காரைக்குடி -630 003 என்ற முகவரிக்கு ஜூன் 14-ம் தேதி மாலை 5:00 மணிக்குள் அனுப்ப வேண்டும், என்றார்.
மேலும் விபரங்களை 04565-230 801 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து 
கொள்ளலாம்.-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக