வாழ்க்கைங்கிறதே ஒரு பெரிய வடிவேலு காமெடிதான் பாஸ். நம்ம லைஃப்ல நடக்கிற பல பிரச்னைக்கு நாமெல்லாம் எங்கேயோ தீர்வைத் தேடிக்கிட்டு இருக்கோம். ஆனா எல்லாத்துக்குமே வடிவேலு வசனத்துலயே தீர்வு இருக்கு. ஆபீஸ்லயும், காலேஜ்லயும் பர்சனாலிட்டி டெவலப்மென்ட் கோர்ஸ்னு சொல்லி வெளிநாட்டு அறிஞர்கள் சொன்ன பொன்மொழி எல்லாம் வெச்சுப் பாடம் நடத்துவாங்க. ஆனா பல பேருக்கு நம்ம வைகைப்புயல் சொன்ன பல வசனங்கள்ல வாழ்க்கைக்கான தத்துவங்கள் இருக்குன்னு தெரியாம போச்சு. அப்படி வாழ்க்கையைப் பற்றி வடிவேலு என்னதான் சொல்லி இருக்கார்னு ஒரு சுமால் ஆர்டிக்கள்.
🎯நம்ம மக்கள்கிட்ட இருக்கிற முக்கியமான பிரச்னை பழசை நினைச்சு புலம்பிக்கிட்டே இருக்கிறது. வாழ்க்கையில் நடந்த சோகமான விஷயத்தை எல்லாம் நினைச்சு நினைச்சு காயப்போட்டு, சோகப்பாட்டோட வருத்தமான ஒரு வாழ்க்கை வாழ்வாங்க. இப்படி பழசை நினைச்சு புலம்பிக்கிட்டே இருக்கிறவங்களுக்காகவே வடிவேலு சொன்ன வசனம்தான் `அது போன மாசம் இது இந்த மாசம்`. வாழ்க்கைல எந்தப் பிரச்னை வந்தாலும் அதை அப்படியே மறந்துட்டு அது போன மாசம் இது இந்த மாசம்னு கடந்து போய்க்கிட்டே இருக்கணும் பாஸ்.
🎯நிறையப் பேருக்கு எவ்ளோதான் தன்னம்பிக்கை வசனம் சொன்னாலும் எப்போதும் அவநம்பிக்கையோடவே இருப்பாங்க. கடைசிவரைக்கும் அவங்களுக்கு அவங்க மேலேயே நம்பிக்கை வராது. என்னால இது முடியுமா, நான் இதைப் பண்ணிடுவேனா, நான் இதுக்குத் தகுதியான்னு எப்பவும் டவுட்டோடயே சுத்திக்கிட்டு இருப்பாங்க. அவங்களுக்காக வடிவேலு சொன்ன வசனம்தான் `நானும் ரெளடிதான்’. ஆமா மக்களே நீங்களும் ரெளடிதான் சத்தமா சொல்லுங்க... நீங்களும் ரெளடிதான்.
🎯பல காலமா நம்ம மக்கள்கிட்ட இருக்கிற முக்கியமான பிரச்னைனா அது அவசரப்படுறதுதான். ஏதாவது ஒரு விஷயம் செஞ்சுட்டு அதுக்கு உடனே நல்ல பலன் கிடைக்கணும்னு எதிர்பார்ப்பாங்க. எல்லாமே உடனே கிடைச்சிடணும். இன்ஸ்டன்டா பெரிய ஆள் ஆகிடணும், வாழ்க்கை மாறணும்னு நினைப்பாங்க. பட் அந்த மாதிரிலாம் அவசரப்படாம பொறுமையா இருந்தா கண்டிப்பா வாழ்க்கைல பெரிய ஆள் ஆகலாம். உங்களுக்கும் ஒரு நேரம் வரும்... அதுவரைக்கும் வெயிட் பண்ணுங்க பாஸ். அதுக்காகவே வடிவேலு சொன்ன டயலாக்தான் `பிரபா ஒயின் ஷாப் ஓனரா.....எப்ப சார் கடையைத் திறப்பீங்க` ...நீங்க ஆசைப்படுறது கிடைக்கிற வரைக்கும் கொஞ்சம் பொறுமையா இருங்க ப்ரோ.
🎯எல்லோரும் இந்த விஷயத்தை வாழ்க்கையில் ஒரு தடவையாவது உணர்ந்து இருப்போம். கஷ்டப்பட்டு உழைப்போம், ஆனா அதுக்கான பலன் கிடைக்கவே கிடைக்காது. நாம் என்னதான் கஷ்டப்பட்டு உழைச்சாலும் கரெக்ட்டா உழைச்சாதான் அதுக்கான பலன் கிடைக்கும் மக்களே. தப்பான விஷயத்தைத் திரும்பத் திரும்ப செஞ்சா எதுவுமே மாறாது, அதைத்தான் `நீ புடுங்குறது எல்லாமே தேவை இல்லாத ஆணிதான்` ன்னு சொல்லி இருக்கார் வடிவேலு. ஆகவே எது தேவையான ஆணியோ அதை மட்டும் பிடுங்கினா போதும்.
🎯உலகத்துல வேற ஏதாவது ஒரு அறிஞர் இப்படி ஒரே வார்த்தைல தத்துவம் சொல்லி இருப்பாரான்னு தெரியலை. ஆனா வடிவேலு சொல்லி இருக்கார். உங்களைச் சுற்றி எல்லாம் பிரச்னையா இருக்கிறப்போ, உங்களை எல்லாரும் சந்தேகப்படுறப்போ அதையெல்லாம் கண்டுக்காம கடந்து போய்கிட்டே இருக்கணும். அதுக்காகவே அவர் சொன்னதுதான் `ஆஹான்` வசனம். இனியும் உங்களை யாராவது சந்தேகப்பட்டா அப்படியே ஆஹான் சொல்லிட்டுக் கடந்து போய்க்கிட்டே இருங்க பாஸ்.
🎯நாம் எல்லோரும் ஏதாவது ஒரு ஃபீல்டுல கண்டிப்பா திறமையான ஆளா இருப்போம். ஆனா அதுல வேலை பார்க்காம வேற ஏதாவது ஒரு துறையில் மாட்டிக்கிட்டு கஷ்டப்பட்டுக்கிட்டு இருப்போம். முக்கியமா இன்ஜினீயரிங் படிச்ச பல பேர் இப்படித்தான் மாட்டிக்கிட்டு கஷ்டப்படுறாங்க. அவங்களுக்காகத்தான் வடிவேலு `வாயா வாயா என் ஏரியாவுக்கு வாயா`ன்னு சொல்லி இருக்கார். நீங்க எந்த ஏரியாவில் ஸ்டாராங்கா இருக்கீங்களோ அந்த ஏரியாவில் உங்க போட்டியாளரை எதிர்கொள்ளுங்க.
🎯வாழ்க்கைல எல்லோரும் எப்படா மாற்றம் வரும்னு ஏதாவது ஒரு டைம் யோசிச்சு இருப்போம். எங்கேயோ வாழ்க்கைக்கான மாற்றம் கிடைக்குமான்னு தேடிக்கிட்டே இருப்போம். இப்படித் தேடித் தேடிக் கடைசிவரைக்கும் மாற்றம் எங்கே இருக்குன்னே தெரியாம சுத்திட்டு இருக்குறப்பதான் நம்ம பக்கத்துலயே நமக்குத் தேவையான விஷயம் இருந்திருக்கும். அதை உணர்த்தணும்னுதான் வடிவேலு, `உங்க புரணிக்கு பின்னாடிதான் இருக்கேன் ஓவர் ஓவர்` எனச் சொல்லியிருப்பார். ஆமா ப்ரோ உங்களுக்குத் தேவையான மாற்றம் உங்க புரணிக்குப் பின்னாடியேகூட இருக்கலாம். நல்லாத் தேடிப் பாருங்க.
🎯என்னதான் உங்களுக்கு எல்லாத் துறையிலையும் அறிவு இருந்தாலும் சில விஷயத்துல தேவை இல்லாம தலையிடக் கூடாது. அப்படித் தலையிட்டா பல பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும். ஆகவே உங்களுக்கு என்ன தெரியுமோ அதுக்குள்ளயே இருந்து நல்ல பையனா வாழணும்னு சொல்லத்தான் வடிவேலு இந்தக் கோட்டைத் தாண்டி நீயும் வரக் கூடாது நானும் வர மாட்டேன் வசனத்தை சொல்லி இருப்பார். நல்லா யோசிச்சு பார்த்தீங்கன்னா உலக அரசியலுக்கே இந்த வசனத்துல தீர்வு இருக்குன்னு சொல்லிட்டு ஆஃப்லைன் போய்க்கிறேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக