வெள்ளி, 17 மார்ச், 2017

தர்க்கத்துக்கு அப்பால்...!

இரு மனிதர்கள் இருந்தனர்.
ஒருவர் பெயர் ‘தர்க்கம்’; மற்றவர் பெயர் ‘அதிஷ்டம்’.

இருவரும் ஒரு வாகனத்தில் பயணித்தனர்.
நடு வழியில் எரிபொருள் தீர்ந்து போயிற்று.
வேறு வழியில்லாததால் எஞ்சிய தூரத்தை கால்நடையாகவே முடிக்கத் தீர்மானித்தனர்.


எனினும் இலக்கை அடைய முன்னர் இருட்டி விட்டது. தங்குவதற்கும் இடமில்லை.

‘தர்க்கம்’ கூறினார்: “இங்கு எங்காவது தூங்கி விட்டு காலையில் தொடர்வோம்”.
அதன்படி- ஒரு மரத்துக்கருகில் சயனிக்க ‘தர்க்கம்’ தீர்மானித்தார்.
ஆனால் ‘அதிஷ்டம்’ நடுவீதியையே தேர்ந்தெடுத்தார்.

“பைத்தியமா உனக்கு?! நீயே மரணத்தை தேடிக் கெள்ளப் போகிறாயா?! வாகனம் ஏதும் படு வேகமாக வந்து மிதித்து விடும்!” என்றார் ‘தர்க்கம்’.

அதற்கு ‘அதிஷ்டம்’ கூறினார்: “நான் நடு வீதியில்தான் தூங்குவேன்; ஏதும் வாகனம் வந்தால் என்னைக் கண்டு நிறுத்தக் கூடும்... நமக்கு பயணிக்கும் வழியும் பிறக்கக் கூடும்!”

இறுதியில்- ‘தர்க்கம்’ மரத்துக்கருகிலும், ‘அதிஷ்டம்’ வீதியின் நடுவிலும் படுத்துறங்கி விட்டனர்.

ஒரு மணி நேரம் கழித்து ஒரு பெரிய லாரி படு வேகமாக வந்தது.
நடு வீதியில் ஒருவர் படுத்திருப்பதைக் கண்டு நிற்க முயன்றது - ஆனால் முடியவில்லை.
சற்றும் எதிர்பாராத விதமான அது மரத்தின் பக்கம் திரும்பி அங்கு படுத்திருந்த தர்க்கத்தை மிதித்து விட்டது.
‘அதிஷ்டம்’  பிழைத்துக் கொண்டார்.

* * *
இதுதான் வாழ்வின் யதார்த்தம்!
சிலபோது அதிஷ்டமே மனித வாழ்வில் பாத்திரம் ஏற்கிறது.
தர்க்கத்துக்கு முரணாகத் தெரிந்த போதிலும் அதுவே நமக்கு விதியாகி விடுகிறது.

ஆதலால்-

உங்கள் பயணமொன்று தாமதமாவதை நன்மை எனக் கொள்க!

திருமணம் தள்ளிப் போனால் அருள் எனக் கொள்க!

வாய்ப்பொன்று கைநழுவினால் பயன் எனக் கொள்க!

குழந்தைப் பேறு இல்லை எனில் அதுவே உங்கள் பாக்கியம்..!

நீங்கள் வெறுக்கும் ஒன்று உங்களுக்கே நன்மையாகலாம்.

இறைவனே யாவும் அறிந்தவன்; நம் அறிவு மிகச் சொற்பம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக