லண்டனை சேர்ந்த ஒருவருக்கு 24 மணி நேரத்தில் 27 முறை மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிழைத்த சம்பவம் அதிசயத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் பேரவுட் ஹால்(54). இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனேஅவரை ராயல் மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர் தீபக் கோயல் மற்றும் மருத்துவர் டேவிட் ஸ்மித் தலைமையிலான மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து கண்காணித்து வந்தனர். இருந்தும் அவருக்கு தொடர்ந்து மாரடைப்பு ஏற்பட்டுக் கொண்டே இருந்தது.
24 மணி நேரத்தில் அதாவது ஒரு நாளில் 27 தடவை மாரடைப்பு தாக்கியது. இருந்தும் அவர் உயிர் பிழைத்தார். இதுவொரு அதிசய நிகழ்வு என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பேரவுட் ஹால் கூறுகையில், நான் உயிர் பிழைப்பேன் என்று கருதவில்லை. ஒரு நாளில் 27 தடவை நான் செத்து பிழைத்து இருக்கிறேன். மருத்துவர்கள் தான் எனது உயிரை காப்பாற்றியுள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறிய பேரவுட் ஹால், ஒரு நாள் கால்பந்து போட்டியில் விளையாடுவதே தனது இறுதி நோக்கம் என்று கூறினார்.
மருத்துவமனையில் பேரவுட் ஹால் மனைவி ஜோ ஸ்டோக்ஸ்(50), சகோதரி ஜய்னி(49), சகோதரர் ராபர்ட்(51) மற்றும் அவரரின் மூன்று குழந்தைகள் மருத்துவமனையில் உடனிருந்து கவனித்து வந்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக