கிணற்றில் நீர் இரைத்தார்கள்.
அடிக்குழாயில் நீரை அடித்துப் பிடித்தார்கள்.
அம்மியில் அரைத்தார்கள்.
குழைந்தைகள் வெளியே விளையாடினார்கள்.
பக்கத்து வீட்டாரிடம் பேசிக்கொண்டார்கள்.
குளிர்சாதனப்பெட்டி உதவி இல்லாததால் பண்டங்களைப் பரிமாறிக் கொண்டார்கள்.
சிக்னல் இல்லாமல் சாலையைக் கடந்தார்கள்.
குடும்பத்தில் அனைவரும் கலந்துரரையாடிக் கொண்டார்கள்.
குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள்.
நண்பர்கள் அனைவரும் நேரில் சந்தித்துப் பேசிக் கொண்டார்கள்.
பௌர்ணமியை முழுவதுமாக அனுபவித்தார்கள்.
இரவு 7:30 மணிக்கே தூங்கச் சென்று விட்டார்கள்.
இயற்கை.....நகரத்தை கிராமமாக்கியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக