கோவை: பள்ளிக்கல்வித்துறை சார்பில் உருவாக்கப்பட்ட, பிரத்யேக செயலி மூலம், தலைமையாசிரியர்களே மாணவர்களின் அடையாள அட்டையை, உருவாக்கும் வகையில், புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
செவ்வாய், 12 டிசம்பர், 2017
'குரூப் - 4' தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி.
தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில், குரூப் - 4 பதவியில், 9,351 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான போட்டி தேர்வு, பிப்., 11ல், தமிழகம் முழுவதும் நடத்தப்படுகிறது.
மாணவர்கள் கல்வி உதவி பெற கையேடு.
எட்டாம் வகுப்பு மாணவர்கள், மத்திய அரசின் கல்வி உதவித்தொகையை எளிதில் பெற, சிறப்பு கையேடுகள் வழங்கப்பட உள்ளன.கல்வியில் சிறந்த மாணவர்கள், மத்திய, மாநில அரசுகளின் கல்வி உதவி தொகைகளை பெற, மாநில அளவில், தேசிய வருவாய் வழி திறன் தேர்வு, தேசிய ஊரக மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு, மாவட்ட அளவிலான, 'மெரிட்' தேர்வு என, பல தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
ஞாயிறு, 10 டிசம்பர், 2017
ஏர்டெல் அதிரடி: ரூ.509/-க்கு புதிய அன்லிமிடெட் ப்ரீபெயிட் திட்டம் அறிமுகம்.!
ஏற்கனவே சந்தையில், கவர்ச்சிகரமான கட்டணத் திட்டங்களைத் தொடங்குவதன் மூலம் ஜியோவிற்கு எதிரான கைகளை உயர்த்த இதர தொலைத் தொடர்பு இயக்குநர்கள் அனுதினமும் முயன்று வருகிற நிலைப்பாட்டில், பார்தி ஏர்டெல் நிறுவனம் சத்தமின்றி ஒரு புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய ஏர்டெல் திட்டமானது, ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.459/-ஐ ஒன்றுமில்லாமல் செய்துவிடும் என்பது போல் தோன்றுகிறது.
8000 ஆசிரியர் பணியிடங்கள் அறிவிப்பு: 21க்குள் விண்ணப்பிக்க அழைப்பு.
விளம்பர எண். B/45706/CSB-2017/AWES தேதி: 30 Nov 2017*
நாடு முழுவதும் செயல்பட்டு வரும் ராணுவ பொது பள்ளிகளில் 137 பள்ளிகளில் காலியாக உள்ள 8000 ஆசிரியர் முதுகலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ராணுவ நலவாரிய கல்விச்சங்கம் வெளியிட்டுள்ளது.
சனி, 9 டிசம்பர், 2017
STATE TEAM VISIT ன் போது தலைமையாசிரியர் மேசையின் மீது இருக்க வேண்டியவை!!!
1. தலைமை ஆசிரியர் மேசை மீது இருக்க வேண்டியவை-
வருகை பதிவேடு
ஓகி புயல் தாக்குதல் காரணமாக குமரியில் மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு.
கன்னியாகுமரி மக்கள் அபராதம் இன்றி மின் கட்டணம் செலுத்த ஜனவரி 31-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 30 முதல் டிசம்பர் 16க்குள் செலுத்த வேண்டிய மின் கட்டணம், நுகர்வோர் நலன் கருதி ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மின் வாரியம் அறிவித்துள்ளது. ஏற்கனவே டிசம்பர் 18-ம் தேதி வரை வழங்கப்பட்டிருந்த அவகாசத்தை மேலும் நீடித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.
நவம்பர் 30 முதல் டிசம்பர் 16க்குள் செலுத்த வேண்டிய மின் கட்டணம், நுகர்வோர் நலன் கருதி ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மின் வாரியம் அறிவித்துள்ளது. ஏற்கனவே டிசம்பர் 18-ம் தேதி வரை வழங்கப்பட்டிருந்த அவகாசத்தை மேலும் நீடித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.
வெள்ளி, 8 டிசம்பர், 2017
Income tax கட்டும் மாதாந்திர சம்பளம் பெறுவோர் கவனிக்க.
👉நாம் மாதம் பெறும் மொத்த சம்பளத்தொகைக்கு அனுமதிக்கப்பட்ட கழிவுகள் போக பிப்ரவரி மாதம் income tax கணக்கிட்டு tax தொகையை சம்பளத்தில் பிடிக்கும் வகையில் ஓர் இன்கம் டாக்ஸ் கணக்கிட்டு படிவம் தருகிறோம்.அவர்களும் அத்தொகையை ஊதியத்தில் பிடித்தபின் மீதி ஊதியம் வழங்குகின்றனர்.இம்முறை சரியா? தவறா? என படித்த நாமே அறிவதில்லை.
👉இன்கம் டாக்ஸ் விதிகள் கூறுவதென்ன
இரண்டே நாட்களில் பான் கார்டு பெறுவது எப்படி???
பான் கார்டு வைத்திருப்பது நல்லது.
நிரந்தர கணக்கு எண் அல்லது பான் கார்டு என்பது வரிசெலுத்துவோருக்கு வருமான வரி துறையினர் அளிக்கும் 10இலக்க எண்ணெழுத்தாகும். பான் கார்டினை அடையாளஅட்டையாகவும் பயன்படுத்தலாம்.
EMIS FLASH NEWS.
தற்போது எமிஸ் வலைதளம் செயல்படவில்லையா கவலை வேண்டாம்.
காரணம் மாணவனது போட்டோவை அப்லோடு செய்யும் வகையில் சர்வர் தயார்செய்யம் பணி நடைபெறுகின்றது. போட்டோக்களை ஸ்மார்ட்போன் மூலம் அப்படியே மாணவனைபடம் பிடித்து ஏற்றும் வகையில் ஸ்மார்ட் போன் ஆன்ராய்டு App தயார் செய்யப்பட்டு வருகின்றது எனவே எமிஸ் வலைதளம் திங்கள் முதல் ,வலைதளம் மற்றும், Cellphone அப்ளிகேஷன் என இரு வழியிலும் செயல் பட உள்ளது.பதட்டமில்லாமல் திஙகள் முதல் போட்டோக்களையும் ,மற்ற பதிவுகளையும் பதிவேற்றலாம்.தாழ்த்தபட்டோரை திருமணம் செய்தால் ரூ.2.5 லட்சம் உதவி தொகை; அரசு அறிவிப்பு.
தலித்தை திருமணம் செய்தால் ரூ. 2.5 லட்சம் உதவி தொகை வழங்கும் திட்டத்தில் மத்திய அரசு பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
உதவி தொகை:
கலப்பு திருமணத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு தலித்தை திருமணம் செய்தால் ரூ.2.5 லட்சம் உதவி தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. திருமணம் செய்யும் தம்பதிகளில் ஒருவர் தலித் பிரிவை சார்ந்தவராகவும், மற்றவர் தலித் அல்லாத பிரிவை சார்ந்தவராகவும் இருக்கும் பட்சத்தில் அவர்கள் இந்த உதவி தொகையை பெற தகுதியுடையவராவர்.
8 மணி நேரத்துக்கு மேல் வாடகைக் கார் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து: தமிழக அரசு உத்தரவு.
ஒரு நாளில் 8 மணி நேரத்துக்கு மேல் வாடகைக் கார் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் மோட்டார் வாகனச் சட்டத்தைக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஆதார் இணைப்பு : பான் கார்டு, மொபைலுக்கான காலக்கெடுவில் மாற்றமில்லை.
ஆதார் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: வங்கிக் கணக்கு, பான் கார்டு மற்றும் மொபைல் எண்களுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான உத்தரவுக்கு, நீதிமன்றம் எந்தத் தடையும் விதிக்கவில்லை. அந்த உத்தரவு சட்டப்பூர்வமானது; நடைமுறையில் உள்ளது. அதன்படி, வங்கிக் கணக்கு மற்றும் பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு, டிச., 31ல் முடிகிறது. மொபைல் எண்ணுடன், ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு, 2018, பிப்., 6ம் தேதியோடு முடிகிறது. இந்தக் காலக்கெடுவில் எந்த மாற்றமும் இல்லை
TNPSC: அறநிலையத்துறை தேர்வு அறிவிப்பு.
அறநிலையத்துறை உதவி கமிஷனர் பதவிக்கு, முதன்மை தேர்வு தேதியை, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.அறநிலையத்துறை உதவி கமிஷனர் பணியில், 3 காலியிடங்களுக்கு, முதன்மை எழுத்து தேர்வு, மார்ச், 10, 11ல் நடக்கிறது. தமிழ்நாடு சீர்திருத்தப் பள்ளி கண்காணிப்பு மற்றும் உளவியலாளர் பதவிக்கு, 8 இடங்களுக்கு, வரும், 19ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.
வியாழன், 7 டிசம்பர், 2017
வருவாய் வழி தேர்வு 'ஹால் டிக்கெட்' வெளியீடு.
தேசிய வருவாய் வழி தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்'களை, நாளை முதல் பதிவிறக்கம் செய்யலாம். எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு, 16ல் நடக்க உள்ளது.இதற்கு விண்ணப்பித்த மாணவர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழியே, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், தங்களின், 'ஹால் டிக்கெட்'களை பதிவிறக்கம் செய்யலாம்.
பாஸ்வேர்டு வைக்கும்போது செய்யக்கூடாத 7 விஷயங்கள்!
பாஸ்வேர்டு.. மொபைல், கணினி, மின்னஞ்சல், ஷாப்பிங் என நமது ஆல் இன் ஆல் டிஜிட்டல் உலகத்தின் காவலன். நமது இணையதள கணக்குகளை பாதுகாப்பதில் முக்கியப்பங்கு வகிப்பவை இவைதான்.
புதன், 6 டிசம்பர், 2017
போட்டி தேர்வு பயிற்சி மையங்களை அதிகரிக்க ஆசிரியர்கள் கோரிக்கை.
'அரசு பள்ளி மாணவர்களுக்கான, போட்டி தேர்வு பயிற்சி மையங்களை அதிகரிக்க வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்கள், 'ஜே.இ.இ., நீட்' போன்ற நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, எம்.பி.பி.எஸ்., படிக்கவும், தேசிய உயர் கல்வி நிறுவனத்தில் சேரவும், சிறப்பு பயிற்சி தரப்படுகிறது.
தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்: தலைமை ஆசிரியர்களுக்கு அதிகாரம்.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள இடங்களில், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில், 6,000க் கும் மேற்பட்ட, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் செயல்படுகின்றன.
தமிழக கல்வித்துறையில் நூலகர் மற்றும் உதவி நூலகர் பதவி TNPSC மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
தமிழக கல்வித்துறையில் நூலகர் மற்றும் உதவி நூலகர் பதவி TNPSC மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்............
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் M.PHIL விடுமுறைக்கால படிப்புக்கான காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் M.PHIL,விடுமுறைக்கால படிப்புக்கான காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது புவியியல்
மற்றும் வரலாறு பாடம் அங்குள்ளது எனவே நம் ஆசிரியர்கள் விண்ணப்பம் செய்யவும்.
செவ்வாய், 5 டிசம்பர், 2017
வங்கக் கடலில் வலுப்பெற்று வரும் புயல் சின்னம்! கடலோர மாவட்டங்களுக்கு, கன மழை எச்சரிக்கை!
வங்கக் கடலில் வலுப்பெற்று வரும் புயல் சின்னம், நாளை முதல், கடலோர பகுதிகளை நோக்கி நகரத் துவங்கும். அதனால், தமிழகம், ஆந்திர கடலோர மாவட்டங்களுக்கு, கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பிளஸ் 2 துணை தேர்வு மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு.
தமிழ் கட்டாயம்: பள்ளி கல்வியில் குழப்பம்.
பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு 7ம் தேதி தொடக்கம்.
தமிழகத்தில் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் இந்த ஆண்டுக்கான அரையாண்டுத் தேர்வு குறித்த அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்டது.
மீத தொகையை திருப்பி தர வேண்டும் - UGC.
கோர்ஸ் சேர்ந்து விலகி இருந்தால், வேறு ஒரு மாணவர் மூலம் அந்த சீட்டை
கல்லூரி நிரப்பி இருந்தால், உரிய தொகை மட்டும் எடுத்து கொண்டு, மீத
தொகையை திருப்பி தர வேண்டும் என்று UGC சர்குலர்
கல்லூரிகள், மாணவர்கள் விலக விரும்பினால், அவர்களது TC, மதிப்பெண் பட்டியல், ஜாதிசான்றிதழ்
ஆகியவற்றின் அசலை, மாணவர்களிடம் தராமல் நிறுத்தி வைக்க கூடாது.
பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கு தனியாக வழித்தடம் உருவாக்கி பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்வதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது
அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்.
1,100 ஆண்டுகளுக்கு முன்னரே நதி நீர் இணைப்பை செயல்படுத்திய பாண்டிய மன்னன்!
இந்திய சாம்ராஜ்யங்களில் வேறு எந்த ராஜ்ஜியத்திற்கும் இல்லாத நெடும் வரலாறு பாண்டியர்களுக்கு இருக்கிறது. இவர்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கினர் என வரலாற்று கூற்றுகள் மூலம் அறியப்படுகிறது. அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு தான் இந்த செயல். ஆம்! இன்று நவீன தொழில்நுட்பங்கள் இருந்தும் இந்தியாவில் நதி நீர் இணைப்பை செயல்படுத்த மத்திய அரசு தடுமாறும் நிலையில். 1,100 ஆண்டுகளுக்கு முன்னரே நதி நீர் இணைப்பை செயல்படுத்தி பஞ்சத்தை ஒழித்து நாட்டை செழிப்படைய செய்துள்ளனர் பாண்டியர்கள்...
திங்கள், 4 டிசம்பர், 2017
கடற்படை பணியில் சேர வேண்டுமா!
புதுடில்லி, 'கடற்படையில் சேர விரும்பும் இளைஞர்கள், பொதுச் சேவை
மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம்' என, கடற்படை அறிவித்து
உள்ளது.இந்திய கடற்படை வெளியிட்டு உள்ள அறிக்கை:நாடு முழுவதும்,
2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுச் சேவை மையங்கள் உள்ளன.
மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம்' என, கடற்படை அறிவித்து
உள்ளது.இந்திய கடற்படை வெளியிட்டு உள்ள அறிக்கை:நாடு முழுவதும்,
2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுச் சேவை மையங்கள் உள்ளன.
பான் - ஆதார் இணைக்க அவகாசம் மேலும் நீட்டிப்பு?
'பான் எனப்படும், வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை, ஆதார் அடையாள எண்ணுடன் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற, மத்திய அரசின் நிலைப்பாட்டை, உச்ச நீதிமன்றம் ஏற்றது.
ஞாயிறு, 3 டிசம்பர், 2017
இனி செல்போன் செயலி மூலமாகவே சிம்கார்டுடன் ஆதாரை இணைக்கலாம்.
செல்லிடப்பேசிகளில் பயன்படுத்தப்படும் சிம் கார்டுடன் - ஆதார் எண்
இணைப்பதற்கான நடைமுறையை எளிதாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அந்த வகையில், இணையதளம் வாயிலாகவோ அல்லது ஐவிஆர் எனப்படும் செல்போன் அழைப்பு மூலமாகவோ அல்லது செல்போன் செயலி மூலமாகவோ இருந்த இடத்தில் இருந்தே செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
DATALLY - கூகுள் நிறுவனத்தின் அடுத்த அசத்தல் App.
உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்துவரும் கூகுள், டேட்டாலி (Datally) என்ற புதிய அப்ளிகேஷனை வெளியிட்டுள்ளது.
ஆதார் எண்ணை இன்சூரன்ஸ் பாலிசியுடன் இணைக்காவிட்டால் என்னவாகும் தெரியுமா??
அனைத்து துறைகளும் தற்போது ஆதார் எண் பெறுவதை கட்டாயமாக்கி வருகிறது. முதலில் மத்திய, மாநில அரசு சேவைகளை பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து செல்போன் எண், இன்சூரன்ஸ் பாலிசி, வங்கி கணக்கு உள்ளிடவையுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இன்சூரன்ஸ் பாலிசியுடன் ஆதார் எண்ணை எஸ்எம்எஸ் மூலம் இணைக்க வேண்டாம் என எல்ஐசி நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை எச்சரித்தது.
இ - சேவை மையங்களில் மேலும் 300 சேவைகள்.
தமிழகத்தில், 'இ - சேவை' மையங்கள் வாயிலாக அளிக்கப்படும் சேவைகளில், மேலும், 300 சேவைகள் கூடுதலாக இடம்பெற உள்ளன,'' என, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர், மணிகண்டன் கூறினார்.
சனி, 2 டிசம்பர், 2017
NEET - 2018 நுழைவுத்தேர்வு ஓரிரு நாளில் அறிவிக்கை வெளியீடு.
இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் 2018 நுழைவுத் தேர்வுக்கான அறிவிக்கை ஓரிரு நாளில் வெளியாக உள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு பெறப்படும் என்று சொல்லியிருந்த நிலையில், இந்த ஆண்டு கடைசி நேரத்தில் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. இதனால் தமிழக மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். நீட் தேர்வில் இருந்து விலக்கு தமிழகத்திற்கு கிடைக்கும் என்று நம்பிக்கையோடு காத்திருந்த தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது.
பள்ளி, கல்லூரிகளில் கண்காட்சிக்கு தடை: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில், அரசின் சாதனை விளக்கக் கண்காட்சி, பொருட்காட்சி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
வெள்ளி, 1 டிசம்பர், 2017
கனமழை காரணமாக இன்று (01.12.2017) விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள் - 17.
- புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
- திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
- திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
December 2017 - Diary.
டிசம்பர் 2017 டைரி (மாறுதலுக்குட்பட்டது).
தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு உரியது.
3.12.17- உலக இயலாக் குழந்தைகள் தினம்,
உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான வழக்கில் இன்று மதுரை உயர்நீதி மன்றக் கிளையால் தடையாணை நீக்கம்.
பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)