சனி, 18 மார்ச், 2017

தமிழ் பொண்ணுங்க...

- சிரிச்சாலும் அழகு
- முறைச்சாலும் அழகு
- அன்பா பேசினாலும் அழகு
- அருவா தூக்கினாலும் அழகு
- நாற்று நடுவினாலும் அழகு
- கோலம் போட்டாலும் அழகு
- கோவிலில் சாமி கும்பிடுவதும் அழகு
- கோழி, சேவல்களை கொஞ்சுவதும் அழகு

- தாவணி அணிந்து நடப்பதும் அழகு
- தூரம் சென்று திரும்பி பார்ப்பதும் அழகு
- சமையல் செய்வதும் அழகு, அதை குழந்தைக்கு ஊட்டிவிடுவது அதைவிட அழகு.
- பாம்பை கையால் பிடிப்பது அழகு
- கரப்பான்பூச்சிக்கு பயப்படுவதும் அழகு.
- மண்ணை பார்த்து நடப்பதும் அழகு
- விண்ணை தொட செய்யும் விடாமுயற்சியும் அழகு
-வெட்கத்தில் சிவக்கும் கன்னங்களும் அழகு.
- கன்னங்களில் விழும் முடியை கோதுவதும் அழகு
- இரவின் குளிர் போல் கருப்பு நிற தேகமும் அழகு
- வேலை செய்யும்பொழுது வரும் வியர்வை துளியும் அழகு
- பேருந்து படிகளில் பயணிப்பதும் அழகு
- சீண்டும் ஆண்களை அடிப்பதும் அழகு
- மனதுக்கு பிடித்தவனை ரசிப்பதும் அழகு
- காதல் வந்ததும் சிணுங்குவதும் அழகு.
- கல்யாணம் முடிந்ததும் பெற்றோரை பிரிகையில் வரும் கண்ணீர் கூட அழகு
ஒட்டுமொத்தத்தில் எங்க தமிழ் பொண்ணுங்க அன்பையும் வீரத்தையும் காட்டுற கெத்தே தனிதான்...
#அனைத்து தமிழ் பெண்களுக்கும் சமர்ப்பணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக