வெள்ளி, 5 மே, 2017

எஸ்கேப்பாவது எப்படி??

அப்டிங்கற தலைப்புல நாம பாக்க போறது என்னன்னா??
••
கொஞ்சம் வந்து சப்பாத்தி தேச்சி தாங்கனு "
Wife சொன்னா...
முடியாதுனு டக்னு சொல்லக்கூடாது...
அப்புறம் டொக்னு மண்டையிலயே விழும்
இல்ல பாத்திரங்கள் பறக்கும்....
••
இந்த சிச்சுவேஷன எப்டி ஹேண்டில் பண்ணனும்னா...
••.
" நீ தேச்சு குடுமா... நான் சுடறேனு " சொல்லணும்..
அப்புறம் அங்க போயி கத்துகிட்ட மொத்த வித்தையையும் காட்டி சப்பாத்திய சுட்டு வெக்க கூடாது...
••
லாக் ஆகிடுவீங்க...
••
அதனால அந்த சப்பாத்தியை எவ்ளோ கேவலமா.., எவ்ளோ கருகலா சுட முடியுமோ... அப்டி சுட்டு எடுத்து போடணும்...
••
அத பாத்ததும் அவங்களே " நீங்க ஆணியே பிடுங்க வேணாம்னு " உங்கள கிச்சன்ல இருந்து தொரத்திடுவாங்க...
••
என்ன ஒண்ணு??
••
அந்த கருக்கலான சப்பாத்தி உங்க ப்ளேட்ல தான் விழும்...
••
அத மட்டும் கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணி சாப்பிட பழகிட்டா போதும்... இந்த நாள் மட்டுமல்ல எல்லா நாளும் இனிய நாளே....
••
முக்கியமான_ஒண்ணு
(ஆஹா ஓஹோன்னு புகழ்ந்துட்டே சாப்டகூடாது.. மனுசனுக்கு கருகல் சப்பாத்தி தான் பிடிக்கும்னு அவங்களும் சேந்தே கருகலா சுட்டு தந்துருவாங்க...)
என்ஜாய் திஸ் டே..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக