வெள்ளி, 2 ஜூன், 2017

இன்று பிற்பகல், 2:00 மணி முதல் பிளஸ் 2 விடைத்தாள் பதிவிறக்கம் செய்யலாம்.

'பிளஸ் 2 விடைத்தாள் நகல்கள், இன்று வெளியாகும்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 

தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிளஸ் 2 தேர்வில், விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள், இன்று பிற்பகல், 2:00 மணி முதல், scan.tndge.in என்ற இணையதளத்தில், தங்கள் பதிவு எண், பிறந்த தேதியை பயன்படுத்தி, விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்.
அதன்பின், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், அதே இணையதள முகவரியில், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, இரண்டு நகல்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். பூர்த்தி செய்த இரண்டு நகல்களையும், நாளை முதல், 6ம் தேதி மாலை, 6:00 மணி வரை, முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களில் உரிய கட்டணத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்; ஞாயிற்றுக் கிழமை விண்ணப்பிக்க முடியாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக