பிளஸ் 2 விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு, இன்று முதல், 6ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். பிளஸ் 2 தேர்வின் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களுக்கு, நேற்று இணையதளம் மூலம் விடைத்தாள் நகல் வழங்கப்பட்டது.
இதில், மதிப்பெண்கள், கூட்டு எண்ணிக்கையை, மாணவர்கள் ஆய்வு செய்யலாம். கூட்டலில் பிழை இருந்தால், மறு கூட்டலுக்கும், விடைகளுக்கு, சரியாக மதிப்பீடு வழங்கவில்லை என்றாலும், சில விடைகள் திருத்தப்படாமல் விடுபட்டிருந்தாலும், மறு மதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க விரும்புவோர். scan.tndge.in என்ற இணையதளத்தில், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்ய வேண்டும். பின், அதை இரு நகல்களாக எடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகத்தில், இன்று முதல், 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நாளை விடுமுறை என்பதால், விண்ணப்பிக்க முடியாது என, தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக