ஞாயிறு, 19 மார்ச், 2017

பழமொழி - remix

பழசு: பல் போனா சொல் போச்சு
புதுசு:‘cell’ போனா சொல் போச்சு😄

பழசு: காற்றுள்ள போதே தூற்றிக்கொள்!!
புதுசு: பேலன்ஸ் இருக்கும் போதே பேசிக்கொள்..😃

பழசு: இளங்கன்று பயமறியாது..!!
புதுசு: புது பேட்டரி சார்ஜ் இறங்காது..😃

பழசு: அகத்தின் அழகு முகத்தில் தெரியும்..!!
புதுசு: செல்போனின் அழகு சார்ஜ் நிற்பதில் தெரியும்😄

பழசு: நாய் வாலை நிமிர்த்த முடியாது..!!
புதுசு: நெட்வொர்க்கை திருத்த முடியாது..😃

பழசு: குடிகாரன் பேச்சு, விடிஞ்சா போச்சு..!
புதுசு: கஸ்டமர்கேர் பேச்சு, கட் பண்ணினா போச்சு..😃

பழசு: வெட்டு ஒண்ணு... துண்டு ரெண்டு..!!
புதுசு: செல்போன் ஒண்ணு.. சிம்மு ரெண்டு.😃

பழசு: ஆழம் தெரியாமல் காலை விடாதே..!!
புதுசு: 4G இல்லாத போனை வாங்காதே..😃

பழசு: தேனெடுத்தவன் புறங்கையை நக்காமல் இருக்க மாட்டான்..!!
புதுசு: போன எடுத்தவன், பொழுதுக்கும் நோண்டாமல் இருக்க மாட்டான்..😃

பழசு: பேராசை பெருநஷ்டம்..!!
புதுசு: பாஸ்வேர்ட் மறந்தா பெருங்கஷ்டம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக