2018-ம் ஆண்டிற்கான பொது தேர்வுக்கான கால அட்டவணையை அரசு வெளியிட்டுள்ளது.
வரும் 2018-ம் ஆண்டிற்கான 10, 11,12-ம் வகுப்புகளுக்கான பொது தேர்வு அட்டவணைஅரசு வெளியிட்டுள்ளது. இதன்படி 10-ம்வகுப்புக்கான பொது தேர்வு மார்ச் 16-ம் தேதி துவங்கி ஏப்ரல் மாதம் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது.10-ம் வகுப்பிற்கான தேர்வு நேரம் 2.30 மணி நேரம் ஆகும். 10ம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் மே 23-ம் தேதி வெளியிடப்படும்.
11-ம் வகுப்பிற்கான பொது தேர்வு மார்ச் 7-ம் தேதி துவங்கி ஏப்.,16-ம் தேதி முடிவடைகிறது. இதற்கான தேர்வு முடிவுகள் மே-30-ம் தேதி வெளியிடப்படும்.
12-ம் வகுப்பிற்கான பொது தேர்வு மார்ச் 1-ம் தேதி துவங்கப்பட்டு ஏப்., 6-ம் தேதி முடிவடைகிறது. இதற்கான தேர்வு முடிவுகள் மே-16-ம் தேதி வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக