திங்கள், 19 ஜூன், 2017

பி.எட்., படிப்புக்கு 21ல் விண்ணப்பம்.

தமிழகம் முழுவதும், 23 கல்வியியல் கல்லுாரிகளில், பி.எட்., பட்ட படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பம் வினியோகம், வரும், 21ல், துவங்குகிறது. 

தமிழகத்தில், ஏழு அரசு கல்லுாரிகள், 14 அரசு உதவி பெறும் கல்லுாரிகள் மற்றும் இரண்டு கல்வியியல் மேம்பாட்டு நிறுவனங்களில், பி.எட்., முதலாம் ஆண்டு சேர்க்கை, தமிழக அரசின் ஒற்றை சாளர கவுன்சிலிங்கில் நடத்தப்படுகிறது. சென்னை, லேடி வெலிங்டன் அரசு கல்வியியல் கல்லுாரி, கவுன்சிலிங்கை நடத்துகிறது. 

இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வினியோகம், வரும், 21ல், துவங்கி ஜூன், 30 வரை நடக்கிறது. விண்ணப்பங்களை, 13 கல்லுாரிகளில் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பம் கிடைக்கும் இடம் உள்ளிட்ட விபரங்களை,  www.tndce.in,www.ladywillingdoniase.com என்ற இணைய தளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

'பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஜூலை, 7க்குள், லேடி வெலிங்டன் கல்லுாரிக்கு அனுப்ப வேண்டும்' என, கல்லுாரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. ஆனாலும், 
நேற்று மாலை வரை, இரண்டு இணையதளங்களிலும், பி.எட்., மாணவர் சேர்க்கை விபரங்கள் பதிவேற்றம் செய்யப்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக