வியாழன், 15 ஜூன், 2017

'நீட்' தேர்வு விடைக்குறிப்பு இன்று வெளியீடு



'நீட்' தேர்வு முடிவை வெளியிட, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து, விடைக்குறிப்புகளை, சி.பி.எஸ்.இ., இன்று(ஜூன், 15) வெளியிடுகிறது.

மருத்துவ படிப்பில் சேர்வதற்கான, 'நீட்' நுழைவு தேர்வு, மே, 7ல் நடத்தப்பட்டது. தேர்வு நடத்தும் முறை, தேர்வின் வினாத்தாள் குறித்து, வழக்குகள் தொடரப்பட்டன. அதனால், அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,க்கு சிக்கல் ஏற்பட்டது.


இந்நிலையில், தேர்வு முடிவுகளை வெளியிட்டு, மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து, விடைத்தாள் நகல், நேற்று முன்தினம், சி.பி.எஸ்.இ., இணையதளத்தில் வெளியானது. இந்நிலையில், தேர்வுக்கான விடைக்குறிப்பு, இன்று வெளியாகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக