அரசு சட்டக் கல்லுாரி களில், மூன்றாண்டு பட்டப்படிப்புக்கான, விண்ணப்பம் விற்பனை நாளை துவங்குகிறது. தமிழகத்தில் உள்ள, ஒன்பது சட்ட கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஐந்தாண்டு பட்டப்படிப்புக்கு, ஜூன், 2ல் விண்ணப்பம் வினியோகம் துவங்கியது.
மூன்றாண்டு பட்டப்படிப்புக்கு, நாளை முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன. மூன்றாண்டு படிப்புக்கு, பி.ஏ., - பி.எஸ்சி., - பி.இ., - எம்.பி.பி.எஸ்., என, ஏதாவது ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பங்களை, அந்தந்த அரசு சட்டக் கல்லுாரிகளிலும், சென்னை அடையாறில் உள்ள, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலை பதிவாளர் அலுவலகத்திலும் பெறலாம். ஜூலை, 17 வரை விண்ணப்பங்களை பெறலாம்; பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும் அன்றே கடைசி நாள் என, சட்ட பல்கலை தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக