ராணுவத்தில் சோல்ஜர் டெக்னிக்கல், சோல்ஜர் டெக்னிக்கல் கம்யூனிகேஷன் உள்ளிட்ட ஏழு வகையான பணியிடங்களுக்கு, ஆட்கள் சேர்ப்பு முகாம், திருவண்ணாமலையில், ஜூலை, 19 முதல், 25 வரை நடக்க உள்ளது. இதில், திருவண்ணாமலை, வேலுார், சென்னை, கடலுார், திருவள்ளூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த, தகுதி வாய்ந்த நபர்கள் பங்கேற்கலாம்.
முகாமில் பங்கேற்க விரும்புவோர், www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில், ஜூன், 4 முதல் ஜூலை, 3 வரை விண்ணப்பிக்கலாம் என, ராணுவ ஆட்கள் சேர்ப்பு மண்டல அலுவலகம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக