'பள்ளிகளில், வார வேலை நாட்களான, ஐந்து நாட்களிலும், இனி இறை வணக்க கூட்டம் நடத்த வேண்டும்' என, அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளி நாட்களில், தினமும் இறை வணக்க கூட்டம், பள்ளி மைதானத்தில் நடந்து வந்தது. 2011ல், இந்த முறை ரத்து செய்யப்பட்டு, திங்கட்கிழமை மட்டும், கூட்டு பிரார்த்தனை நடத்தப்படும்; மற்ற நாட்களில், வகுப்பறைகளில், பிரார்த்தனை கூட்டம் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மாணவர்களிடம் தேசப்பற்று, தேசியக் கொடி மீதான மரியாதை, பொது அறிவு வளர்த்தல் போன்றவற்றை ஏற்படுத்த, தினமும் கூட்டு பிரார்த்தனை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து, நாளை பள்ளிகள் திறக்கப்பட்டதும், இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக