கோடை விடுமுறை முடிந்து, நாளை(ஜூன் 7) பள்ளிகள் திறக்கப்படுகின்றன. முதல் நாளிலேயே, இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு தொடக்கப் பள்ளிகளில், ஏப்., 22; உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், ஏப்., 14 முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஜூன், 1ல் பள்ளிகள் திறப்பதாகஅறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கோடை வெயில் வாட்டியதால், விடுமுறை காலம், ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து, இன்றுடன் கோடை விடுமுறை முடிவுக்கு வருகிறது; நாளை பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில், மதிய உணவு சாப்பிடும் மாணவ, மாணவியருக்கு, நாளையே இலவச பாடப்புத்தகம் மற்றும் நோட்டுகள் வழங்க, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக