செவ்வாய், 18 ஜூலை, 2017

பி.எட் கலந்தாய்வில் 157 பேருக்கு சீட் ஒதுக்கீடு.

சென்னை: தமிழகத்தில் 2017-18 கல்வியாண்டுக்கான பி.எட் மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு நேற்று தொடங்கியது.

அதில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், எஸ்டி பிரிவினருக்கு நேற்று கலந்தாய்வு நடந்தது. அதில் 21 கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 1,777 இடங்களுக்கு 5,726 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 880 பேர் மாணவர்கள், 4,846 பேர் மாணவிகள். அதில் 81 பேர் இன்ஜினியரிங் பட்டதாரிகள். முதல்கட்ட கலந்தாய்வுக்கு 2,996 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் கலந்தாய்வின் முதல் நாளான நேற்று 157 பேருக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கி வரும் 22ம் தேதி வரை நடக்கிறது. அதில் பாடத்திட்டம் வாரியாகவும், இன்ஜினியரிங் மாணவர்களுக்கு 19ம் தேதியும் கலந்தாய்வு நடக்கிறது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக