சனி, 1 ஜூலை, 2017

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லையா? கவலை வேண்டாம்!

புது தில்லி: நிரந்தர கணக்கு எண் எனப்படும் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது ஜூலை 1ம் தேதி முதல் கட்டாயம் என்று மத்திய நேரடி வரித் துறை அறிவித்துள்ளது.

இதையடுத்து, பொதுமக்கள் பலரும், தங்களது பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். மேலும் ஜூலை 1ம் தேதிக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து விட வேண்டும், இல்லை என்றால் சிக்கல் என்று அச்சமடைந்துள்ளனர்.


ஆனால், உண்மை என்னவென்றால், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது ஜூலை 1ம் தேதி முதல் கட்டாயம் என்றுதான் மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் அறிவித்துள்ளதே தவிர, இதற்கு எந்த காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

இது குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய தகவல்கள் 

1 ஒருவரிடம் ஆதார் மற்றும் எண் எண்கள் இருந்தால், அதனை இணைப்பது ஜூலை 1ம் தேதி முதல் கட்டாயம். ஆனால், பாண் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு இதுவரை எந்த காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

2. இது குறித்த அரசாணையில், பான் எண் வைத்திருப்போர், அதனுடன், அவரது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், இந்த தேதிக்குள், இந்த தேதிக்கு முன் என்று எந்த தேதியும் குறிப்பிடப்படவில்லை.

3. பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால், அந்த பான் எண் செல்லாததாக மாற்றப்பட்டுவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்த நாளில் இருந்து செல்லாததாக மாற்றப்படும் என்று தெரிவிக்கப்படவில்லை.

4. இதன் மூலம், ஜூலை 1ம் தேதிக்குள் உங்கள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால், நிச்சயம் அது செல்லாததாக மாறாது என்பது விளங்குகிறது. இது குறித்த அரசாணையில், இணைப்பது கட்டாயம் என்பது மட்டுமே கூறப்பட்டுள்ளது. எனவே, இணைப்பதற்கான காலக்கெடு பிறகுதான் அறிவிக்கப்படும்.

மேலும் உங்கள் வேசதிக்காக: பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க புதிய வசதி
5. ஒரு வேளை ஒருவரிடம் பான் எண் இருந்து, ஆதார் எண் இல்லை என்றால், அவர் ஆதார் எண் இணைப்பதில் இருந்து விலக்கு பெறுவார். உச்ச நீதிமன்றத்தில் உத்தரவு இதனை தெரிவித்துள்ளது. ஆனாலும் இது ஒரு தாற்காலிக தீர்வுதான். ஆதார் எண் பெறாதவர்கள் உடனடியாக ஆதார் எண் பெற்றுக் கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது.

மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டிருக்கும் அரசாணையின்படி, ஜூலை 1ம் தேதி முதல் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமே தவிர, ஜூலை 1ம் தேதிக்குள் இணைப்பது என்பது காலக்கெடு அல்ல. எனவே, பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க அவசரமில்லாமல் நிதானமாகவே செய்யலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக