ஞாயிறு, 16 ஜூலை, 2017

காட்டில் தவம் செய்து கொண்டிருந்த முனிவரிடம் ஒரு பக்தர் சென்று ...

காட்டில் தவம் செய்து கொண்டிருந்த முனிவரிடம் ஒரு பக்தர் சென்று கேட்டாராம், “ஸ்வாமி! நான் நினைத்ததெல்லாம் நடக்க வேண்டும். என்னை யாரும் மிஞ்சக்கூடாத அளவுக்குப் பொருளும் புகழும் சேரவேண்டும். அதற்கு நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார். அதற்கு அத்துறவி, “நான் செத்தபிறகு வா! சொல்கிறேன்” என்று கூறி அனுப்பினார்.


ஒரு மாதம் கழித்து துறவியைக் காண மீண்டும் வந்தார் பக்தர். ஆஹா! இன்னும் இவர் உயிரோடிருக்கிறாரே என்று திரும்பிச் சென்றுவிட்டார். அதற்குப் பிறகு இரண்டு மூன்றுமுறை வந்து பார்த்த போதும் துறவி உயிரோடுதான் இருந்தார். அதைப் பார்த்த பக்தர் கோபமடைந்து துறவியிடம் சென்று கேட்டார். நான் என் கோரிக்கைகளை உங்கள்முன் வைத்த போது நீங்கள் என்னிடம் ‘‘நான் செத்தபிறகு வா! சொல்கிறேன் என்று கூறினீர்கள். ஆனால் மாதங்கள் பலகடந்தும் நீங்களும் சாகவில்லை, நான் கேட்ட்தும் நினைத்ததும் நடக்கவில்லை” என்றார்.

உடனே, துறவி சிரித்துக்கொண்டே கூறினார். “பக்தா! நான் செத்தபிறகு வா! சொல்கிறேன் என்று உன்னிடம் கூறியதை நீ தவறாகப் புரிந்து கொண்டு எனக்கே சாவு வரவேண்டுமென நினைக்கிறாய். நான் சொன்னது உன்னிடம் உள்ள ‘நான்’ எனும் அகம்பாவம் சாகவேண்டுமென்பதே!” என்று கூறி, நான், எனது என்ற அகம்பாவத்தை இனியாவது விட்டொழி. அப்போதுதான் உனக்கு எப்போது என்னென்ன கொடுப்பது என்பதை ஆண்டவன் தீர்மானிப்பான்” என்று அறிவுறை கூறி அனுப்பிவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக