ஞாயிறு, 2 ஜூலை, 2017

ஓய்வூதிய அலுவலகம் இடமாற்றம்.

சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் செயல்பட்டு வரும் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம், நந்தனத்திற்கு இடம் மாற்றம் செய்யப்படுகிறது.
கருவூல கணக்குத்துறை கட்டுப்பாட்டில், ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம், சென்னை, கல்லுாரி சாலையில், டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள, சம்பத் மாளிகையில் இயங்கி வருகிறது. 


ஜூலை 3 முதல், நந்தனம், அண்ணாசாலை, கால்நடை மருத்துவமனை வளாகத்தில் உள்ள, ஒருங்கிணைந்த நிதித்துறை அலுவலக கட்டடத்தின் தரைதளத்தில் இயங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக