புதன், 12 ஜூலை, 2017

பான் கார்டுடன் ஆதார் எண்ணை எஸ்.எம்.எஸ் மூலம் இணைக்கலாம்: மத்திய அரசு அறிவிப்பு.

பான் கார்டுடன் ஆதார் எண்ணை எஸ்.எம்.எஸ் மூலமும் இணைக்கலாம் என்று மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவது நிகழும் பணப்பரிமாற்றங்களை ஒழுங்கு செய்ய பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதற்காக பல்வேறு வழிமுறைகளும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் பான் கார்டுடன் ஆதார் எண்ணை எஸ்.எம்.எஸ் மூலமும் இணைக்கலாம் என்று மத்திய அரசு இன்று புதிய அறிவிப்பு ஒற்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி 567678 மற்றும் 56161 ஆகிய இரு எண்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புவதன் மூலம் பயனாளர்கள். தங்கள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.

அதற்கு முதலில் UIDAI என்று டைப் செய்து இடைவெளி விட்டு முதலில் முதலில் 12 இலக்க ஆதார் எண்ணை டைப் செய்து, மீண்டும் ஒரு இடைவெளி விட்டு பின்னர் 10 இலக்க பான் எண்ணை டைப் செய்து மேலே குறிப்பிட்ட எண்களில் ஏதாவது ஒன்றுக்கு அனுப்பலாம்.

இவ்வாறு மத்திய அரசின் நிதித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக