சென்னை:தமிழகத்தில், அடுத்த மாதம், 6ல், நடக்கவிருந்த, ஹிந்தி தேர்வுகள், 20ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் ஹிந்தி பிரசார சபா மூலம், நாடு முழுவதும் ஹிந்தி மொழி கற்பிக்கப்படுகிறது.
தமிழகத்தில், சென்னை தி.நகரிலுள்ள தென் இந்திய ஹிந்தி பிரசார சபா சார்பில், பல்வேறு மையங்கள் மூலம், ஹிந்தி கற்பிக்கப்பட்டு, தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அடுத்த மாதம், 6ல், ஹிந்தியில் பிராத்மிக், மத்யமா, ராஷ்டிரபா ஆகிய தேர்வுகள் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக, மாணவர்கள் தயாராகி வருகின்றனர். ஆனால், இந்தத் தேர்வுகள், ஆக., 20க்கு தள்ளி வைக்கப்பட்டதாக, ஹிந்தி பிரசார சபா அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை, சபாவின் பொதுச்செயலர், ஜி.வி.கிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக