சனி, 16 செப்டம்பர், 2017

நேரான மரங்களே முதலில் வெட்டப் படும் - சாணக்கியர் சொல்.


நேர்மையான மனிதர்களே முதலில் வீழ்த்தப் படுகிறார்கள்.

கல்வித்துறை செயலராக திரு. உதயசந்திரன். இ.ஆ.ப அவர்கள் பொறுப்பேற்ற போதே கல்வித்துறை இனி மெல்ல முன்னேற்றம் பெறும் என்ற நம்பிக்கைக் கீற்று கல்விப் பணியை நேசிக்கும் ஒவ்வொரு நல்லாசிரியரின் மனதிலும் எழுந்தது.

தொடர்ந்து,


அவர் மேற்கொண்ட மதிப்பெண் முறை மாற்றம் போன்ற முயற்சிகள்,
ஆசிரியர்களோடு அவர் மேற்கொண்ட சந்திப்புகள்,  கூறிய ஆலோசனைகள், வழிகாட்டல்கள் இதுவரை ஆசிரியர்களை அடிமைகள் போல் நடத்திய அதிகாரிகளிடம் இருந்து முற்றிலும் வேறுபடுத்திக் காட்டியது.

இனி கல்வித்துறை நல்லதொரு பெரும் மாற்றத்திற்கு தயாராகும். அரசுப் பள்ளிகள், அதன் மாணவர்களின் நிலை  ஏற்றம்
பெறும் என்ற மகிழ்வான நிலையில் தான் இப்போது அவர் துறை மாற்றம் செய்யப்படலாம் என்ற இந்த துன்பமான செய்தி நம் காதுகளில் விழுகிறது.

இந்த செய்தி உண்மையாக இருக்கக் கூடாது. இருப்பின் இழப்பு அவருக்கல்ல. வெகு நிச்சயமாய் இது கல்விப் பணியை நேசிக்கும் ஒவ்வொரு ஆசிரியருக்குமான இழப்பு ஆகும். அரசுப் பள்ளிகளை நம்பி இருக்கும் சமுதாயத்தின் கடைக்கோடி மாணவருக்குமான இழப்புமாகும்.

இந்த செய்தி பொய்யாக போகவேண்டும் என்பதே நல்லாசிரியர் ஒவ்வொருவரின் விருப்பமும்,  வேண்டுதலும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக