சனி, 16 செப்டம்பர், 2017

இன்று பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு.

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1058 விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் புதிய விரிவுரையாளர்களை நியமிக்க போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இதன்படி, இன்று போட்டித் தேர்வு நடக்கிறது.

இந்த தேர்வு எழுத தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 70 ஆயிரத்து 363 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்காக 84 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 31 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக