ஞாயிறு, 16 ஜூலை, 2017

கற்றுக் கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்றுதான் கவனித்திருப்பது.

கற்றுக் கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்றுதான்

கவனித்திருப்பது.

கவனி.   உன் மனதில் ஓடும் ஒவ்வொரு எண்ணத்தையும் கூர்ந்து கவனி.  உன்
ஒவ்வொரு  செயலையும், ஒவ்வொரு அசைவையும்  தொடர்ந்து கவனித்துப் பார்.

நடக்கும்போதும், பேசும் போதும், உணவு உண்ணும் போதும், குளிக்கும் போதும், உன் ஒவ்வொரு அசைவையும் கவனி. அனைத்தையும் தொடர்ந்து கவனித்துக்கொண்டே இரு.


இயந்திரத் தனமாக சாப்பிடாதே. வயிற்றை நிரப்புவதில் குறியாய் இருக்காதே, கவனத்துடன் மெதுவாக மென்று விழுங்கு. ஒவ்வொரு மெல்லுகின்ற அசைவும் நிறைவைத் தரும். சாதரண உணவிலும் அபாரமான சுவை கூடிவிடும்.

தென்றலை, சூரியனின் கதிர்களை உணர்ந்து பார். அந்த உணர்வுகளை வார்த்தைகளைக் கொண்டு ஆராய்ச்சி செய்யாதே. வாழ்க்கைக்குள் நகர்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு கணத்தையும் தொடர்ந்து  கவனித்திரு.

மறுபடி மறுபடி மறந்து விலகி விடுவாய். மறதி மிக இயல்பானது. வருந்தாதே. ஆனால் மறந்துவிட்டோம் என்று உணர்ந்த கணத்தில் மறுபடியும் கவனி.

மறந்து போனதால் கெட்டுப்போனது ஒன்றுமில்லை. எக்காரணம் கொண்டும் அடடே மறுபடியும் மறந்துவிட்டேனே , எனக்கு இது வராது என்றும் குற்ற உணர்வு கொள்ளாதே.

மறப்பு என்பது பலகோடி வருடங்களாக தொடர்ந்து வரும் பழக்கம். எனவே ஒரு சில கணங்களாவது விழிப்போடு இருக்க முடியுமானால் இதுவே எதிர்பார்த்ததை விட அதிகம்தான்..  தொடர்ந்து கவனி.

கவனிக்கும் போது தெளிவு பிறக்கும்.  மேலும்மேலும் கவனிப்பதற்கே மனதின் சக்தியை மடைமாற்றம் செய்யும்போது, எண்ணங்கள் பெருகுவதற்கான ஊட்டத்தை இழக்கின்றது. குழப்பம் ஓய்கிறது.

எண்ணங்கள் ஓட்டம் மெலிந்து போய், குறைய ஆரம்பித்து விடுகின்றது. தெளிவும் பொலிவும் பிறக்கின்றது.. மனம் பிரதிபலிக்கும் கண்ணாடியாக மாறத் தொடங்கி விடுகின்றது. ஆனந்தம் மலர்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக