ஞாயிறு, 16 ஜூலை, 2017

ஆபிரகாம் லிங்கன் ஜனாதிபதி ஆவதற்கு முன்பு அரசு அதிகாரி ஒருவர், சில அதிகாரிகள் முன்னிலையில் அவரை குரங்கு மூஞ்சி என்று திட்டி விட்டார்.

ஆபிரகாம் லிங்கன் ஜனாதிபதி ஆவதற்கு முன்பு அரசு அதிகாரி ஒருவர், சில அதிகாரிகள் முன்னிலையில் அவரை குரங்கு மூஞ்சி என்று திட்டி விட்டார்.
அப்போது அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாத ஆபிரகாம் லிங்கன் ஜனாதிபதியான பிறகு தன்னைத் திட்டியவரைக் கடுமையாகத் தண்டிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு மாறாக அவருக்கு பல நல்ல பொறுப்புகளைக் கொடுத்தார் லிங்கன்.


இதற்கு என்ன காரணம் என்று கேட்க, அவர் என்னை அவமானப்படுத்தியதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவே இல்லை. எனினும் அது என்னுள் காயத்தை ஏற்படுத்தியது. அந்தக் காயத்தை ஆற்ற என்னை மேலும் தகுதியுள்ளவனாக உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன். அதற்கான முயற்சியைத் தொடங்கினேன்.

உழைத்தேன். அந்த முயற்சியாலும், உழைப்பாலும் இந்தப் பதவியை இப்போது அடைந்துள்ளேன். இந்தப் பதவியை அடைய அவரும் ஒரு காரணம். என் நன்றிக்கடனை அவருக்குச் செலுத்த ஆசைப்பட்டு இந்தக் கூடுதல் பதவிகளை வழங்கினேன் என்றார்.

அவமதித்தவர்களைப் பழிவாங்கத் துடிப்பது அறிவீனம். அவமதித்தவரும் வருந்தும்படியாக வளர்வதே அங்கீகாரம். அவமானத்தை முன்னேற்றத்துக்கான மூலதனமாக்குங்கள். 'மனிதன் தனது மனநிலைகளை மாற்றிக் கொள்வதின் மூலமாகத் தனது வாழ்க்கையை வளமாக மாற்றிக் கொள்ள இயலும்.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக