ஞாயிறு, 2 ஜூலை, 2017

அரசு ஊழியர் ஊதிய உயர்வு ஆய்வு குழு காலம் நீட்டிப்பு.

மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதிய விகிதங்களை மாற்றி அமைப்பதற்கான பரிந்துரைகளை அளிக்க, தமிழக அரசு நியமித்த குழுவின் பதவி காலத்தை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

தமிழக அரசு சார்பில், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்களுக்கு, ஊதிய விகிதங்களை மாற்றுவதற்கான பரிந்துரைகள் அளிக்க, 'அலுவலர் குழு' பிப்ரவரியில் அமைக்கப்பட்டது. 

குழுவில், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலர், உள்துறை முதன்மைச் செயலர், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறைச் செயலர், உறுப்பினர் செயலராக உமாநாத் ஆகியோர் இடம் பெற்றனர்.

இக்குழுவினர், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளை சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை கேட்டனர். அறிக்கையை, ஜூன், 30க்குள் அளிக்க வேண்டும் என, முதல்வர் உத்தரவிட்டிருந்தார். 


அதற்கான காலம், நேற்றுடன் நிறைவு பெற்றது. இன்னமும் பணி நிறைவு பெறாததால், குழுவின் பதவி காலத்தை, மேலும் மூன்று மாதங்களுக்கு, அதாவது, செப்டம்பர், 30 வரை நீட்டிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக