ஞாயிறு, 16 ஜூலை, 2017

சித்த வைத்தியம் 🌿 60 நொடிகளில் உடலில் ஏற்படும் அதிசயம்...!

ஒவ்வொரு உடல் உறுப்புகளின் இயக்கத்துடன் தொடர்புடைய கை விரல்களில் அழுத்தம் கொடுப்பதால், உடலில் ஏற்படும் குறைபாட்டு பிரச்சனைகளை குணப்படுத்தலாம்.

கட்டைவிரல்

கட்டை விரல் நுரையீரல் மற்றும் இதயத்துடன் தொடர்புடையது. எனவே கட்டை விரலில் 60 நிமிடம் அழுத்தம் கொடுத்தால், இதயம் மற்றும் நுரையீரலின் ஆரோக்கியம் மேம்படும்.

ஆள்காட்டிவிரல்

ஆள்காட்டி விரல் வயிறு மற்றும் பெருங்குடலுடன் தொடர்புடையது. எனவே ஆள்காட்டி விரலில் 60 நொடிகள் அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால், செரிமானம் சீராக்கப்பட்டு, வயிற்றுவலி பிரச்சனைகள் தடுக்கப்படும்.

நடுவிரல்

நடுவிரல் சிறுகுடல், இதயம், ரத்தம், சுவாசக் குழாய் போன்ற பகுதிகளோடு தொடர்புடையது. எனவே இந்த விரலில் ஒரு நிமிடம் அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்வதால், குமட்டல், தூக்கமின்மை, சோர்வு, மயக்கம், தலைச்சுற்றல் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.

மோதிரவிரல்

மோதிரவிரல் ஒருவருடைய உணர்ச்சி, மனநிலையுடன் தொடர்புடையது. எனவே மோதிர விரலில் அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்தால், மன அழுத்தப் பிரச்சனைகள் ஏற்படாது.

சுண்டுவிரல்

சுண்டுவிரல் சிருநீரகத்துடன் தொடர்புடையது. எனவே இந்த விரலில் அழுத்தம் கொடுப்பதால், கழுத்துவலி, தலைவலி போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக உள்ளது.

உள்ளங்கை

உள்ளங்கை நரம்பு மண்டலத்துடன் தொடர்புடையது. எனவே உள்ளங்கையில் 60 நொடிகள் அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால், மனநிலை மேம்படுவதுடன், ரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது.

வாழ்க தமிழ், வளர்க தமிழ்... வெல்க சித்தர்கள் நுண்ணறிவு!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக