ஞாயிறு, 9 ஜூலை, 2017

முதுநிலை படிப்புக்கான 'கேட்' தேர்வு அறிவிப்பு.

முதுநிலை படிப்பில் சேருவதற்கான, 'கேட்' நுழைவு தேர்வு, பிப்., ௩ முதல், ௧௧ வரை நடக்கும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது. தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்வியில், எம்.இ., - எம்.டெக்., - எம்.எஸ்சி., - எம்.எஸ்., போன்ற முதுநிலை பட்டப்படிப்பில் சேர, 'கேட்' என்ற நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே, மத்திய அரசின் சில பொதுத்துறை நிறுவனங்கள், பணிக்கு ஆட்களை நியமிக்கின்றன. நடப்பு கல்வி ஆண்டுக்கான, 'கேட்' தேர்வு, ௨௦௧௮ பிப்., ௩ முதல், ௧௧ வரை நடக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வை, கவுகாத்தி, ஐ.ஐ.டி., நடத்த உள்ளது. பி.இ., - பி.டெக்., பி.எஸ்.சி., - ஆராய்ச்சி, எம்.இ., - எம்.டெக்., போன்ற படிப்பு முடித்தோர், இந்த தேர்வை எழுதலாம். செப்., ௧ல், விண்ணப்ப பதிவு துவங்குகிறது. கூடுதல் தகவல்களை, www.gate.iitg.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக