சனி, 1 ஜூலை, 2017

சட்ட படிப்பு விண்ணப்பிக்க அவகாசம்.

அம்பேத்கர் சட்டப் பல்கலையின் நேரடி கட்டுப்பாட்டில், சென்னையில் செயல்படும் சீர்மிகு சட்ட பள்ளியில், ஐந்தாண்டு ஒருங்கிணைந்த, எல்.எல்.பி., மற்றும் மூன்றாண்டு, எல்.எல்.பி., படிப்புகள் நடத்தப்படுகின்றன. இதில், ஐந்தாண்டு படிப்புக்கு விண்ணப்ப பதிவுகள் முடிந்து விட்டன.

மூன்றாண்டு படிப்புக்கு, ஜூன், 31ல் விண்ணப்ப பதிவு துவங்கி, நேற்று முடிவதாக இருந்தது. தற்போது, ஜூலை, 14 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை, பல்கலை பதிவாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக