'மொழி மற்றும் மத சிறுபான்மை கல்லுாரிகளில், சிறுபான்மை மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்' என, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மருத்துவ மாணவர் சேர்க்கையில், 'நீட்' தேர்வு சர்ச்சைக்கு முடிவு கிடைத்துள்ளது. தற்போது, 'நீட்' தேர்வுக்கான, அகில இந்திய அளவிலான தரவரிசை பட்டியலுக்காக, கல்லுாரிகள் காத்திருக்கின்றன. அதேநேரம், அகில இந்திய மருத்துவ இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, ஆன்லைன் பதிவு, வரும், 3ல், துவங்குகிறது.
இந்நிலையில், மாநில அரசுகளுக்கு, மத்திய மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், 'சுயநிதி பல்கலை, சிறுபான்மை பல்கலைகளின், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களையும், கவுன்சிலிங்கில் சேர்க்க வேண்டும். அதேபோல, இந்த சிறுபான்மை கல்லுாரிகளில், சம்பந்தப்பட்ட சிறுபான்மை இன மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும்' என, தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக