புதன், 17 மே, 2017

இன்ஜி., படிப்பில் 2ம் ஆண்டு 'அட்மிஷன்' : ஆன்லைன் பதிவு இன்று துவக்கம்.

அண்ணா பல்கலை யின் இணைப்பில் உள்ள, இன்ஜி., கல்லுாரிகளில், நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, ஆன்லைன் பதிவு, இன்று துவங்குகிறது.

பி.எஸ்சி., மற்றும்டிப்ளமோ இன்ஜினியரிங் முடித்தோர், அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, அரசு மற்றும் தனியார் இன்ஜி., கல்லுாரிகளில், நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்க்கப்படுவர்.
 
இந்த ஆண்டுக்கான, இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்குக்கு, இன்று முதல், பதிவு துவங்குகிறது. 
 
காரைக்குடி அழகப்ப செட்டியார் இன்ஜி., கல்லுாரியின், www.accet.edu.in என்ற இணைய தளத்தில், ஜூன் 14, மாலை, 5:00 மணி வரை, ஆன்லைனில் பதிவுசெய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, பிரதி எடுத்து, அதை, 'மாணவர் சேர்க்கை செயலர், பி.இ., இரண்டாம் ஆண்டு, அழகப்பா செட்டியார் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி, காரைக்குடி' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.மேலும் விபரங்களுக்கு, 04565 - 230 801 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக