புதன், 12 ஜூலை, 2017

மொபைல் போன்களில் ஜி.பி.எஸ்., கட்டாயம்!!

அடுத்த ஆண்டு ஜனவரி முதல், அனைத்து மொபைல் போன்களிலும் ஜி.பி.எஸ்., வசதி  கட்டாயம்.

இடம் பெற வேண்டும் என மத்திய தொலைதொடர்பு துறை கண்டிப்புடன் கூறியுள்ளது.

2016ல் வெளியான அறிவிப்பு

மத்திய தொலைதொடர்பு துறை கடந்த, 2016ம் ஆண்டு ஏப்., 22ம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, 2017 ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அனைத்து மொபைல் போன்களிலும், 'பேனிக் பட்டன்' என்ற அபாய கால எச்சரிக்கை பொத்தான் வசதி இருக்க வேண்டும்; 2018 ம் ஆண்டு ஜனவரி, 1ம் தேதி முதல் அனைத்து மொபைல் போன்களிலும் ஜி.பி.எஸ்., வசதி இருக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

அதன்படி கடந்த மார்ச் மாதம் முதல் தயாரிக்கப்படும் மொபைல் போன்களில், 'பேனிக் பட்டன்' இடம் பெற்றுள்ளது. ஆனால், ஜி.பி.எஸ்., வசதியை ஏற்படுத்தினால், மொபைல் போன்களின் விலையை, 30 சதவீதம் வரை உயர்த்த வேண்டி இருக்கும் என, மொபைல் போன் உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்து இருந்தன.

பெண்கள் பாதுகாப்பு

ஆனால், இந்த கருத்தை மத்திய தொலை தொடர்பு துறை ஏற்றுக்கொள்ளவில்லை. 2018 ம் ஆண்டு ஜனவரி, 1ம் தேதி முதல் அனைத்து மொபைல் போன்களிலும் ஜி.பி.எஸ்., வசதி இருக்க வேண்டும். பெண்கள் பாதுகாப்புக்கு இது மிகவும் அவசியம். அபாய காலத்தில், சம்பந்தப்பட்டவரின் இருப்பிடத்தை உடனடியாக கண்டுபிடிக்க முடியும் என கண்டிப்புடன் கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக