புதன், 12 ஜூலை, 2017

சிறப்பு பேனா மூலம் அடையாள மை!!



தேர்தலின் போது வாக்களித்தவர்களின் விரலில் அடையாள மை  வைப்பதற்காக  தேர்தல் ஆணையம் சிறப்பு பேனாவை தயார் செய்து வருகிறது.

ஆரம்பத்தில், தேர்தல் வாக்குச் சீட்டுகளை பயன்படுத்தி நடத்தப்பட்டன.
அதன்பின், பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த இருமுறைகளிலும் தேர்தலில் ஓட்டு போட்டவர்களை அடையாளம் காண வாக்காளர்களின் கையில் அழியாத மை வைக்கும் முறை நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில், தேர்தலின் போது வாக்களித்தவர்களின் விரலில் அடையாள மை வைப்பதற்காக தேர்தல் ஆணையம் சிறப்பு பேனாவை தயார் செய்து வருகிறது.

மைசூரில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான பெயிண்ட் மற்றும் வார்னிஷ் தொழிற்சாலையில் இந்த தயாரிப்பு பணி நடைபெறுகிறது.

அடையாள மை பாட்டில் தயாரிப்பு செலவைக் காட்டிலும், இந்த சிறப்பு பேனாவின் தயாரிப்புச் செலவு பாதி தான் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், ஒரு பே‌‌னாவின் மூலம் ஆயிரம் வாக்காளர்களின் விரல்களின் அடையாள மை வைக்க முடியும் என்றும், இதனை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் இருந்து பயன்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.`

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக