ஞாயிறு, 16 ஜூலை, 2017

அழகு என்பது பார்க்கப்பட வேண்டிய விஷயம் அல்ல; அது உணரப்பட வேண்டிய விஷயம் .

'நான் பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும்'  என்ற லட்சக்கணக்கான மனிதர்களின் எண்ண அலைகள்தான் அழகுக்கலை மற்றும் அழகு சாதனங்கள் சம்பந்தப்பட்ட தொழில் துறையை பல கோடி ரூபாய்கள் லாபம் புழங்கும் வளமான தொழில் துறையாக மாற்றியுள்ளது.

என்ன செய்தாலும் நாம் பார்ப்பதற்கு இப்போது எப்படி  இருக்கிறோமோ, அப்படி மட்டுமே இறுதிவரை இருப்போம் என்பது மட்டும் உண்மை.  


நமது வெளிப்புறத் தோற்றத்தின் அழகானது, வயது வளர வளர வெளிறிப்போய் விடும். உட்புறத் தோற்றத்தின் அழகு மட்டுமே நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வந்து பக்குவத்தைப் பரிசளிக்கும்.

நமது நல்ல குணங்கள் மட்டும் செயல்பாடுகளின் வழியாக நமது உள்ளத்தின் அழகை கவனமாகப் பார்த்துக் கொண்டால், வெளிப்புறத் தோற்றம் தானாக நம்முடைய உள்ளழகை பிரதிபலிக்கும்.

உள்ளம் அழகாய் இருந்தால்தான் எல்லாமே அழகாய் இருக்கும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக