ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

காலாண்டு தேர்வு நிறைவு : அக்., 2 வரை விடுமுறை.

காலாண்டு தேர்வு நேற்றுடன் முடிந்த நிலையில், அக்., 2 வரை பள்ளிகளுக்கு, விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், காலாண்டு தேர்வு, செப்., 11ல் துவங்கி, நேற்றுடன் முடிந்தது. ஒன்று முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்கள் தேர்வுகளை முடித்து விட்டனர்.

இதையடுத்து, இன்று முதல், காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வரும், ௨ம் தேதி வரை, பள்ளிகளில் வகுப்புகள் நடக்காது. அக்., 3ல், பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது. 

வாக்குச்சாவடி சிறப்பு முகாம் அக்டோபர் 8 மற்றும் அக்டோபர் 22 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

DIGITAL SR : பதிவுகள் விடுபட்டுள்ளதால் ஆசிரியர் பணிப்பதிவேடுகளை கணினிமயமாக்குவதில் சிக்கல்.

ஆசிரியர்களின் பணிப்பதிவேட்டில் பல்வேறு பதிவுகள் விடுபட்டுள்ளதால் அவைகளை கணினிமயமாக்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 

Departmental Exam - தேர்வுகளுக்கு அக்., 31 வரை அவகாசம்.

         புதிதாக மாற்றப்பட்ட பாடத்திட்டத்தில், டிசம்பரில் நடத்தப்பட உள்ள, அரசு துறைத்தேர்வுகளுக்கு, 'ஆன் - லைன்' மூலம் விண்ணப்பிக்கலாம். 


தமிழகத்தில், அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் என, பல லட்சம் பேர் பணிபுரிகின்றனர். இவர்கள், சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட சலுகைகளுக்கு, இரண்டு, அரசு துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம்.

B.Ed - தொலைதூரக்கல்வி பி.எட். படிப்புக்கு ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. அறிவிப்பு.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்கல்வி பி.எட். படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.

இதுதொடர்பாக அந்த பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எஸ்.விஜயன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

புதிதாக நியமிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு 3 நாட்கள் கருத்தாக்கப் பயிற்சி அறிவிப்பு.


சனி, 23 செப்டம்பர், 2017

அசல் ஓட்டுனர் உரிமம் ; நீதிபதி புதிய சலுகை : பொதுமக்கள் மகிழ்ச்சி?

தமிழகத்தில் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என சமீபத்தில் தமிழக அரசு உத்தரவிட்டது.

அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, விதிமுறை மீறுகிறவர்களிடம் மட்டுமே அசல் ஓட்டுனர் உரிமம் கேட்கப்படும் என தமிழக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, நீதிமன்றமும் அதை உறுதி செய்தது. 

ப்ளிப்கார்ட் Vs அமேசான் - Offers! எது best ?

இரண்டிலும் சிறந்த ஆபர்கள் எவை, தாமதிக்காமல் வாங்க வேண்டிய பொருட்கள் எவை என்பது பற்றிய ஒரு அலசல்...

டி.வி, பவர்பேங்க், ஹார்ட் டிஸ்க்... அசத்தும் ஆன்லைன் ஆஃபர்கள்... எதை வாங்கலாம்?

திட்டமிட்டப்படி இன்று(செப்-23) உடற்கல்வி ஆசிரியர் தேர்வு நடைபெறும்.

11 மாவட்டங்களில் இன்று(செப்-23) திட்டமிட்டப்படி உடற்கல்வி ஆசிரியர் போட்டி தேர்வு நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன்படி இன்று இத்தேர்வை 106 மையங்களில் 37,591 பேர் எழுதுகின்றனர் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

வெள்ளி, 22 செப்டம்பர், 2017

'கனவு ஆசிரியர்' விருது: முதல்வர் அறிவிப்பு.

''மாவட்டத்திற்கு, தலா, ஆறு ஆசிரியர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு, 'கனவு ஆசிரியர்' என்ற விருதும், தலா, 10 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையும், இந்த ஆண்டு முதல் வழங்கப்படும்,'' என, முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
சென்னை பல்கலை, நுாற்றாண்டு விழா கலையரங்கில், 2,315 முதுகலை ஆசிரியர்களுக்கும், 58 சிறப்பாசிரியர்களுக்கும், பணி நியமன ஆணை வழங்கும் விழா, நேற்று நடந்தது. இதில், தேசிய விருது பெற்ற, 22 ஆசிரியர்களுக்கு, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நாளை(செப்., 23) முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

தமிழகத்தில், ஒரு வாரமாக பருவ மழை விலகி, வெயில் அதிகரித்துள்ளது. மாலை அல்லது இரவு நேரங்களில், சில இடங்களில் மழை பெய்கிறது. 


இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நாளை முதல், மூன்று நாட்களுக்கு, கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யக்கூடாது மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்  போராட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி மதுரையை சேர்ந்த வக்கீல் சேகரன்  மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள் ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு இடைக் கால தடை விதித்தனர். தடையை மீறி போராட்டம் தொடர்ந்ததால் கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆன்லைனில் ஆசிரியர் தேர்வு-தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.

சென்னை பல்கலை.,யில் ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், முதல் முறையாக ஆன்லைனில் ஆசிரியர் தேர்வு நடந்துள்ளது. ஆசிரியர் தேர்வு வெளிப்படை தன்மையுடன் நடந்துள்ளது. 

வியாழன், 21 செப்டம்பர், 2017

ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை: இன்று வழங்குகிறார் முதல்வர்.

பள்ளிக் கல்வித் துறையில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை (செப்.21) வழங்குகிறார்.
இதற்கான நிகழ்ச்சி, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கலையரங்கில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. 

இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், அமைச்சர் டி.ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2,315 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களும், 58 சிறப்பு ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Powergrid-ல் டிப்ளமோ தகுதிக்கு வேலை!!!

பெங்களூரில் உள்ள “Powergrid” நிறுவனத்தில்   கீழ்க்கண்ட பணிக்கான  காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம் வருமாறு:

விவசாய இன்சூரன்ஸ் நிறுவனத்தில் அதிகாரி வாய்ப்பு!!!



அக்ரிகல்சர் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி என்பது விவசாயக் காப்பீட்டிற்கு  என்று பிரத்யேகமாக செயல்படும் காப்பீட்டு நிறுவனமாகும். இங்கு காலியாக உள்ள நிர்வாக அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

*காலியிடங்கள்  :*AIC நிறுவனத்தின் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசர் பதவியில் SC பிரிவினருக்கு 8ம், ST பிரிவினருக்கு 4ம், OBC பிரிவினருக்கு 13ம், பொது இடங்களாக 25ம் சேர்த்து மொத்தம் 50 காலியிடங்கள் உள்ளன.

ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு மத்தியரசுப் பணி!!!

நமது  நாட்டின் தாமிர உற்பத்தியில் முத்திரை பதித்து வரும் இந்துஸ்தான் காப்பர் நிறுவனம் பெருமைக்குரியது. இந்த நிறுவனத்தில் ஐ.டி.ஐ., டிரேடு அப்ரென்டிஸ் பணியிடங்கள் 75ஐ நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

*பிரிவுகள் :* எலக்ட்ரீசியனில் 25, ஆர்மச்சூரி வைண்டரில் 2, மெக்கானிக் டீசலில் 10, சி., அண்டு இ., வெல்டரில் 7, பிட்டரில் 10, டர்னரில் 5, ஏ.சி., அண்டு ரெப்ரிஜிரேஷன் மெக்கானிக்கில்2, டிராப்ட்ஸ்மேன் மெக்கானிக்கில் 3, சர்வேயரில் 3, கார்பென்டரில் 3, பிளம்பரில் 2ம் சேர்த்து மொத்தம் 75 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

TNPSC அறிவிப்பு: பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க அக்.3 கடைசி!!

TNPSC–ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால்  தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம் வருமாறு:

```Advt.No.: 477```

பணியின் பெயர்: Statistician

காலியிடங்கள்:31 (UR-10, BC-9, MBC/DC-6, SC-5, SCA-1)

இனி எந்த ரேஷன் கடையிலும் அரிசி, சர்க்கரை வாங்கலாம்!

எந்த பகுதியில் உள்ள ரேஷன் கடையிலும், அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வாங்கும் திட்டத்தை துவக்க, உணவுத் துறை முடிவு செய்துள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில், அரிசி, கோதுமை இலவசமாகவும், பருப்பு, சர்க்கரை, பாமாயில் ஆகியவை, குறைந்த விலையிலும் வழங்கப்படுகின்றன. தற்போது, ரேஷன் கார்டில் உள்ள முகவரிக்கு, அருகிலுள்ள கடையில் மட்டும் தான், இந்த பொருட்களை வாங்க முடியும்.

ஊரக திறனாய்வுத் தேர்வு (24.09.2017) நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலரின் கடிதம்!!!


TNPSC "ONE TIME REGISTRATION" புதுப்பிப்பு எப்படி?

வணக்கம் சகோதர-சகோதரிகளே,
ஒன் டைம் ரெஜிஸ்டரேஷன் புதுப்பிப்பு எப்படி?

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை தீபாவளி போனஸ் !!

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை தீபாவளி போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. உற்பத்தியுடன் இணைந்த
விழாக்கால போனஸை வழங்க  மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

மேலும் ரயில்வே ஊழியர்களுக்கான போனஸ் காலதாமதமின்றி வழங்கப்படும் என அமைய்ச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

மாலை நேர வகுப்புகள் பள்ளிகளில் நடத்தலாமா ?RTI -பதில்.


காலாண்டு விடுமுறை நாட்களில் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் - VELLORE CEO ORDER.


சென்னை குடிநீர் வாரியத்தில் காலி பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு.

சென்னை குடிநீர் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வில் பங்கேற்பதற்கான நுழைவுச் சீட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

      இது குறித்து சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் வி.அருண் ராய் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

NIOS Exam என்றால் என்ன?

பனிரெண்டாம் வகுப்பில் 50 சதவீதம் மதிப்பெண் பெறாமல் பணியாற்றிவரும் ஆசிரியர்கள் ,31.3.2019 குள் NIOS Exam Pass செய்ய வேண்டும்.

IFHRMS DIGITIZATION BOOKLET WORKS.

பக்கம்-1 தற்போதைய விவரம்
பக்கம்-3 பணியாளர் சுய விவரம்

புதுப்பிக்கப்பட்ட EMIS தளத்தில் செய்ய வேண்டிய முதற்கட்டப் பணிகள்!

☀கல்வித் தகவல் மேலாண்மை முறைமையின் வலைதளத்தில் பள்ளி
பற்றிய தரவுகளைப் பதிவேற்றும் பணி முழுக்க முழுக்க அலுவலகப்பூர்வமாக நடந்தேற வேண்டுமே அன்றி,
☀தனியார் இணையதள மையங்களில் இப்பணியை மேற்கொள்ளக் கூடாது. 

ரயில்களில் முன்பதிவு பட்டியல் ஒட்டப்படாது : சென்ட்ரலிலும் வருது புது நடைமுறை.

ரயில்வேயில் புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்படும் அதே நேரம், சிக்கன நடவடிக்கையாக, சென்னை சென்ட்ரல் உட்பட, ஆறு ரயில் நிலையங்களில், முன்பதிவு பட்டியலை, ரயில்களில் ஒட்டும் நடைமுறை, விரைவில் கைவிடப்படுகிறது.

அரசு பள்ளி ஆசிரியர்களின் பிளஸ் 2 சான்றிதழ் சரிபார்ப்பு.

தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின், பிளஸ் 2 சான்றிதழை சரிபார்க்க, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை பாடம் நடத்தும், பட்டதாரி மற்றும் டிப்ளமா ஆசிரியர்கள், அரசின் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 2009ல், இந்த கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தன.

வங்கிகளுக்கு 4 நாள் 'லீவு'.

வரும் 29ம் தேதி முதல் தொடர்ந்து, நான்கு நாட்களுக்கு வங்கிகள் இயங்காது.

ஆயுத பூஜை, தசரா உள்ளிட்ட பண்டிகைகள் காரணமாக அரசு மற்றும் தனி யார் வங்கி ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக நான்கு நாட் கள் விடுமுறை கிடைத்துள்ளது. 

செப்., 29 முதல் அக்.,2 வரை வங்கிகள் இயங்காது. அதனால் வாடிக்கையாளர்கள் 28ம் தேதிக்கு முன் வங்கி பரிவர்த்தனைகளை முடித்து கொள்வது சிறந்தது. ஏற்கனவே, ஆக., 12 முதல், 15 வரை, நான்கு நாட்கள் வங்கிகளுக்கு, தொடர் விடுமுறை விடப்பட்டிருந்தது.

புதன், 20 செப்டம்பர், 2017

வாட்ஸ் அப்பில் புதிய வசதி: மேனேஜ் மெசேஜஸ்.

வாட்ஸ் அப் கலந்துரையாடலில், எந்த எண்ணுடன் எவ்வளவு மெமரி உபயோகிக்கப்பட்டுள்ளது என்பதை அறியும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

DEEO Meeting News: பனிரெண்டாம் வகுப்பில் 50 சதவீதம் மதிப்பெண் பெறாமல் பணியாற்றிவரும் ஆசிரியர்கள் ,31.3.2019 குள் NIOS exam passசெய்ய வேண்டும்.

DEEO meeting news:
1. பள்ளி திறக்கும் நாளில் இலவச பாட புத்தகம், நோட்டுகள் அனைத்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்.

2. பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து, இடிக்க, சரி செய்ய வேண்டியவைகளை BDO ற்கு தெரியபடுத்தவும். 

ஆச்சரியப் பள்ளி `QR CODE’ மூலம் ஆன்லைன் தேர்வு - ஆச்சரியங்களை நிகழ்த்தும் நடுநிலைப் பள்ளி.

க்யூ ஆர்’ கோடு மூலம் மாணவர்கள் ஆன்லைன் தேர்வு எழுதுகின்றனர்; ஸ்மார்ட் வகுப்பறையில் உள்ள தொடுதிரையை மாணவர்களே கையாள்கின்றனர்; கணினி ஆய்வகத்தில் டிஜிட்டல் முறையிலான கல்வி கற்க மாணவர்கள் பயிற்றுவிக்கப்படுகின்றனர்.


ஆதார் அட்டையுடன் கட்டாயம் இணைக்க வேண்டிய ஆறு முக்கிய ஆவணங்கள்!



ஒவ்வொரு இந்திய குடிமகனின் ஆதாரமாக விளங்கும் ஆதார் அட்டை ஒருசில முக்கிய ஆவணங்களுடன் இணைக்க வேண்டியது அவசியம் என்று அரசு வலியுறுத்தி வருகிறது.


இந்த இணைப்பு நடந்தால் மட்டுமே அரசின் சலுகைகளைப் பெற முடியும் என்ற நிலை உள்ளது.

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 'ரோட்டா வைரஸ்' சொட்டு மருந்து இன்று துவக்கம் : வதந்தி பரப்பினால் நடவடிக்கை.

தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 'ரோட்டா வைரஸ்' சொட்டு மருந்து இன்று முதல் (செப்.20) வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உயிரிழப்பு நடக்கிறது. இதற்கு காரணம் 'ரோட்டா வைரஸ்'தான். 

1.5 லட்சம், 'லேப் - டாப்' : மாணவர்களுக்கு தயார்.

தமிழகத்தில், மாணவர்களுக்கு இலவசமாக வழங்க, 1.5 லட்சம், 'லேப் - டாப்'கள் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன. தமிழகத்தில், அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, இலவச, 'லேப் - டாப்' வழங்கப்படுகிறது. 2011 முதல் இதுவரை, 35 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. கொள்முதல் சிக்கல் காரணமாக, 2016 - 17ல், வழங்கப்படாததால், மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தற்போது, 'டெண்டர்' தொடர்பான சிக்கல்கள் தீர்ந்ததால், 'லேப் - டாப்' கொள்முதல் துவங்கி உள்ளது.

உபரி ஆசிரியர்கள் இடமாற்றம் : 22ம் தேதி ஆலோசனை.

மாணவர் விகிதத்தை விட, அதிகமாக உள்ள ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, ௨௨ம் தேதி, தொடக்கக் கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவிபெறும், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், அரசு சம்பளத்தில், 1.50 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். 

அரசு பள்ளிகளுக்கு 'நீட்' பயிற்சி புத்தகம்.

'நீட்' நுழைவுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த, மத்திய அரசின் நிதி உதவியில், 1௦௦௦ அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, சிறப்பு பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.

அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் அடையாள அட்டை அணிய வேண்டும் தமிழக அரசு உத்தரவு.

பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அரசு செயலாளர் டாக்டர் சீ.ஸ்வர்ணா, தமிழக அரசின் அனைத்து துறை செயலாளர்கள், அனைத்து தலைமைசெயலக துறைகள், அனைத்து துறைத் தலைவர்கள், மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட நீதிபதிகள், குற்றவியல் தலைமை நீதிபதிகள், அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் உள்ளிட்டோருக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:–

செவ்வாய், 19 செப்டம்பர், 2017

முதுநிலை ஆசிரியர் நியமனம் இன்று ஆன்லைன் கவுன்சலிங்.

அரசு மற்றும் நகராட்சி மேனிலைப் பள்ளிகளில் காலி பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 11ம் தேதி தேர்தல் முடிவு வெளியானது. அதில் 2538 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆகஸ்ட் 29ம் தேதி சான்று சரிபார்ப்பு நடந்தது. தற்போது பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். 

இதற்கான கவுன்சலிங் இன்று காலை 10 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் நடக்கிறது.

வங்கியில் ஆதார் எண் இணைக்காவிடில் ஜனவரி முதல் பணபரிவர்த்தனைகள் நிறுத்தம்.

வங்கி கணக்கில் ஆதார் எண் இணைக்காதவர்களின் பரிவர்த்தனைகள் ஜனவரி முதல் நிறுத்தப்பட உள்ளது. 12 வங்கிகளில் ஆதார் போட்டோ எடுக்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் தங்களது வங்கி கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என, மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. 

சாப்ட்வேர் துறையை விட அதிக சம்பளம் பெறும் 13 வேலைகள் எது தெரியுமா?

சாப்ட்வேர் துறையை விட அதிக சம்பளம் பெறும் 13 வேலைவாய்ப்புகளை குறித்து அமெரிக்க பணியாளர் கழகம் ஒரு ஆய்வை நடத்தி பட்டியலிட்டுள்ளது.

நாள் முழுவதும் ஒரு கட்டடத்தின் ஒரு அறையில் கூட்டத்தில் உட்கார்ந்து கொண்டு வேலை செய்வது சிரமமாகவும் இருக்கலாம், பெரும் மன அழுத்தத்தை தருவதாக இருக்கலாம். ஆனால் உண்மை என்னவென்றால், நிரந்தரமான வேலை மற்றும் உயர்ந்த சம்பளம் தரும் வேலைகளால் பெரும்பாலானவர்கள் தங்கள் மேசைக்குச் செல்வதையே விரும்புகிறார்கள்.

ஒரு லட்சம் காலியிடங்களை நிரப்ப ரயில்வே அமைச்சகம் முடிவு!!

புதுடில்லி:இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள இடங்களுக்கு விரைவில் ஆட்களை வேலைக்கு அமர்த்த ரயில்வே அமைச்சகம் முடிவு எடுத்து உள்ளது.

மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டதும் பியுஷ் கோயலுக்கு ரயில்வே துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் ரயில்வே ஒரு லட்சம் காலியிடங்களை நிரப்ப முடிவு செய்து உள்ளது . அது பாதுகாப்பு பிரிவின் கீழ் வரும் துறைகளுக்கு ஒரு லட்சம் பேரை வேலைக்கு அமர்த்த இந்தியன் ரெயில்வே முடிவு செய்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இனி அனைத்து மாநிலங்களிலும் வரி செலுத்தலாம்!

நாடு முழுவதும் அனைத்து நகரங்களிலும் வருமான வரி செலுத்தும் முறை அக்டோபர்  மாதம் முதல் அமல்படுத்தப்படவுள்ளது.


அக்டோபர் 1ஆம் தேதி முதல் அனைத்து நகரங்களிலும் வருமான வரி செலுத்தும் வசதி நாடு முழுவதும் அமல்படுத்தப்பட இருக்கிறது. முதற்கட்டமாக, நாடு முழுவதும் 100 நகரங்கள் இணைக்கப்படும். தற்போதைய நிலையில், வரி செலுத்துவோர் தங்களின் சொந்த மாநிலத்தில் மட்டுமே வரி செலுத்த முடியும். இதனால் பலரும் அவதிப்பட்டு வந்தனர். இதை சரிசெய்யும் வகையில் புதிய வரி செலுத்தும் திட்டத்தை வருமான வரித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி டெல்லி, மும்பை ஆகிய நகரங்களில் அக்டோபர் மாதம் முதல் வருமான வரி செலுத்த முடியும். மேலும் இத்திட்டத்தில் 100 நகரங்களை இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

திங்கள், 18 செப்டம்பர், 2017

உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி இன்று அறிவிக்கப்படுமா?

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவணையை செப்டம்பர் 18 ஆம் தேதிக்குள் (திங்கள்கிழமை) வெளியிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் விதித்திருந்த கெடு முடிவடைவதால், தேர்தல் தேதி அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில், 12 மாநகராட்சிகள், 123 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 12 ஆயிரத்து 524 கிராமப் பஞ்சாயத்துகள் உள்ளன. இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 24 ஆம் தேதியுடன் முடிந்தது. உள்ளாட்சித் தேர்தலை நடத்த கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

சிறுபான்மையினர் கல்வி உதவிக்கு விண்ணப்பிக்கஅவகாசம் செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிப்பு.

சிறுபான்மையின மாணவ, மாணவியர், மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையின மதத்தை சேர்ந்த மற்றும் 2017-18 கல்வி ஆண்டில் 1-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்புகள் வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. அதை பெற www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இது, தற்போது செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை சிறுபான்மையின மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

EMIS - How To Transfer?

TRANSFER TO STUDENT POOL
(18.09.2017 முதல்)
தற்போது EMIS ல்  மாற்றுச்சான்று. 
வழங்கிய மாணவர்கள் உள்ளிட்ட இனங்களை Transfer செய்யலாம்

ஆசிரியர் பணிக்கு தகுதியான பட்டதாரி இல்லை டி.ஆர்.பி., தேர்வில்865 இடங்கள், 'அவுட்'.

அரசு பள்ளி முதுநிலை ஆசிரியர் பணியில், 865 இடங்கள், தகுதியான பட்டதாரிகள் கிடைக்காமல், காலியாக விடப்பட்டுள்ளன. இது, கல்வியாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் பாடம் எடுக்க, முதுநிலை ஆசிரியர்கள் நியமிக்கபடுகின்றனர். அரசு பள்ளிகளில், இந்த பதவிக்கு காலியாக உள்ள, 3,375 இடங்களை நிரப்ப, 

'ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமையும் பள்ளிகள் எவை?

தமிழகம் முழுவதும், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பதற்கான, ௩,௦௦௦ பள்ளிகள் பட்டியலை, வரும், 21ம் தேதிக்குள் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
'தமிழகம் முழுவதும், அரசு பள்ளிகளில், கணினி வசதிகளுடன் கூடிய, ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும்' என, சட்டசபையில், ௧௧௦ விதியின் கீழ், முதல்வர் பழனிசாமி அறிவித்தார். 

அக மதிப்பீடு வழங்கும் முறை : ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை.

தமிழக மாணவர்கள், தேசிய அளவிலான நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற, பல்வேறு மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்படி, பிளஸ் 2வை போல, பிளஸ் 1க்கும், பொதுத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக, 38 ஆண்டுகளுக்கு பின், விதிகள் மாற்றப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாடத்துக்கும், தலா, 200 மதிப்பெண்ணுக்குப் பதில், 100 மதிப்பெண்ணாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 
இவற்றில், மொழி பாடங்களில், 90௦; செய்முறை தேர்வுள்ள பாடங்களில், செய்முறைக்கு, 20 மதிப்பெண் போக, 70 மதிப்பெண்களுக்கும் எழுத்து தேர்வு நடத்தப்படுகிறது.

சனி, 16 செப்டம்பர், 2017

மதமாற்றங்கள் எப்படி நடக்கின்றன.

ஒரு அடர்ந்த காட்டுக்குள்ள ஒரு நரிக்கூட்டம் வாழ்ந்து வந்தது. அதில் ஒரு நரி ஒரு நாள் காட்டை ஒட்டி இருந்த திராட்சை தோட்டத்திற்குள் புகுந்து திராட்சை பழங்களை சாப்பிட்டுக் கொண்டிருந்தது. அப்பொழுது அங்கு வந்த தோட்டக்காரன் நரியைப் பிடித்து அதன் வாலை வெட்டி விட்டான்.

வகுப்பறையில் ஆசிரியர்கள் செய்யக் கூடாத அந்த 5 விஷயங்கள் இவை தான்!

ஆசிரியர் மாணவருக்குமான உறவு  கற்றுக் கொடுப் ஆசிரியர், மாணவருக்கு வேதவாக்கா அணுக வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட இடையில் முரண வகுப்பறையில் அவர்கள் கண்டிப்பாக 5 விஷயங்களைத் தவிர்த்தாக வேண்டும்.

கீதை சொல்லும் பாதை....!

ஒரு ஊரில் வயதான முதியவர் ஒருவர் தன் பேரனுடன் வசித்து வந்தார்.

தினமும் அதிகாலையில் எழுந்து, சமையலறை மேஜை அருகில் அமர்ந்து, பகவத் கீதை படிப்பது அவர் வழக்கம்.

அனைத்து விஷயங்களிலும் அவரைப் பின்பற்ற நினைத்த பேரனும், கீதை படிக்க முற்பட்டான். ஒருநாள் தாத்தாவிடம், நானும் உங்களைப்போல் தினமும் பகவத் கீதை படிக்கிறேன்.

முடிந்த வரை மருத்துவம் பார்ப்பதை தள்ளிப்போடுங்கள்...

அமெரிக்காவில் கூட காய்ச்சல், சளி போன்றவை குழந்தைகளுக்கு வந்தால், உடனடி மருத்துவம் அளிப்பதில்லை... 3,4 நாட்களில் தானாக சரி ஆகும் ; அப்படி ஆகாவிட்டால் மட்டுமே டாக்டரைப் பார்க்க அனுமதி கிடைக்கும்...

ஒருவர் தவறான உணவை உட்கொண்டார் என்று வைத்துக் கொள்வோம்,
தொண்டை வரைக்கும் அவர் கட்டுப்பாட்டில் நஞ்சு இருப்பதால் அது உள்ளே சென்றுவிடும்!

அதற்குப் பின் அதை மூளை கவனித்துக்கொள்ளும்.

அழகான வரிகள் பத்து.

1, அறிமுகம் இல்லாதவர்களின் பார்வையில்..
நாம்
எல்லோரும்
 சாதாரண மனிதர்கள்

2,பொறாமைக்காரரின் பார்வையில்..
நாம் அனைவரும் அகந்தையாளர்கள்

3,நம்மைப் புரிந்து கொண்டோரின் பார்வையில்..
நாம் அற்புதமானவர்கள்.

ஒருமுறை சாக்ரட்டீஸ் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் வந்து ...

ஒருமுறை சாக்ரட்டீஸ் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் வந்து அவருடைய நண்பரைப் பற்றி ஏதோ கூற முயன்றார்.

உடனே சாக்ரட்டீஸ் அவரிடம் , " என் நண்பரைப் பற்றி என்னிடம் கூற விரும்பினால் அதற்கு முன் 3 கேள்விகளை கேட்பேன்.

மூன்று கேள்விக்கும் ஆம் என பதில் இருந்தால் மட்டுமே நீங்கள் அவரைப் பற்றி கூறலாம்"என்றார்.

சாக்ரட்டீஸ் முதல் கேள்வியை கேட்டார்

"அவர் செய்த செயலை நேரடியாகப் பார்த்துவிட்டு தான் அவரைப் பற்றி கூறுகிறாயா ?" என்று கேட்டார்.

தாய்ப்பாலுக்கு இணை... தேங்காய் பால்...

தேங்காய் உபயோகம்
மாரடைப்பில் முடியும்
என்று நிறைய பேர்
கைவிட்டனர்.

உண்மை இதோ,
பச்சை தேங்காயின் பயன்கள்:-

கடவுள் ஒரு நாள் கழுதையை படைத்து அதனிடம் சொன்னார்,

கடவுள் ஒரு நாள் கழுதையை படைத்து அதனிடம் சொன்னார்,

"நீ ஒரு கழுதை. காலை முதல் மாலை வரைக்கும் நீ உழைக்க வேண்டும். உன் மேல் சுமைகள் இருக்கும். நீ புல் தான் சாப்பிட வேண்டும். உனக்கு அவ்வளவாக அறிவு இருக்காது. நீ 50 வருடங்களுக்கு வாழ்வாய்.

இதற்கு கழுதை சொன்னது

"நான் கழுதையாக இருக்கிறேன். ஆனா 50 வருடம் ரொம்ப அதிகம். எனக்கு 20 வருடம் போதும்."

உலகை ஆளும் உருளைக்கிழங்கு… யாருக்கு? எப்படி...

வட இந்திய இளைஞர்களின் காய்கறிப் பட்டியலில் உருளைக்கிழங்குக்கு முக்கியமான இடம் உண்டு. அவர்களால், ஒருநாள்கூட உருளைக்கிழங்கு இல்லாமல் சாப்பிட முடியாது. இந்தியா முழுக்க மக்களால் அதிகம் விரும்பி உண்ணப்படுகிறது உருளைக்கிழங்கு. இந்தியா மட்டுமல்ல… உலகெங்கும் இதேநிலைதான்.

1536-ம் ஆண்டில் பெரு நாட்டைக் கைப்பற்றியது ஸ்பானிஷ் படை. அந்தப் படை வீரர்கள்தான் அங்கிருந்த உருளைக்கிழங்கு என்கிற அற்புதமான இந்தக் காயைக் கண்டறிந்தார்கள். அங்கிருந்து ஐரோப்பாவுக்குக் கிளம்பிப் போனது உருளைக்கிழங்கு. மெள்ள மெள்ள உலகமெங்கும் பயிரிடப்பட்டது.

மொத்த மனித இனம் அழிந்த நொடியிலிருந்து... உலகில் என்னவெல்லாம் நடக்கும்?

ஒரு ஐந்து நொடிகளை ஒதுக்கி நீங்களாகவே கற்பனை செய்து பாருங்கள்... ஒட்டு மொத்த மனித இனமும் அழிந்த நொடியிலிருந்து இந்த உலகில் என்னவெல்லாம் நடக்கும்...

முதல் சில நொடிகள் :

- பெரும் அமைதி சூழும். மொத்த சத்தங்களும், இரைச்சல்களும் அடங்கிப் போயிருக்கும்.
- பறவைகளும், வீட்டுப் பிராணிகளும் அச்சத்தோடும், ஆச்சர்யத்தோடும் இறந்து கிடக்கும் உடல்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும்.

காசியில் ஏன் கருடன் பறப்பதில்ல

காசியில் ஏன் கருடன் பறப்பதில்ல

➦ காசி என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது புனித நீராடல் தான். ஆனால் அதையும் தாண்டிய ஒரு சிறப்பானது காசிக்கு உண்டு.

➦ ராமபிரான் ராவணனுடன் நடந்த போரில் ராவணனை வதம் செய்த பிறகு சேதுவில் சிவபூஜை செய்ய தயார் செய்யப்பட்டது.

கவியரசு கண்ணதாசன் வாழ்வில்..

#அவமானம்ஒருமூலதனம்...

#செட்டிநாட்டிலிருந்து எழுத்துக் கனவுகளுடன் 14 வயதுப் பையனாகச் சென்னை வந்தார் கவிஞர். அன்று இரவு படுக்க இடமின்றி மெரினா பீச்சில் காந்தி சிலைக்குப் பின்னால் பெட்டியைத் தலைக்கு வைத்துப் படுத்துக் கொண்டிருக்கிறார் கவிஞர்.

நள்ளிரவு போலீஸ்காரரின் உருட்டுத்தடி அவரைத் தட்டி மிரட்டியது. காலையில் நகரத்தார் விடுதிக்குப் போக வேண்டும்.

நமது பாராளுமன்றத்தில் பூஜ்ய நேரத்தில் (zero hour) பேசினார்... ஸீரோ ஹவரில் பேசுங்கள்... என்றெல்லாம் கூறுகிறார்களே... "பூஜ்ய நேரம்' என்றால் என்ன?

பாராளுமன்றத்தில் பொதுவாக காலை பதினோரு மணியளவில், உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளின் பிரச்னைகளைப் பற்றி கேள்விகள் கேட்க அனுமதிப்பார்கள். இந்தச் சமயத்தில்கேள்விகள் கேட்பதற்கு அவைத்தலைவரிடம் முன்அனுமதி பெற்றிருக்க வேண்டும்
.
இதன் பிறகு 12 மணியிலிருந்து 1 மணி வரை உள்ள நேரம் "பூஜ்ய நேரம்' என்று கூறப்படுகிறது.

இந்த நேரத்தில் முன் அனுமதி பெற முடியாத நிலையில் உள்ளவர்களும் எந்தவொரு பிரச்னை குறித்தும் கேள்வி எழுப்பலாம்.

ஆறுதலே கூற முடியாத சில கஷ்டங்களுக்கு...

ஆறுதலே கூற முடியாத
சில கஷ்டங்களுக்கு
நிச்சயமாக அழுகை
ஒரு மருந்தாக இருக்கும்....




🌈🌈🌈
நாளை என்பதே நமக்கு

பொண்டாட்டியும்_பிரியாணியும்...

கணவனுக்கும் மனைவிக்கும் கடும் சண்டை.

இவர் வாயில் வந்த வார்த்தைகளால் மனைவியை திட்ட, பொறுக்க மாட்டாத  மனைவி பக்கத்து வீட்டுக்கு சென்று விட்டாள்.

பின்னாலேயே கணவனும்  போனான். பக்கத்து வீட்டுக்காரர்கள் அவர்களை சமாதானப்படுத்தி, இனிப்பு, காரம், டீ கொடுத்து அனுப்பினர்.

வீட்டிற்கு வந்த கணவன் இரண்டுநாட்கள் கழித்து மறுபடியும் அதிகமாக சண்டை போட ஆரம்பித்தான்.

புத்திசாலி!!! மனைவியா??? புருஷனா?😳🤔

ஒரு சட்டமன்ற உறுப்பினரின் மனைவி அவரிடம் வந்து ....

" என்னங்க...நானும் எல்லார்கிட்டையும் நாலு வருஷத்துக்கு மேலா நான் எம்.எல்.ஏ பொண்டாட்டி, நான் எம்.எல்.ஏ பொண்டாட்டின்னு சொல்லிகிட்டு இருக்கேன்..

எப்பதான் நான் மந்திரி பொண்டாட்டின்னு சொல்ரது..? உடனே சி எம் ஐப் பார்த்து, அதான் நம்ம தலைவரைப் பார்த்து, மந்திரியாகிற  வேலையைப் பாருங்க..

பின்பற்ற வேண்டிய பத்து...

காலையில் எழுந்தவுடன் இரண்டு நிமிடமாவது கடவுளை மனதில் நினைத்து பிரார்த்தனை செய்யுங்கள்.

 அன்றைய நாள் நல்ல நாளாக அமையவேண்டும் என்ற இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.

புண்ணியநதிகள், கோமாதா, சிரஞ்சீவிகள், சப்தகன்னியர் ஆகியோரை குறைந்தபட்சம் ஒரு நிமிடம் நினைப்பது அவசியம்.

முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி...

’”முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி”- இதிலிருந்து நீங்கள் அறிவது என்ன?’
-வகுப்பறையில் ஆசிரியர் கேட்டார்.

”முல்லை என்பது ஒரு கொடிவகை தாவரம். அது பற்றிப்படர ஏதேனும் ஒரு பற்றுப்பொருள் கண்டிப்பாக தேவை என்பது புரிகிறது”. என்றான் ஒரு மாணவன்.

”ஒரு தாவரம் பற்றிப்படர இடமின்றி தவித்தால்கூட அதனை கண்டு மனம்துடித்த அரசனொருவன் தமிழகத்தில் வாழ்ந்திருக்கிறான், நெகிழ்ச்சியாக இருக்கிறது”- இன்னொரு மாணவன்.

முல்லா கதை...

"என்னை யாராலும் ஏமாற்ற முடியாது!' என்று பெருமை அடித்துக் கொண்டான் அப்துல்.

அதைக் கேட்ட முல்லா நஸ்ருதீன், "உன்னால் இங்கே ஐந்து நிமிடம் காத்திருக்க முடிந்தால், அதற்குள் உன்னை ஏமாற்றும் வழியைக் கண்டுபிடித்து வருவேன்!' என்றார்.

"ஓ... தாராளமாக!' என்று இறுமாப்புடன் பதில் சொன்னான் அப்துல்.

அவசரமாக எங்கோ சென்றார் முல்லா.

குங்குமம் லட்சுமி கடாட்சம் மிக்கது.

பெண்கள் குங்குமம் இடுவதால் மகாலட்சுமியின் நீங்காத அருளைப் பெறுகிறார்கள்.

குங்குமத்தை மோதிர விரலால் தான் இடவேண்டும்.

சிவப்பு நிற குங்குமமே புனிதமானது. பிற வண்ணங்களில் குங்குமம் இடலாகாது.

மாங்கல்யம், நெற்றி, தலைவகிடின் ஆரம்பம் ஆகிய மூன்று இடங்களிலும் ஸ்ரீ லக்ஷ்மிதேவி உறைகின்றாள்.

வாகனங்களுக்கு முன்னால் எலுமிச்சம்பழம், மிளகாய் கட்டும் பழக்கம் மூடநம்பிக்கை இல்லையென்று இன்றைய விஞ்ஞானம் சொல்கிறது.

எலுமிச்சம் பழத்தில் உள்ள சிட்ரோனிக் அமில்கா (Cidronic amilga) என்னும் அமிலமானது மிளகாயில் உள்ள பென்னியோசிட் (Benniyocid) என்னும் காரத்துடன் இரசாயனப் பகுப்பாகி, மிதீரியட் (methiriyed) என்னும் ஒருவகை உந்து வாயுவை வெளியிடுகிறது. அந்த வாயுவை வாகனத்தின் பானட்டில் இருந்து ஸ்டியரிங் வரை செல்லும் எத்ஹோயிட் (Ethgoid) என்னும் கலப்பு மூலகத்திலான உலோகக்கம்பி வாகனத்தின் உட்பகுதிவரை கடத்துகிறது. அந்த வாயுவானது ஓட்டுனரை நித்திரை கொள்ளாமலும், உற்சாகத்துடனும் இருக்கச் செய்வதுடன், பிரேக் ஆயிலையும் வற்றாமல் பாத்துக்கொள்கிறது.

மழை நீரில் குளிக்கும்...

மழை நீரில் குளிக்கும் ஒருவனுக்கு, ஒருவேளை சளிபிடித்து, காய்ச்சல் வந்தால், அவன் ஆரோக்கியமாக இல்லை, எனவே அவை ஆரோக்கியத்தை ஏற்ப்படுத்துகிறது என்று அர்த்தம்.

சுத்தமான மழை தண்ணீரில் அளவுக்கு அதிகமாக பிராணன் இருக்கிறது. மழைநீரில் நனையும்போது பலருக்கும் சளி பிடிக்கிறது. தும்மல் வருகிறது, காய்ச்சல் வருகிறது. இது ஏன் வருகிறது அதாவது மழைநீரில் அளவுக்கு அதிகமான பிராணன் இருப்பதால் நமது உடலில் உள்ள அனைத்து செல்களும் அந்த பிராணனை உறிய ஆரம்பிக்கிறது.

ஒரு ஊரில் சுந்தரம் என்ற உழவன் இருந்தான். தன் மனைவியின் மீது உயிரையே வைத்திருந்தான்...

ஒரு ஊரில் சுந்தரம் என்ற உழவன் இருந்தான். தன் மனைவியின் மீது உயிரையே வைத்திருந்தான். மனைவி அவனிடம், “”எனக்கு மாம்பழம் சாப்பிட வேண்டும். ஆசையாக உள்ளது!” என்றாள். மனைவியின் ஆசையை எப்படியாவது நிறைவேற்ற நினைத்தான் அவன்.

“இது மாம்பழம் பழுக்கும் பருவம் அல்ல. அரண்மனைத் தோட்டத்தில் உள்ள மாமரத்தில்தான் எப்போதும் மாம்பழம் கிடைக்கும். என்ன செய்வது?’ என்று சிந்தித்தான் அவன்.

ஐந்து அறிவு பெரிது, ஆறு அறிவு சிறிது – கவிஞர் வைரமுத்து.

எந்த விலங்கும்
இரைப்பைக்கு மேலே
இன்னொரு வயிறு வளர்ப்பதில்லை

🐇🕊எங்கேனும்
தொப்பைக் கிளியோ
தொப்பை முயலோ
பார்த்ததுண்டா ?
**
எந்த விலங்குக்கும்

ஆசிரியர்கள் நிலைமை...

கரும்பலகையில்
கைபதித்து...
சுண்ணாம்புத்தூளை
தினம்
சுவாசித்து...

கற்றுக்கொடுத்து
கற்றுக்கொடுத்து
காற்றை இழந்த
ஆசிரியர்
இதயத்தில்
இன்னும்
இருக்கிறது வலி...

திருநெல்வேலியைசுற்றியுள்ளகோவில்கள்பற்றியவிவரங்கள்...

தென்பாண்டி நாட்டில் அதுவும் குறிப்பாக தாமிரபரணி நதிக்கரையின் இரு ஓரங்களிலும் 274 சிவாலயங்கள் சிறப்புற்று விளங்கி இருந்ததாக பல புராணங்கள் கூறுகின்றன.

அத்தகைய புராணங்களில், தாமிரபரணி மகாத்மியம், நவசமுத்திர மகாத்மியம் சிவசைல மகாத்மியம் திருப்புடை மருதூர் மகாத்மியம், திருக்குற்றால தலபுராணம், தென்காசி தலபுராணம், கருவை தலபுராணம் திருச்செந்தூர் புராணம் போன்ற நூல்களில் தென்பாண்டி நாட்டில் உள்ள சிவாலயங்கள் திரி (3), பஞ்ச (5), அஷ்ட (8), நவ (9), தச (10) போன்ற எண்ணிக்கையில் பிரித்து நம் முன்னோர்கள் வழிபட்டுள்ளனர்.

பல்வேறு மொழிகளில் மனைவியை எப்படி அழைக்கிறார்கள் -- மனைவி பற்றி ஒரு சிறு குறிப்பு!

நமது மனையில் வெற்றிகரமாக வீற்றிருப்பவள் என்பதால், மனைவி என்றும்...

நமது வாழ்வில் கடைசிவரை தொண தொணவென்று துணையாய் வருபவள் என்பதால், துணைவி என்றும்...

பொன் நகையை வாங்கி தருமாறு நம்மை ஆட்டி வைப்பதால் , பொண்டாட்டி என்றும்...

குழந்தைகளை படிக்க வைக்கும் எல்லோரும் படிக்க வேண்டிய பதிவு, நாளைக்காக மட்டும் வாழமுடியுமா?

சமீபத்தில் ஒரு மின்னஞ்சல் வந்தது. வழக்கம்போல வாசகர் எழுதியதல்ல, வாசகரின் தந்தை எழுதியது. தன்னை அறிமுகம் செய்துகொண்டார் அவர். மத்திய அரசில் ஆரம்பநிலை அதிகாரியாக இருந்தவர். இரண்டாம்நிலை அதிகாரியாக ஓய்வு பெற்றார். இரு பிள்ளைகள். இருவருமே நன்றாகப்படித்து அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலுமாக வேலைபார்க்கிறார்கள். இவர் திருச்சியில் மனைவியுடன் வாழ்கிறார்.

நட்பு எப்படி உடைகிறது காரணங்கள்.

இரண்டு நண்பர்களில் ஒருவர், மற்றொருவர் வேலைப்பளுவில் (பிசியாக) இருக்கிறார் என்று நினைக்கலாம்.
எனவே அவரை தொடர்பு கொண்டு பேசினால் அது அவருக்கு தொந்தரவாக இருக்கும் என்று நினைத்து தொடர்பு கொள்ளாமல் இருக்கலாம்.
காலம் செல்லசெல்ல "நாம் ஏன் தொடர்பு கொள்ள வேண்டும்..

ராவணன்: ஏண்டா ஒவ்வொரு தசராவுக்கும் என் உருவபொம்மைய கொளுத்துறீங்களே,

ராவணன்: ஏண்டா ஒவ்வொரு தசராவுக்கும்
என் உருவபொம்மைய
கொளுத்துறீங்களே,
நான் என்ன உங்க பொண்டாட்டியவாடா
தூக்கிட்டு போனேன் ?"

ஒரு முதலை பண்ணையில் ஒரு போட்டி வைத்திருந்தார்கள்.

ஒரு முதலை பண்ணையில் ஒரு போட்டி வைத்திருந்தார்கள்.


யார் அந்த முதலைகள் 🐊🐊 நிறைந்த குளத்தில் குதித்து குளத்தின் மறு கரையை அடைகிறார்களோ, அவர்களுக்கு ஒரு கோடி 💸💵💸 ரூபாய் பரிசு என்று.


அனைவரும் அமைதியாக நின்று கொண்டிருந்தார்கள்.

 அப்போது ஒருவன் 🤸🏻‍♂ மட்டும் குளத்தில் குதித்து மறு கரையை🏊🏼 அடைந்தான்.

கருவுற்ற மான் தன் மகவை ஈயும் ஒரு நிலை...

கருவுற்ற மான் தன் மகவை ஈயும் ஒரு நிலை..
அது ஒரு அடர்ந்த புல் வெளியை கண்டது,
அதன் அருகே ஒரு பொங்கும் ஆறு.
இதுவே சரியான இடம் என்று அது சென்றது அங்கு.
அப்போது கருமேகங்ள் சூழ்ந்தன.
மின்னலும் இடியும் இசையாட்சி செய்ய ஆரம்பித்தன.
மான் தன் இடப்பக்கம் பார்த்தது.. அங்கே ஒரு வேடன் தன் அம்பை மானை நோக்கி குறி பார்த்து நின்று கொண்டிருந்தான்.

மதிப்பில்லாமல் செய்யப்படும் எந்த ஒரு செயலும் வெற்றி பெறுவதில்லை.

அருமையான செய்தி

டாட்டா பிர்லாவிற்கு ஒரு நண்பர் இருந்தார். அவர் பேனா வைக்கும் இடத்தை அடிக்கடி மறந்து விடுவார். இதனால் விலை மலிவாக நிறைய பேனா வாங்கி, தொலைத்து விடுவார். இந்த கவனக் குறைவை நினைத்து மிகவும் மனம் வருந்தினார்.

அப்போது டாட்டா தன் நண்பருக்கு ஒரு ஆலோசனை வழங்கினார். மிகவும் விலை உயர்ந்த பேனா ஒன்று வாங்க சொன்னார். அதன் படியே 22 காரட் தங்கத்தால் ஆன பேனா ஒன்றை வாங்கினார்.

அதிகாலை வேலை காவல் நிலைய தொலைபேசி மணி அழைக்க, காவலர் கந்தன் தொலைபேசியை எடுத்துக் பேசினார்.

காவலர் : ஹலோ V 7 காவல் நிலையம், சொல்லுங்க.

எதிர் முனை : சார் இங்க ஒருத்தரச் சுட்டுட்டார் சார்.

காவலர் : சுட்டது யாருன்னு தெரியுமா?

எதிர் முனை : தெரியும் சார்.

காவலர் : யார் சுட்டது?

தெரிந்துக்கொள்வோம்.....

1. தமிழ் வருடங்கள்(60)

2. அயணங்கள்(2)

3. ருதுக்கள்(6)

4. மாதங்கள்(12)

5. பக்ஷங்கள்(2)

கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்..இறை என்று சொன்னால் கேட்கவில்லை என்றால் அறிவியலை கூறுங்கள் :


1. பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்களில்தான் கோயில்கள் இருக்கும்.

2. சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும், இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும்.

3. கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என்று அழைக்கப்படும் மூலவர் சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும்.

ஓர் ஆசிரியர் என்பவர் எப்படி இருக்க வேண்டும் என்று மாணவர்கள் நினைக்கின்ற கருத்து...

1. எங்களை அடிக்க கூடாது.

2. எங்களுக்கு பாடம் நன்றாக சொல்லித் தர வேண்டும்.

3. வகுப்பறையை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

4. நல்ல பண்புடைய நபராக இருக்க வேண்டும்.

5. எங்கள் வகுப்பறையிலேயே இருக்க வேண்டும்.

எல்லா பெற்றோருக்கும் தங்கள் பெண்ணை ஒரு நல்ல இடத்தில் கட்டிக் கொடுக்க வேண்டும் என்ற கனவு நியாயமான ஒன்று தான்..!!

எல்லா பெற்றோருக்கும் தங்கள் பெண்ணை ஒரு நல்ல இடத்தில் கட்டிக் கொடுக்க வேண்டும் என்ற கனவு நியாயமான ஒன்று தான்..!!

அவளுடைய பெற்றோரும் அப்படி தான் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர்..!! படித்த மாப்பிள்ளை. கை நிறைய சம்பாதிக்கும் ஒருவன். இருவருக்கும் இருவரையும் பிடித்தது..!!

உடனே நிச்சயம் செய்து விட்டனர்..!! இருவரும் தினமும் அலைபேசியில் பேசத் தொடங்கினர்..!!

தெய்வத்தின் பார்வையில் நேரங்கள்...!!👇�

🌞 எது நல்ல நேரம் ?
• நல்லதை நினைக்கும் போது
• நல்லதை பார்க்கும் போது
• நல்லதை கேட்கும் போது
• நல்லதை பேசும் போது

🌞 எது இராகு காலம் ?

பொறியியலாளர் ரித்துராஜ் சஹானி 1997ம் வருடம் அமெரிக்காவில் குடியேறியவர்...

மும்பை அந்தேரியில்
10-வது மாடியில் இவருடைய வயதான பெற்றோர் வசித்து வந்தனர்.

தந்தை 2013ல் காலமானார். அதன்பின் தாயார் மட்டும் தனியாக பிளாட்டில் வசித்தார்.

ஏப்ரல் 2016ல் ரித்துராஜ் கடைசியாக தாயாரிடம் போனில் பேசியுள்ளார்.

நேற்று காலை இந்தியா வந்த அவர் அப்பார்ட்மெண்டில் வசிக்கும் தாயை காண சென்றார்.

கடவுளின் கணக்கு

 நம்மில் அனைவருக்கும் அடிக்கடி ஒரு எண்ணம் தோன்றும். நம் விஷயத்தில்

கடவுள் கொஞ்சம் பாரபட்சமாய் விதித்து விட்டாரோ என்ற வருத்தம் ஏற்படும்.

நாம் எத்தனையோ பேருக்கு எத்தனை நன்மைகள் செய்திருக்கிறோம். பின் நமக்கு ஏன் இப்படி என்று வருத்தப்படுவோம். அப்போது பெரியவர்கள் நமக்கு ஆறுதலாய் அவன் கணக்கு யாருக்குத் தெரியும். நமக்கு புரியவில்லை என்பதால் அது தவறு என்று நினைப்பது சரியல்ல என்பார்கள். இந்த வாதம் எனக்கு புரியாமல் இருந்த்து. நேற்று வரை.

ஒரு மனிதன் தெருவில் நடந்து கொண்டிருந்தான்...

ஒரு மனிதன் தெருவில்
நடந்து கொண்டிருந்தான்.
திடீரென ஒரு குரல்
‘அங்கேயே நில். இன்னும்
ஒரு அடி எடுத்து வைத்தால்
ஒரு செங்கல் உன் தலையில்
விழும்’

ஒரு நடுத்தர குடும்பத்து வீட்டில் நடக்கும் பதிவு,...


ஒரு நடுத்தர குடும்பத்து வீட்டில் நடக்கும் பதிவு,

 மகனுக்கு வீட்டில் இருக்கவே
பிடிக்கவில்லை.

‘பேஃனை ஆப் பண்ணாமல் வெளியே போகிறாய்,

 ஆளில்லாத ரூமில் டி.வி. ஓடுகிறது பார், அதை அணை,

 பேனாவை ஸ்டாண்டில் வை,
கீழே கிடக்குது பார்.

மண்ணுளி பாம்பு நம்மை நாக்கினால் அல்லது கடித்தால்...

மண்ணுளி பாம்பு நம்மை நாக்கினால் அல்லது கடித்தால் நமக்கு கை, காலில் குஷ்டம் நோய் வரும் என கிராம மக்களால் நம்பப் பட்டது. இது உண்மை அல்ல. இப்படி ஒரு பயம் இருந்தால் தான் நமது மக்கள் அந்த பாம்பினை தொட மாட்டார்கள் என்பதற்காக நமது முன்னோர்கள் காரணத்துடன் சொல்லி வைத்த பொய் அதுவாகும்.

SAND BOA என ஆங்கிலத்தில் அழைக்கப் படும் மண்ணுளி பாம்புகள் தற்போது இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நிலங்களில் மட்டுமே வாழும் சூழ்நிலை உள்ளன.

ஈட்டிய விடுப்பு (EL) பற்றிய முழு விளக்கங்கள்...

* தகுதிகாண் பருவத்தில் உள்ளவர்கள் EL எடுத்தால் probation period தள்ளிப்போகும்.

* பணியில் சேர்ந்து ஒரு வருடம் முடிந்ததும் ஈட்டிய விடுப்பினை ஒப்படைத்து பணமாகப் பெறலாம். ஆண், பெண் இருவரும்.

* தகுதிகாண் பருவம் முடிக்கும் முன்பு (பணியில் சேர்ந்து 2 வருடங்களுக்குள்) மகப்பேறு விடுப்பு எடுத்தால் அந்த வருடத்திற்கான EL -ஐ ஒப்படைக்க முடியாது. EL நாட்கள் மகப்பேறு விடுப்புடன் சேர்த்துக்கொள்ளப்படும் (உதாரணமாக - அவரது கணக்கில் 10 நாட்கள் EL உள்ளது என்றால் மகப்பேறு விடுப்பில் அந்த 10 நாட்களை கழித்துவிட்டு (180-10= 170) மீதம் உள்ள 170 நாட்கள் மட்டுமே வழங்கப்படும். எனவே மகப்பேறு விடுப்பு எடுக்கும் முன்பே கணக்கில் உள்ள EL-ஐ எடுத்துவிடுவது பயனளிக்கும்)

பகவத்கீதையின் மிகச்சிறந்த வசனங்கள் .....

1. அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது.அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.

2. கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

3. ந‌ம்மு‌ட‌ன் வா‌ழ்வோரை‌ப் பு‌ரி‌ந்து கொ‌ள்வத‌ற்கு ந‌ம்மை முத‌லி‌ல் பு‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

கடவுளின் தரிசனம் வேண்டி பலகாலம் தவம் இருந்த அந்த நாட்டின் மன்னனுக்கு அன்று கடவுளின் தரிசனம் கிடைத்தது..

கடவுளின் தரிசனம் வேண்டி பலகாலம் தவம்
இருந்த அந்த நாட்டின் மன்னனுக்கு அன்று கடவுளின் தரிசனம் கிடைத்தது.. பெரும் மகிழ்ச்சி அடைந்த மன்னன் கடவுளிடம் ஒரு வரம் கேட்டான்.. கடவுளும் என்ன வரம் வேண்டுமோ கேள் என்று மன்னனிடம் சொல்ல.. மன்னனும் தன்னுடைய விருப்பத்தை கடவுளிடம் வரமாக கேட்டான்..

திருமணம் முடிந்து மணப் பெண் மாப்பிள்ளை வீட்டிற்கு செல்ல தயாராகி கண்களில் கண்ணீருடன் புறப்படுகிறாள்.

திருமணம் முடிந்து மணப் பெண் மாப்பிள்ளை வீட்டிற்கு செல்ல தயாராகி கண்களில் கண்ணீருடன் புறப்படுகிறாள்.
அப்போது அதை பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன் அவன் தந்தையிடம் கேட்கிறான்.

மகன் : அப்பா... ஏன் அந்த கல்யாணப் பெண் அழுகிறாள்?.

அப்பா : ஏன் என்றால் அவள் தனது பெற்றோரைப் பிரிந்து ஒரு புது இடத்திற்கு செல்கிறாள்.

மகன் : அப்போ அந்த மணமகன் ஏன் அழவில்லை?".

அப்பா : அவன் நாளைல இருந்து தினமும் அழுவான்.

நெஞ்சைத் தொட்ட குட்டிக்கதை...

ஒருவர் எதற்கெடுத்தாலும்
மனைவியுடன்
சண்டைப் போடுவார்..

ஒருநாள் 'ஆபீஸ்' போய்
வேலை செய்து பார்..
சம்பாதிப்பது எவ்வளவுக் கஷ்டம்
என்று புரியும் என்று அடிக்கடி சவால்
விடுவார்..

மஞ்ச கயிறு எடுத்து கையில கட்டுனா ....

மஞ்ச கயிறு எடுத்து கையில கட்டுனா அது "காப்பு"..
அதுவே ஒரு பொண்ணு கழுத்துல கட்டுனா
அது நமக்கு நாமே வச்சுக்குற "ஆப்பு"..!

*****

~மாமா பொண்ணும், உப்புமாவும் ஒன்னு!! வேற எதுவுமே கிடைக்காத பட்சத்துல நம்மளோட தலையில கட்டப்படும்!!


                                                                              *****

~தப்பை மன்னிக்கிறவன் மனுஷன்.. தப்பே பண்ணாம மன்னிப்பு கேட்குறவன் புருஷன்

~நிம்மதியாக இருக்கும் வயதில் மனைவியைத் தேடுவதும், மனைவி வந்தப்பின் நிம்மதியைத் தேடுவதுமே..  ஆண்களின் வாழ்க்கை தேடல்..

~ஆட்டக்காரிக்கும் வீட்டுக்காரிக்கும் என்ன வித்தியாசம்..? ஒரு பாட்டுக்கு ஆடுனா அவ ஆட்டக்காரி.. அவபாட்டுக்கு ஆடுனா அவ வீட்டுக்காரி..!!

~திருமண மேடையில் மணமகனுக்கு கொடுக்கப்படும் கடைசி வார்னிங் "பொண்ண கூப்பிடுங்க..
நல்ல நேரம் முடியப் போகுது"..

~வாக்கிங் கூட்டிட்டு போகாத நாய்க்கும், ஷாப்பிங் கூட்டிட்டு போகாத பொண்டாட்டிக்கும் கண்டிப்பா ஒரு நாள் வெறி பிடிச்சுடும்.

                                                                          ******

~கணவனும் மனைவியும் கடைத்தெருவில் நடக்கும் பொழுது, மனைவி சற்று தொலைவில் இருந்து விளம்பர போர்டை கண்டு வியந்தாள்....
Banaras Saree Rs 10/-
Nylon Saree Rs 8/-
Cotton Saree Rs 5/-
மனைவி : "500 ரூபாய் பணம் கொடுங்கள்.. நான் 50 புடவை வாங்கணும்.."
கணவன் : "அது இஸ்திரி போடும் கடை எரும மாடு...!!!

******

~அப்பா:என்னடா...உன் அம்மா காலைல இருந்து பேசாம இருக்கா?"

பையன்:அம்மா 'lipstick' எடுத்து தர சாென்னாங்க...நான் தாெரியாம 'fevistick' எடுத்துக் காெடுத்துட்டேன்பா."

அப்பா:நீ என் மகன் இல்லடா என் குல சாமிடா...!"

கொஞ்சம் லென்த்தான ஜோக் தான்... பட் ஸ்ட்ரென்த்தான ஜோக்'குங்க..

😂ஒரு பள்ளிக்கூடத்துக்கு ஆய்வாளர் ஒருத்தர் வந்தாரு. அந்த பள்ளிக்கூடத்தப் பத்தி ஏற்கனவே நிறைய அவரோட வேலை பாத்தவங்க சொல்லி இருக்காங்க... 'இது ஒரு ஏடாகூமான ஸ்கூலு பார்த்து ட்ரீட் பண்ணுங்க'ன்னு அதனால எதுக்கும் தயாராத்தான் அவர் வந்தார்...😂

😂முதல்ல ஒரு வகுப்புக்குள்ள   நுழைஞ்சாரு... உடனே பசங்க எல்லாம் எழுந்திருச்சு நின்னு வணக்கம் சொன்னாங்க...

😂சரி... எடுத்தவுடனேயே எதாவது கேள்வி கேக்க வேண்டாம்ன்னு முதல் பையன எழுப்பி...😂

😂"உன் பேர் சொல்லு"

பேரறிஞர் அண்ணா முதல்வராக இருக்கிறார்... சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது...

பேரறிஞர் அண்ணா முதல்வராக இருக்கிறார்... சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது...

எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் அண்ணாவின் மீதும் , ஆட்சியின் மீதும் அடுக்கடுக்காக பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்...

கழக உறுப்பினர்கள் அண்ணாவின் பதிலுரைக்காக காத்திருந்தனர்... நாவன்மையால் நானிலத்தையே கட்டிப் போடும் நாவரசர் அமைதியாக இருக்கிறார்...

ஏமாற்றமடைந்த உடன்பிறப்புகள் பின்னர் அண்ணாவிடம் வாளாயிருந்தது பற்றி வினவினர்...

மாரடைப்பு வர காரணிகள்:

உலகத்தில் 30சதவிகிதம் மக்கள் மாரடைப்பால் இறக்கிறார்கள்.

1. ஒருவருக்கு முதல் டிகிரி உறவு (பெற்றோர், சகோதர சொந்தம்) மற்றும் இரண்டாம் டிகிரி உறவுகளுக்கு (மாமா, அத்தை, பாட்டி etc.,) ஆகிய இருவருக்கும் இதய பிரச்சினை 60வயதிற்குள் வந்தால், உங்களுக்கு பத்து மடங்கு (1000%) அளவிற்கு இதய நோய் வருவதற்கு வாய்ப்பு உண்டு.

2. இரவில் லேட்டாக தூங்குபவர்களுக்கு, அவர்கள் எட்டு மணி நேரம் தூங்கினாலும் சரி, இதய நோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

நோய்கள் குணமாகும் இடங்கள் !...

நோய்கள் குணமாகும் இடங்கள் மருந்தோ மருத்துவமனையோ கிடையாது.

இதோ

1 - இயற்கை வழி வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருட்கள்.

2 - மூலிகை தேனீர்

3 - சுக்கு மல்லி காபி

எது வாழ்க்கை?

💮 உலகப்பேரழகி  கிளியோபாட்ராவின்  கல்லறை  வாசகம்.

"உலகத்திலேயே அழகானப் பிணம்   இங்கே  உறங்கிக்கொண்டு இருக்கிறது. நல்ல  வேளை  இவள்  பிணமானாள்,  இல்லாவிட்டால்   இந்தக் கல்லறைக்குள்  ரோமாபுரி  சாம்ராஜ்யமே  பிணமாகியிருக்கும்."

💮 மகா அலெக்சாண்டரின்  கல்லறை  வாசகங்கள்.

தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்று தலைக்கனம் பிடித்த பண்டிதர் ஒருவர் இருந்தார்.

தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்று தலைக்கனம் பிடித்த பண்டிதர் ஒருவர் இருந்தார்.

அடர்த்தியான புருவம், பெரிய மீசை, அடிக்கடி மொட்டை போட்டுக் கொள்ளுவதால் ஈர்குச்சி  போல் காணப்படும் முடிகளுடன் கூடிய தலை. இதுவே அவரது  அடையாளம்...

வீதியில் அவரைக்  கண்டு விட்டாலே மக்கள் ஓடி ஒளிந்து கொள்வார்கள்...

ஏனென்றால் கண்ணில் படும் யாராயிருந்தாலும்  ஏதாவது கேள்வி கேட்டு மடக்கித் தமது வாதத்திறமையால்  மட்டந்தட்டிவிடுவார்.

இதில் சிலர் அழுது விடுவது  கூட உண்டு...

1300 வருடங்களாக நீரில் மிதக்கும் விஷ்ணு சிலை. அறிவியலை மிஞ்சிய அதிசயம்.


பொதுவாக பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பது போன்ற விஷ்ணு சிலைகளையும் படங்களையும் நாம் பார்த்திருப்போம். அனால் மனிதர்களை போல் மல்லாக்க படுத்துக்கொண்டு 13 நூற்றாண்டுகளாக நீரில் மிதந்துகொண்டிருக்கும் ஒரு அதிசய பெருமாள் சிலையை பற்றி இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

தொகுத்துத் தருபவர்:💎💎💎💎💎💎💎💎 Dr. DHAMODHARAN MD (Acu) அவர்கள்...

    அவசியம் கடைபிடிக்க வேண்டிய  ஆரோக்கிய குறிப்புகள்!! Uswa kbk          🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀

1🕹. பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள். தாகமெடுத்தால் தண்ணீர்  குடியுங்கள். குளிர் பானங்களை தவிர்த்து விடுங்கள்.

2🕹. பசிக்கும் போது பயமில்லாமல் பிடித்த உணவை போதுமான அளவு சாப்பிடுங்கள். பசிக்கும் போது எந்த உணவு சாப்பிட்டாலும் அது இலகுவாக ஜீரணமாகிவிடும். உணவை நிதானமாக மென்று சாப்பிடுங்கள். டிவி பார்த்துக் கொண்டு சாப்பிடாதீர்கள்.

மன அழுத்தம் நீங்க 30 வழிகள்...

வெளியே தெரியாத வலி, சொல்லத் துடித்தாலும் சொல்ல விடாமல் தடுக்கிற தயக்கம், எந்தச் செயலையும் செய்ய விடாமல் சோர்ந்துபோகச் செய்யும் மன உளைச்சல் ஆகியவை மன அழுத்தத்தின் அடித்தளங்களும் அறிகுறிகளும் ஆகும்..வாழ்வின் போக்கு பிடிபடும் வரையில் அழுத்தங்களின் தாக்குதலுக்கு ஆளாகும் பலரும் ஆடிப்போய் விடுகிறார்கள். செய்த செயல் ஒன்றிற்கு எதிர்பார்த்த விளைவு ஏற்படாத போதும், எதிர்பாராத எதிர் விளைவுகள் ஏற்படும்போதும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.

ஆறு வயது பையன் அவன்...

ஆறு வயது பையன் அவன்.

எதேச்சையாக மூன்று வயது பெண்குழந்தையின்
புகைப்படம் ஒன்று அவனுக்குக் கிடைத்தது.

அவன்
அந்தக் குழந்தையை வெகு தீவிரமாக நேசிக்கத்
தொடங்கினான்.

ஆனால் அவள் யாரென்பதை தேடிக் கண்டுபிடிக்க
மட்டும் அவனால் முடியவில்லை.

ஒருவர் காபி shop விட்டு வெளியே வரும் போது ஒரு வித்தியாசமான இறுதி ஊர்வலம் செல்வதை பார்த்தார் .......

ஒரு சவப்பெட்டி முதலில் எடுத்து செல்கிறார்கள் ...
அதை தொடர்ந்து மற்றொரு சவப்பெட்டி செல்கிறது .
அதற்கு பின்னால் ஒரு மனிதன்
கருப்பு நாயை பிடித்து கொண்டு நடந்து செல்கிறார்..🐕

அவருக்கு பின்னால் ஒரே வரிசையாக 200
ஆண்கள் நடந்து செல்கிறார்கள் .🚶🏼🚶🏼🚶🏼

கறிவேப்பிலை ...

பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்துவிடுவோம்.

🍃 ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்று பார்ப்போம்.

🍃 கறி வேப்பிலை இலையின் மருத்துவ இரகசியங்கள்

♻ இதில் இருப்பவை :-

படித்த போதே கண்கலங்க வைத்த... 6 ஆழகான குட்டி உண்மை சம்பவங்கள்:

படிக்கும் போது பாருங்கள்,  உங்களை கூட உணர்ச்சிவச படவைக்கும் ...

சம்பவம்-1 👇👇👇👇👇👇

24 வயது வாலிபன் இரயில் ஜன்னல் வழியேபார்த்து கத்தினான்."அப்பா இங்கே பாருங்கள்,"..

மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால் ஓடுகின்றன என்று!"

அவனருகில் இருந்த அவனது அப்பா
சிரித்துக்கொண்டார்.

கெட்ட கொழுப்புக்கள் இரத்தக்குழாய்கள் மற்றும் இதர முக்கியமான உறுப்புக்களில் படிந்து, இரத்த அழுத்தத்தை அதிகரித்து, இறுதியில் மாரடைப்பை ஏற்படுத்தி, இளமையிலேயே இறப்புக்கு வழிவகுக்கின்றன.

கெட்ட கொழுப்புக்கள் இரத்தக்குழாய்கள் மற்றும் இதர முக்கியமான உறுப்புக்களில் படிந்து, இரத்த அழுத்தத்தை அதிகரித்து, இறுதியில் மாரடைப்பை ஏற்படுத்தி, இளமையிலேயே இறப்புக்கு வழிவகுக்கின்றன.

அதற்காக கொழுப்புள்ள உணவுப் பொருட்களை தொடக்கூடாது என்பதில்லை. நல்ல கொழுப்புள்ள உணவுப் பொருட்களை தேர்ந்தெடுத்து உணவில் சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, இதயமும் நன்கு செயல்படும்.

ஒரு மகாபாரதப் பதிவு..கலியின் ஆரம்பம்...

பஞ்சபாண்டவர்களில் ஒருவரான சஹாதேவன் சந்தைக்குள் நுழைந்தான். அழகான குதிரையை அவனும் பார்த்தான். உடனே குதிரையின் உரிமையாளரை நெருங்கி, "குதிரை என்ன விலை? என்று கேட்டான்.

குதிரையின் உரிமையாளரோ,

 "ஐயா! இந்த குதிரை விற்பனைக்கு அல்ல. நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொன்னால், குதிரையை இலவசமாகவே கொடுப்பேன்" என்றார். சகாதேவன் உடனே, "சரி கேள்வியைச் சொல்லுங்கள்" என்றான்.

ஒவ்வொரு கெட்ட குணமும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்...

பெருமையும், கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்..
☺😟😏
கவலையும், துயரமும் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்கும்..
😔😒😞
துக்கமும், அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும்..
😪😥😰
பயமும், சந்தேகமும் சிறுநீரகத்தை சீரழிக்கும்..
😣😖🙁
எரிச்சலும், கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்..
😠😡☹
அமைதியும், மகிழ்ச்சியும் அனைத்து நோயையும் குணமாக்கும்..
🙂😊🤗
சிந்தனைக்கு ஏற்பதான் நமது உடலில் உள்ள சுரப்பிகளின் வேலை நடைபெறுகின்றன..
☺☺☺
சந்தோஷமாக இருந்தால் நல்ல ஜெல் சுரக்கும்..
இல்லையேல் அமிலம் போன்று சுரந்து உடல் கேடாகும்..
😨😱😀
நமக்கு என்றும் நாம்தான் டாக்டர்...

சிந்திக்க சில நொடிகள்...

நீங்கள்
ஒரு கல்லை எடுத்து
நாயை பார்த்து அடியுங்கள், அந்த நாய் பயந்து ஓடிவிடும்...

அதே கல்லைக் கொண்டு தேன் கூட்டில் உள்ள ஈக்களின் மீது அடியுங்கள், உங்களை
ஒரு கை பார்த்து விடும்...

தேனீக்களை விட வலிமையானது
நாய் தானே?

இது சாப்பாட்டு தத்துவம்...

🎊"தோல்வி என்பது பெருங்காயம் போல... தனியாகச் சாப்பிட்டால் கசக்கும்; வெற்றி என்னும் சாம்பாரில் கரைந்து விட்டால் மணக்கும !🎊

🎊 ஒரு குக்கரைப் போல இருங்கள்.... பிரஷர் அதிகமாகும் போது விசிலடித்துக் கொண்டாடுங்கள்!🎊

🎊 லட்சியமும் முட்டையும் ஒன்று .... தவற விட்டால் உடைந்து விடும்!!!🎊

🎊சோம்பேறித்தனம் என்பது மிளகாய்க் காம்பு போல.... கிள்ளி எறிந்து விட வேண்டும்!!!🎊

உலகின் முதல் மொழி தமிழ்! மொழி அறிவு இன சிறப்பு !!!

ஆங்கிலம் கூட தமிழிலிருந்துதான் வந்தது !!!
ஆதாரம் இதோ...........
W.W skeat என்பவர், The Etymological dictionary of the English language இல் உள்ள 14,286 சொற்களில் 12,960 வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை (அதாவது 90% வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை) என்கிறார் ஆய்வின்படி.
எடுத்துகாட்டுகள் :
Cry - ”கரை” என்ற தூயத் தமிழிலிருந்து வந்தது.

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம்.

அ -----> எட்டு
ஆ -----> பசு
ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி
உ -----> சிவன்
ஊ -----> தசை, இறைச்சி
ஏ -----> அம்பு

குட்டி குட்டி கண்ணனாம்...

குட்டி குட்டி கண்ணனாம்
குறும்பு செய்யும் கண்ணனாம்
கண்ணடிக்கும் கண்ணனாம்
கண் கவரும் கண்ணனாம்

முத்துப் பல் கண்ணனாம்
முத்தம் தரும் கண்ணனாம்
குழலூதும் கண்ணனாம்
குஷியாக்கும் கண்ணனாம்

அது ஒரு சைக்காலஜி வகுப்பு...

அது ஒரு சைக்காலஜி வகுப்பு... ஆசிரியர் வந்து, "இன்னைக்கி நாம ஒரு கேம் விளையாடப்போறோம் ..." என்று கூறிவிட்டு ஒரு பெண்ணை அழைத்து, "இந்த போர்டில் உனக்கு முக்கியம் என்று தோன்றும் 30 பேர் பெயரை எழுதுங்கள்..." என்று பணித்தார்.

அந்த பெண்ணும் எழுதினார். பெயர்களை கவனித்த அவர், "இதில் உங்களுக்கு முக்கியம் இல்லை எனும் ஐந்து பேர் பெயரை அழித்து விடுங்கள்" என்றார்... அந்த பெண் உடன் பணிபுரியும் ஐந்து பேரின் பெயரை அழித்தார்.. அடுத்து மீண்டும் ஐந்து பேர் பெயரை அழிக்க சொன்னார். அந்த பெண் பக்கத்துக்கு வீட்டினர் ஐந்து பேரின் பெயரை அழித்தார்...

பெண்களைக் கட்டிக் கொடுத்து கடமைகளை முடிச்ச ஒரு மாமனாரிடம் , ஒரு மருமகன் பேசிட்டு இருந்தாரு..

"மாமா, உங்க கடமையெல்லாம் சரிவர நிறைவேத்திட்டீங்க.. பெரிய விஷயம் .. You are great... !"

"ஆமாம் மாப்பிள்ளை.. சந்தோஷம்.. நிம்மதியா இருக்கேன்.. "

"ஒரே ஒரு சின்னக் குறை தான் மாமா.. "

"என்னது..?"

"பொண்ணுங்களைக் கொஞ்சம் புத்திசாலியா வளர்த்திருக்கலாம்.. "

.அத விடுங்க மாப்பிள்ள... அப்புறம் அதுக்கேத்த மாதிரி புத்திசாலி மாப்பிள்ளையா தேடி இருக்கணும்.. பெரிய்ய்ய வேலையாப் போயிருக்கும்...

விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், ஆர்வம் இருந்தும் விவசாயம் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் அனைவரும் விவசாயத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!

நாம் அறியாதவை !!

🌲 இந்தியாவில் சுமார் 2100 வகையான மரங்கள் உள்ளன. இதில் உயரம் அதிகமான மரம் தேவகுரு என்பதாகும்.

🌳 உயரம் குறைவான மரம் இடமுறுக்கி என்பதாகும். இது 7 அடி உயரம் உடையது.

🌲 உலகிலேயே சிறிய மரம் வில்வோ மரம் தான். இது சுமார் 3 அங்குலம் உயரம் உடையது. இதை செல்லமாக குள்ள வில்லோ என்றும் கூறுவார்கள். இதில் 300 வகைகள் உள்ளன.

#ஞானத்தை #யாரிடம் #கற்பது ?

”குரங்கு சாவதற்கு ஒரே ஒரு புண் போதும்

முட்டாள் சாவதற்கு ஒரே ஒரு பிரச்சினை போதும்” என்று
கிராமத்தில் ஒரு உவமான வாக்கியம் உண்டு.

காடுகளில் வாழும் குரங்குகள் பெரும்பாலும் நோய் வாய்ப்படுவதில்லை.

ஆனால் அவைகளுக்கு ஒரே ஒரு புண் வந்துவிட்டால் போதும்.

அதை நோண்டி நோண்டிப் பெரிதாக்கித் தன்னை அழித்துக் கொள்ளும்.

ஆறு அறிவு மனிதனுக்கு ஆயிரம் நோய் என்கிறோம். ஏன்?

உணவு
உறக்கம்
தண்ணீர்
வேலை
மன அமைதி

நாம் ஏற்கனவே உண்ட உணவு செரித்த பின் மீண்டும் பசித்து சாப்பிட்டால் இந்த உடலுக்கு எந்த மருந்தும் தேவையில்லை என நினைவில் கொள்ளுங்கள்.

பசியின் அளவு தெரியாமல் அதிகமாக சாப்பிட்டால் நோய் அளவில்லாமல் வரும்.

ஸ்காட்லாந்து நாட்டில் ஃப்ளெமிங் என்ற பெயரில் ஒரு ஏழை விவசாயி இருந்தார்.

ஸ்காட்லாந்து நாட்டில் ஃப்ளெமிங் என்ற பெயரில் ஒரு ஏழை விவசாயி இருந்தார். ஒருநாள் வயலில் வேலை செய்யப் போனபோது உதவி செய்யக் கோரி ஒரு குரல் அருகிலிருந்த சதுப்பு நிலத்தில் இருந்து கேட்டது. தன் கையிலிருந்தவற்றை அப்படியே போட்டுவிட்டு ஓடினார் ஃப்ளெமிங். ஒரு சிறுவன் இடுப்பளவு ஆழத்தில் அந்தப் புதை மணலில் சிக்கிக்கொண்டு, வெளியே வர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தான். நல்லவேளையாக ஃப்ளேமிங் அவனை காப்பாற்றினார். ஃப்ளேமிங் இல்லையென்றால் அந்தச் சிறுவன் கொஞ்சம் கொஞ்சமாக புதை மணலில் மூழ்கி இறந்திருப்பான்.

தாய் தந்தையை வணங்குவதால் ஏற்படும் நன்மைகள்.

இந்த பூமியை விட பாரமானவள் தாய்

ஆகாசத்தை விட உயர்ந்தவர தந்தை

ஒரு முறை தாய் தந்தையர்க்கு நமஸ்கரித்தால் பசுவை தானம் செய்த பலன் கிட்டும்.
ஸத்யம்_தாய்,
ஞானம்_தந்தை.

பத்து உபாத்யாயர்களை விட ஆசார்யர்சிறந்தவர்.

தன்னைப்பற்றி தாழ்வு மனப்பான்மை கொண்ட ஒருவன் கடவுளை வேண்டி தவமிருந்தபின் அவன் முன்னே கடவுள் தோன்றினார்.

தன்னைப்பற்றி தாழ்வு மனப்பான்மை கொண்ட ஒருவன் கடவுளை வேண்டி தவமிருந்தபின் அவன் முன்னே கடவுள் தோன்றினார்.

👦 அவன் கடவுளிடம் என்னை ஏன் இப்படி படைத்தீர்கள்?

👤என் வாழ்க்கையின் மதிப்பு தான் என்ன என்று கேட்டான்.

🔥👍💎கடவுள் அவனிடம் ஒரு சிகப்பு கல்லை கொடுத்து இதன் மதிப்பை அறிந்துவா ஆனால் விற்கக்கூடாது என்றார்.

மானிடா உன் தவம் கண்டு வியந்தேன். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்.

கடவுள்: மானிடா உன் தவம் கண்டு வியந்தேன். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்.
மனிதன் : சுவாமி, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ரோடு போடணும்.
கடவுள் : ரோடு போட முடியாதுப்பா. வேறு கேள்....
மனிதன் : என் மனைவி என்னை எதுத்துப் பேசக்கூடாது. நான் சொல்றத மட்டும் தான் கேக்கனும்.
கடவுள் : அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா போடணுமா, டபுளா போடணுமா ???

நேரான மரங்களே முதலில் வெட்டப் படும் - சாணக்கியர் சொல்.


நேர்மையான மனிதர்களே முதலில் வீழ்த்தப் படுகிறார்கள்.

கல்வித்துறை செயலராக திரு. உதயசந்திரன். இ.ஆ.ப அவர்கள் பொறுப்பேற்ற போதே கல்வித்துறை இனி மெல்ல முன்னேற்றம் பெறும் என்ற நம்பிக்கைக் கீற்று கல்விப் பணியை நேசிக்கும் ஒவ்வொரு நல்லாசிரியரின் மனதிலும் எழுந்தது.

தொடர்ந்து,

இன்று பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு.

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1058 விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் புதிய விரிவுரையாளர்களை நியமிக்க போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இதன்படி, இன்று போட்டித் தேர்வு நடக்கிறது.

இந்த தேர்வு எழுத தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 70 ஆயிரத்து 363 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்காக 84 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 31 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.

பிளஸ் 2 துணைத் தேர்வு: தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை செப்.18 முதல் பதிவிறக்கம் செய்யலாம்!!

பிளஸ் 2 துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தங்களது தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை  இணையதளத்தில் திங்கள்கிழமை (செப்.18) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு:-

ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்ற 2,373 பேருக்கு செப்.19-இல் கலந்தாய்வு.

தமிழகத்தில் உள்ள ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்ற 2,373 பேருக்கு செப்.19-இல் இணையதளம்  மூலம் கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை (செப்.15) வெளியிட்டுள்ள அறிவிப்பு:-
அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, நியமனம் செய்யும் வகையில் ஆசிரியர் வாரியத்தின் சார்பில் போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.

குரூப் - 4' பதவியில் 4,682 பேர்!!!

அரசு துறையில் காலியாக உள்ள, 'குரூப் - 4' இடங்களுக்கு, 4,682 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:'குரூப் - 4'ல் அடங்கிய, இளநிலை உதவியாளர், தட்டச்சர், ஸ்டெனோ ஆகிய பதவிகளுக்கு, 2016, நவ., 6ல் தேர்வு நடந்தது.

டிரைவிங் லைசென்சுடன் ஆதார் எண் இணைக்கப்படும்.. மத்திய அமைச்சர் அடுத்த அதிரடி.

டிரைவிங் லைசென்சுடன் விரைவில் ஆதார் எண்ணை இணைக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு.

அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு:  ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் தேசிய அளவிலான திறனாய்வு தேர்வு பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு நவம்பர் 4ம் தேதி நடக்கிறது. 


இந்த தேர்வு எழுத செப்டம்பர் 14ம் தேதி வரை பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று முன்பு அறிவிக்கப்பட்டது. இப்போது, விண்ணப்பிக்கும் தேதி 18ம் தேதி மாலை வரை நீட்டிக்கப்படுகிறது. இதை பள்ளி மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆசிரியர் தகுதி படிப்புக்கு பதிவு வரும் 30 வரை அவகாசம் நீடிப்பு.

இணையதளம் முடங்கியதால், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான, தகுதி படிப்புக்கான பதிவுக்கு, வரும், 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், அதற்கான ஆசிரியர் தகுதி தேர்வில், கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். 

வெள்ளி, 15 செப்டம்பர், 2017

பத்தாம் வகுப்புத் துணைத்தேர்வர்களுக்கு நாளை முதல் தேர்வுக் கூட நுழைச்சீட்டு.

பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்த தேர்வர்கள் சனிக்கிழமை (செப்.16) முதல் தங்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி வியாழக்கிழமை (செப்.14) வெளியிட்டுள்ள அறிவிப்பு:-

அமலுக்கு வருகிறது டிஜிட்டல் எஸ்.ஆர்.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், நான்கு லட்சம் ஆசிரியர்கள் உள்ளனர். அரசு உதவிபெறும் பள்ளிகளிலும், அரசு சம்பளத்தில், ஒரு லட்சம் பேர் பணியாற்றுகின்றனர்.

இவர்களுக்கு, தினசரி வருகைப் பதிவு, செயல் திறன், பணிமூப்பு, கல்வித் தகுதி, நடத்தை போன்றவற்றை கணக்கிட்டு, சலுகைகளும், விருதுகளும் வழங்கபடுகின்றன.இதில், பெரும்பாலான ஆசிரியர்கள், பள்ளிக்கு ஒழுங்காக வராமல் இருந்தாலும், பதிவேட்டில் வந்ததாக குறிப்பிடுவர்.

புதிய தேர்வு மையம் : பள்ளிகளில் விபரம் சேகரிப்பு.

தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுக்கான மையங்கள் அமைப்பதற்காக, அதுகுறித்த விபரங்களை அனுப்பி வைக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 1 தேர்வும் பொதுத்தேர்வாக மாற்றப்பட்டுஉள்ளது. 

வியாழன், 14 செப்டம்பர், 2017

TNPSC - வனத்துறை பணிகளுக்கான குரூப் ஒன் ஏ போட்டி தேர்வு அறிவிப்பு !!

தமிழ்நாடு பணியாளர் ஆணையம் அறிவித்துள்ள குரூப் ஒன் வனத்துறை பணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குரூப் ஒன் சர்வீஸ் 1A பணிக்கு விண்ணப்பிக்க போட்டி தேர்வு எழுதுவோர்   விண்ணப்பிக்கலாம் .
வனத்துறை சார்பாக குரூப் ஒன் ஏ பணிக்கு விண்ணப்பிக்க ஏற்கனவே ஒன் டைம் பதிவுசெய்தவர்கள் விண்ணப்பிக்கலாம் . குரூப் 1 ஏ வனத்துறைக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 12 முதல் அக்டோபர் 10 வரை விண்ணப்பிக்கலம் . அக்டோபர் 10 இறுதி தேதியாகும் . தேர்வு நடக்கும் தேதி டிசம்பர் 17 ஆகும்.