ஞாயிறு, 15 அக்டோபர், 2017

கணவன் – “இந்தத் தீபாவளிக்கு உனக்குப் பட்டுப் புடவை!“

👍கொஞ்சம் சிரிப்பு👍

😃 கணவன் – “இந்தத் தீபாவளிக்கு உனக்குப் பட்டுப் புடவை!“

மனைவி – “அப்படியா! எதை வச்சி சொல்லுறீங்க?

கணவன் – “உன் வளையலை வைச்சுத்தான் சொல்லுறேன்.“
🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏
😃மனைவி – “ஏங்க நம்ம பொண்ணுக்கு வயசாகிட்டே போகுதே. அவளுக்குச் சீக்கிரமா ஒரு மாப்பிள்ளை பார்க்கக் கூடாதா?


கணவன் – “அழகா லட்சணமா ஒரு மாப்பிள்ளை கிடைக்கிறவரை காத்திருக்கட்டுண்டி.“

மனைவி – “எங்கப்பா அப்படியா காத்திருந்தார்?“
🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏
😃கணவன் – “என்ன இது மிக்ஸி, கிரைண்டர், புடவைன்னு ஏகப்பட்ட சாமான்களோட வேன்ல வந்து இறங்கிறே....!

மனைவி – “நீங்க தானே சொன்னீங்க.... பேங்கில இருக்கிற நம்ம ஜாயிண்ட் அக்கவுண்டை குளோஸ் பண்ணனும்ன்னு. அதைத் தான் செய்துட்டு வர்றேன்.“
🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏
😃கணவன் – “ஏன் நான் உள்ளாற வந்தவுடனே கண்ணாடியை எடுத்துப் போட்டுக்கிடுற?

மனைவி – “டாக்டர் தான், தலைவலி வந்தவுடனே கண்ணாடியைப் போட்டுக்கச் சொன்னார்.“
🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏
😃மனைவி – “வேலைக்காரி உங்க மேலே விழறாப்லே உரசிட்டுப் போறா.... நீங்க பேசாம நிக்கிறீங்களே....“

கணவன் – “திரும்பி வரட்டும்.... பதிலுக்கு நானும் உரசிக் காட்டுறேன் பாரு.“
🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏
😃 கணவன் : "உங்க அப்பா பெரிய ஒலிம்பிக் ரசிகரா இருக்கலாம். அதுக்காக தங்க நகைக்கு பதிலா வெங்கல நகை செஞ்சு போட்டா என்ன அர்த்தம்?"

மனைவி : "நீங்க எனக்கு மூணாவதா வந்த புருஷன்னு அர்த்தம்."
🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏
😃 மனைவி : நேத்து ராத்திரி கனவுல நீங்க எனக்கு நிறைய நகை வாங்கித் தந்தீங்க தெரியுமா?

கணவன் : ஓ! ஞாபகம் இருக்கே. உங்க அப்பா கூட அதுக்குப் பணம் கட்டினாரே!
🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏
😃கணவன் : ஏண்டி எப்போ பார்த்தாலும் கோபமா எரிஞ்சு விழுற ?

மனைவி : நீங்க தானே சொன்னீங்க .! கோபப்படுறப்ப நான் ரொம்ப அழகா இருக்கேன்னு..!
🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏
😃மனைவி : நமக்கு கல்யாணம் முடிஞ்சு இன்னியோட 10 வருஷம் ஆகுதுங்க.

கணவன் : எனக்கு மறந்து போச்சு.

மனைவி : இது கூடவா ?

கணவன் : நல்ல விஷயங்கள் மட்டும் தான் எனக்கு நினைவில் இருக்கும்.
🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏
😃கணவன் : ஏன் இந்த மாசம் மட்டும் போன் பில் அதிகமாக வந்திருக்கு ?

மனைவி : உங்க அம்மா வெளியூர் போயிட்டா நான் சும்மா இருக்க முடியுமா? தினமும் STD போட்டு சண்டை போட வேண்டியதாப் போச்சு...
🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏
😃கணவன் : “உனக்குத்தான்
2 கண்ணும் நல்லா இருக்கே, ஒழுங்கா அரிசில இருந்து கல்லைப் பொறுக்க மாட்டியா?”

மனைவி : “உங்களுடைய 32 பல்லும் நல்லாதானே இருக்கு. 2,3 கல்லை கடிச்சு சாப்பிட முடியாதா?”
🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏
😃 மனைவி : என்ன பார்த்துகிட்டு இருக்கிங்க

கணவன் : ஒண்ணுமில்ல!

மனைவி : ஒண்ணுமில்லாமயா ஒரு மணிநேரமா மேரேஜ் சர்டிபிகேட்ட பார்த்துகிட்டு இருக்கிங்க!

கணவன் : எங்கேயாவது எக்ஸ்பிரி டேட் போட்டுருக்கானு பார்க்கிறேன்.!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக