ஞாயிறு, 16 ஜூலை, 2017

வறுமை நீங்கி செல்வம் கொழிக்க, வீட்டில் வெளியேற்ற வேண்டியவைகள்..!

» நமக்கு வாஸ்து மீது அலாதியான நம்பிக்கை உள்ளது. அந்த வாஸ்து சாஸ்திரத்தில், வீட்டின் வறுமை நீங்கி, செல்வம் கொழிக்க வேண்டுமானால் வீட்டினுள் ஒருசில பொருட்களை வைத்திருக்கக் கூடாது. ஏனெனில் அவை வீட்டில் செல்வத்தை தங்கவிடாமல் தடுக்குமாம்.
🕊🕊🕊🕊
புறா கூடு

🕊🕊🕊🕊
➘ வீட்டில் புறா கூடு இருந்தால், அது வீட்டின் வறுமையை அதிகரித்து, உறுதியற்ற நிலையை ஏற்படுத்தும். எனவே உங்கள் வீட்டில் பணம் சேர வேண்டுமானால், உங்கள் வீட்டினுள் இருக்கும் புறா கூட்டினை வெளியேற்றுங்கள்.
🍯🍯🍯🍯
தேன் கூடு
🍯🍯🍯🍯
➘ வீட்டினுள் தேன் கூடு இருப்பது ஆபத்தானது மட்டுமின்றி, வீட்டில் வறுமை மற்றும் துரதிர்ஷ்டத்தை உடனே அதனை வெளியேற்றுங்கள்.
🌾🍊🌾🍊🌾🍊
சிலந்தி வலை
🌾🍊🌾🍊🌾🍊
➘ வீட்டில் சிலந்தி வலை இருப்பது என்பது வாழ்வில் துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறியாகும். எனவே வீட்டில் சிலந்தி வலையைக் கண்டால், உடனே அதை சுத்தம் செய்துவிடுங்கள்.
🌺🍃🌺🍃🌺🍃🌺
காய்ந்த மலர்கள்
🌺🍃🌺🍃🌺🍃🌺
➘ பூஜை அறையில் சாமிக்கு பூக்களைக் கொண்டு அலங்கரிப்பது வழக்கம். அப்படி அலங்கரிக்கும் பூக்கள் காய்ந்து பல நாட்களாக பூஜை அறையில் இருப்பது, வீட்டின் செல்வ வளத்திற்கு இடையூறை ஏற்படுத்தும். எனவே தினமும் தவறாமல் பூஜை அறையை சுத்தம் செய்யுங்கள்.
🍊🌱🍊🌱🍊🌱🍊🌱
உடைந்த கண்ணாடி
🍊🌱🍊🌱🍊🌱🍊🌱
➘ வாஸ்து சாஸ்திரப்படி, உடைந்த கண்ணாடிகளை வீட்டில் வைத்திருப்பது என்பது வீட்டில் வறுமையை அதிகரித்து எதிர்மறை ஆற்றல்களை
வெளவால்
🍒☘🍒☘🍒☘🍒☘🍒
➘ வீட்டினுள் வெளவால் நுழைவது கெட்ட சகுனம். எனவே மாலை நேரத்திற்கு பின் வீட்டின் ஜன்னல் கதவுகளை அடைத்துவிடுங்கள். வெளவால் உடல்நல பிரச்சனை, மோசமான சம்பவங்கள், வறுமை அல்லது இறப்பைக் குறிப்பதாக கருதப்படும் ஒன்று.
🌽🏠🌽🏠🌽🏠🌽🏠
ஒழுகும் குழாய்
🌽🏠🌽🏠🌽🏠🌽🏠
➘ வீட்டினுள் இருக்கும் குழாயில் இருந்து எப்போதும் நீர் வடிந்து கொண்டிருந்தால், அதனால் நீர் மட்டும் வீணாவதில்லை, வீட்டின் நேர்மறை ஆற்றல்களும் வெளியேறிக் கொண்டிருக்கின்றன என்று அர்த்தம்.
🍂🏠🍂🏠🍂🏠🍂🏠🍂
மொட்டை மாடி
🍂🏠🍂🏠🍂🏠🍂🏠🍂
➘ அசுத்தமான மொட்டைமாடி, வீட்டின் வறுமையை மேன்மேலும் அதிகரிக்கும். நீங்களும் உங்கள் வீட்டின் மொட்டை மாடியை அப்படி வைத்திருந்தால், உடனே அதை அப்புறப்படுத்துங்கள்.
🍃🏠🍃🏠🍃🏠🍃🏠🍃
வீட்டு சுவர்களில் விரிசல்
🍃🏠🍃🏠🍃🏠🍃🏠🍃
➘ சுவர்கள் வீட்டின் அதிர்ஷ்டம் மற்றும் செல்வத்திற்கு இடையூறை ஏற்படுத்தி, வீட்டில் எதிர்மறை ஆற்றல்களை அதை உடனடியாக சரிசெய்யுங்கள்.
🍂🍂🍂🍂🍂🍂🍂🍂
காய்ந்த இலைகள்
🍂🍂🍂🍂🍂🍂🍂🍂
➘ வீட்டினுள் அலங்கார செடிகள் வைத்து வளர்த்து வரும் செடிகளில் காய்ந்த இலைகள் இருந்தால், அது எதிர்மறை ஆற்றல்களை நிதி நெருக்கடிக்கு வழிவகுக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக