தமிழகத்தில் உள்ள, அனைத்து அரசு பள்ளிகளிலும், மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில், கூடுதல் ஆசிரியர்களை இடமாற்றம் செய்யும் பணி, விரைவில் துவங்க உள்ளது.தமிழகம் முழுவதும், ஆயிரம் அரசு பள்ளிகள் உள்ளன. இவற்றில், 55 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்; 2.5 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.
அவர்களில், தொடக்கப் பள்ளிகளில், 35 பேருக்கு, ஓர் ஆசிரியரும், மற்ற பள்ளிகளில், 3௦ பேருக்கு, ஓர் ஆசிரியரும் இருக்க வேண்டும்.ஒரே பள்ளியில் நியமிக்கப்படும் ஆசிரியர்களில், ஒரே பாடத்தில் பலர் இருக்கக் கூடாது. பாடத்துக்கு, ஓர் ஆசிரியர் கட்டாயம் இருக்க வேண்டும்.ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், செப்., 30 வரை, மாணவர்கள் சேர்க்கப்படுவர். அதன்பின், பள்ளி அளவில், மாணவர்களுக்கு மாறுதலோ, புதிய மாணவர் சேர்க்கையோ நடத்தக் கூடாது என, விதிமுறைகள் உள்ளன.
செப்., 3௦ நிலவரப்படி, பள்ளிக்கு வரும் மாணவர்கள் மற்றும் பணியாற்றும் ஆசிரியர் எண்ணிக்கை குறித்த பட்டியல் தயாரிக்கும் பணி துவங்கி உள்ளது. இதன்படி, மத்திய அரசு அறிவித்த விகிதப்படி, ஆசிரியர்களின் எண்ணிக்கை நிர்ணயம் செய்யப்படுகிறது. அனுமதி விகிதத்தை விட, அதிகமாக உள்ள ஆசிரியர்கள், பற்றாக்குறை உள்ள பள்ளிகளுக்கு, இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளில், மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக