வெள்ளி, 6 அக்டோபர், 2017

அறுவை சிகிச்சையின்றி இருதய வால்வு மாற்று: ஜிப்மர் சாதனை!!!

ஜிப்மர் மருத்துவமனையின் வரலாற்றில் முதன்முறையாக அறுவை சிகிச்சை செய்து மார்பு கூட்டினைத்  திறக்காமலேயே இருதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.



கடந்த 24-09-2017 ஜிப்மரின் இருதயத் துறையால் மேற்கொள்ளப்பட்ட வால்வுமாற்று சிகிச்சை, அரசுமருத்துவமனைகளில் இதுவேமுதல் முறையாகும்.

வுயுஏசு (டிரான்ஸ் கத்தீடர் அயோர்டிக் வால்வுரீப்ளேஸ்மன்ட்) எனப்படும் இந்த சிகிச்சை முறையில், தொடையில் ஒரு சிறியகுழாயின் வழியாக புதியவால்வு இருதயத்தினுள் கொண்டு செல்லப்பட்டு, பழுதடைந்தவால்வு இருந்த பகுதியில் பொருத்தப்படும்.

இந்த சிறந்த சிகிச்சை முறை, இருதயத்துறை, இருதய அறுவை சிகிச்சை துறை மற்றும் மயக்கவியல் மருத்துவர்களின் கூட்டு முயற்சியால் சாத்தியமானது.இந்த சிகிச்சை புதுச்சேரி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மிகவும் ஏழ்மையான நிலையிலுள்ள இரு நோயாளிகளுக்கு செய்யப்பட்டுள்ளளது.

இவர்கள் அயோர்டிக் வால்வுஅடைப்புஎன்னும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இருதயத்திலிருந்து உடலின் மாற்று உறுப்புகளுக்குச் செல்லும்ரத்த ஓட்டம் தடைபடுவதால் நெஞ்சுவலி, மூச்சுத்திணறல் போன்ற கடும் அவதிகளுக்குள்ளாகினர். இரு நோயாளிகளும் முதியவர்கள் என்பதாலும்,அறுவை சிகிச்சை இவர்களுக்கு பாதிப்பு விளைவிக்கும் என்பதாலும் நோயின் தீவிரத்தால் தவித்து வந்தனர். தற்போது எந்த ஒரு பெரிய அறுவைசிகிச்சையுமின்றி இந்த புதிய வால்வு மாற்று சிகிச்சை மூலம் இவர்கள் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

இயக்குனர் டாக்டர் எஸ்சி. பரிஜா, மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஜெ. பாலசந்தர் மேற்பார்வையில் நடைபெற்றது. இந்த சிகிச்சையைமேற்கொண்டமருத்துவக் குழுவில் இருதயத் துறையைச் சேர்ந்த மருத்துவர் அஜித் அனந்தகிருஷ்ணப் பிள்ளை,மருத்துவர் சந்தோஷ்சதீஷ், ,மருத்துவர் ராஜா ஜெ.செல்வராஜ், இருதய அறுவை சிகிச்சை துறையை சேர்ந்த மருத்துவர் ஸ்ரீவத்சாகே.எஸ். பிரசாத் மற்றும் மயக்கவியல் துறையைச் சேர்ந்த மருத்துவர் சத்யன் பரிடாமுதலியோர் இடம்பெற்றிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக