சனி, 7 அக்டோபர், 2017

நகை வாங்க பான் கார்டு அவசியம் இல்லை: ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கிய முடிவு.

டெல்லி: ரூ50 ஆயிரத்துக்கும் மேல் நகை வாங்குபவர்கள் பான் கார்டு எண் மற்றும்  ஆதார் எண்ணை சமர்பிக்க வேண்டிய அவசியமில்லை என்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் டெல்லியில் இன்று காலை முதல் இரவு வரை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து தனி அரசாணை வெளியிடப்படும் என்று தெரிகிறது.

முன்னதாக 50000 மதிப்புக்கு மேல் நகை வாங்குவோருக்கு பான் மற்றும் ஆதார் கட்டாயம் என்ற அரசின் முடிவால் நகை விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டது. இதனிடையே ஜிஎஸ்டி கவுன்சிலில் பல மாநிலங்களும் இதுகுறித்து வலியுறுத்தியதையடுத்து, மத்திய அரசு இந்த முடிவுக்கு வந்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக