அடுத்த ஆண்டு முதல் பொறியியல் கலந்தாய்வு ஆன்லைனில் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 563 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதற்கான கலந்தாய்வு வருடம் தோறும் ஜூன் மாதம் நடைபெறும்.
பல மாணவர்கள் பொறியியல் கலந்தாய்வில் கலந்துக் கொண்டு கல்லூரியை தேர்ந்தெடுத்த பின், மருத்துவ கலந்தாய்விலும் கலந்து கொண்டு இடம் கிடைக்கும் பட்சத்தில் மருத்துவ கல்லூரியில் சேர்ந்து விடுவதால், அண்ணா பல்கலைக்கழத்திற்கு கீழ் இயங்கும் கிண்டி பொறியியல் கல்லூரி, எம்.ஐ.டி. கல்லூரி உட்பட பல கல்லூரிகளில் இடங்கள் காலியாக உள்ளது.
இந்த சூழலை தவிற்பதற்காக வரும் ஆண்டில் இருந்து ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்த ஏற்பாடு செய்திருப்பதாக முன்னரே உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.
இதன்படி தற்போது இது அதிகார பூர்வ அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது. இதை உயர்கல்வித்துறை செயலாளர் சுனில் பால் வெளியிட்டுள்ளார். இதில் வரும் ஆண்டில் இருந்து ஆன்லைன் வாயிலாக கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொறியியல் சேர்க்கை செயலாளர் இந்துமதி மாற்றம் செய்யப்பட்டு, புதிய செயலாளராக ரைமண்ட் உத்திரியராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக