ஞாயிறு, 14 மே, 2017

தமிழக அரசின் இலவச கல்வி ....

 அருமையான ஏழை,எளிய பெற்றோர்களே உங்கள் குழந்தைகளின் 10 வருட கால பள்ளிப்படிப்பின்  கட்டணத்தை அரசே ஏற்கக்கூடிய  #கட்டாயகல்விஉரிமை_சட்டம் கொண்டு வந்து பல ஆண்டுகள் நடைமுறையில் உள்ளது.......

ஆனால் அதை பயன்படுத்துவதில் தமிழக மக்களிடத்தில் போதிய விழிப்புணர்வு இல்லை என்றே தெரிகிறது........

இந்த வருடமும் தமிழக அரசு 2 இலட்சம் ஏழை எளிய குழந்தைகளுக்கு  LKG,,முதல் 8ம் வகுப்பு வரை 10ஆண்டுகால இலவசமாக கல்வி பயில அனைத்து #அரசுபள்ளிகளிலும்  #தனியார்_பள்ளிகளிலும்  18/5/2017 அன்று வரை  சேர்க்கலாம் என்று அறிவித்துள்ளது...

ஆனால் இது வரை சுமார் 20ஆயிரம் பேர் மட்டுமே  விண்ணப்பித்துள்ளனர் ...

LKG க்கே இன்று பல ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது.

8ம் வகுப்பு வரை  பல இலட்சம் ரூபாய் கல்வி கட்டணத்தை அரசே கட்ட முன் வந்துள்ளது நாம் தயவு செய்து பயன் படுத்த வேண்டும்...

இன்னும் சனி ஞாயிறு தவிர்த்து ஜந்து தினங்கள் மட்டுமே உள்ளது 
#வெள்ளி_திங்கள்__செவ்வாய்புதன்_வியாழன்...

தேவையான ஆவனங்கள் 

வருமானம் சான்றிதழ் (2 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் )

ஜாதி சான்றிதழ்

இருப்பிட சான்றிதல்

குழந்தை அல்லது பெற்றோரின் ஆதார் என்

குழந்தையின் 2 போட்டோ

இன்னுடன் அருகில் இருக்கும் e சேவை மையங்களுக்கு சென்று பதியவும் பதியும் போது உங்களுக்கு அருகில் 3கிலோ மீட்டருக்குள் இருக்கும்  தங்கள் சேர விரும்பும் ஒன்று முதல் நான்கு  பள்ளிகளின் பெயரை குறிப்பிடவும்  பிறகு இணையத்தில் பதிந்த ஒப்புகை சீட்டு உங்களுக்கு e சேவை மைத்தில் தருவார்கள் அதை தங்களுக்கு விருப்பமான மேல் சொன்ன பள்ளிகளில் ஏதேனும் ஒரு பள்ளியில் தந்து சேர்த்து கொள்ளவும் .........

ஜாதி சான்றிதழ்,,,,வருமான சான்றிதழ் ,,,அல்லது இருப்பிட சான்றிதழ் இல்லை என்றால் உடனே அருகில் உள்ள தாலுகா அலுவலகத்தில் சென்று வின்னப்பிக்கவும் தற்பொது உடனுக்குடன் தர அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது அதிகபட்சமாக நாளை வெள்ளிக்கிழமை பதிந்தால் செவ்வாய் அன்று. கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது ....

www.dge.tn.gov.in இந்த இணைய தளத்தில் தான் பதிய வேண்டும் தெரிந்த சகோதரர்கள் தெரியாத மக்களுக்கு உதவுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக