செவ்வாய், 25 ஜூலை, 2017

'பாஸ்போர்ட் பெற பான் கார்டு, ஆதார் போதும்'

'பாஸ்போர்ட் பெறுவதற்கு, பிறப்பு சான்றிதழ் கட்டாயமில்லை; ஆதார், பான் கார்டு போன்ற ஆவணங்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்,'' என, வெளியுறவுத் துறை இணையமைச்சர், வி.கே.சிங் தெரிவித்தார்.

         பார்லிமென்டில், இது குறித்து, மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, வி.கே.சிங் கூறியதாவது: பாஸ்போர்ட் பெறும் முறையை எளிமையாக்கும் வகையில், பாஸ்போர்ட் சட்டத்தில், சமீபத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் போது, பிறப்பு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயமில்லை. ஆதார் கார்டு, பான் கார்டு, பள்ளி - கல்லுாரி சான்றிதழ், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றில் ஏதாவது ஒன்றை, பிறந்த தேதிக்கான ஆதாரமாக கொடுத்தால் போதும். அதே போல், திருமண சான்றிதழ், விவாகரத்து சான்றிதழ் போன்ற ஆவணங்களும் தேவையில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக