சனி, 14 அக்டோபர், 2017

தமிழ் இணையதளங்கள் துவக்கம்.

தமிழ் இணைய கல்வி கழகத்தின் இணையதளம், www.tamilvu.org, 12.26 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், 59 லட்சம் ரூபாய் செலவில், 'தமிழிணையம் மென்பொருள் தொகுப்பு - 2' ஐ உருவாக்கி உள்ளது. இந்த மென் பொருள் தொகுப்பை, தமிழ் இணைய கல்வி கழக இணையதளத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

இதில், தமிழ் மொழி மற்றும் அதோடு தொடர்புடைய, தொல்லியல் சின்னங்கள், கல்வெட்டுகள், பாறை ஓவியங்கள், சுவரோவியங்கள், கோவில்கள், நாணயங்கள் உள்ளிட்ட ஆதார வளங்களை, தமிழ் இணைய கல்விக்கழகம் ஆவணப்படுத்தி உள்ளது. தமிழ் இணைய கல்வி கழகத்தின், 'தமிழ் மின் நுாலகம்' இணையதளம், ஒரு கோடி ரூபாயில் துவக்கப்பட்டு உள்ளது. இம்மின் நுாலகத்தில், தமிழ் மொழி தொடர்பான, அச்சு நுால்கள், இதழ்கள், ஓலைச்சுவடிகள் போன்றவை, டிஜிட்டல் மயமாக்கப்பட்டு தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. முதல்வர், பழனிசாமி, தலைமை செயலகத்தில், நடந்த நிகழ்ச்சியில், இந்த இணையதளங்களை துவக்கி வைத்தார். 
மேலும், திருச்சி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, மதுரை மாவட்டங்களில், 86 கோடி ரூபாயில் கட்டப்பட்ட பேரிடர் மீட்பு மையம், சிறப்பு பொருளாதார மண்டலங்களின் நிர்வாக கட்டடங்களையும், முதல்வர், பழனிசாமி திறந்து வைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக