வியாழன், 30 நவம்பர், 2017

மழை காரணமாக இன்று(நவ 30) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்.

தூத்துக்குடி , நெல்லை , குமரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ 30) விடுமுறை

தஞ்சை , திருவாரூர் மாவட்ட  பள்ளிகளுக்கு  இன்று (நவ 30) விடுமுறை.

மாணவிகள் தற்கொலையால் சஸ்பெண்ட் : ஆசிரியர்கள் இன்று கறுப்பு பேட்ஜ் அணிந்து பணி.

பனப்பாக்கம் பள்ளி மாணவிகள் தற்கொலைக்கு ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் இன்று(நவ.30) கறுப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு செல்கின்றனர்.

'ஸ்டாம்ப்' சேகரித்தால், 'ஸ்காலர்ஷிப்

'ஸ்டாம்ப்' சேகரிப்பில் ஆர்வமுள்ள, 40 மாணவர்களுக்கு, அஞ்சல் துறை சார்பில், கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு, டிச., 12க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆசிரியர் எதிர்நோக்கும் இன்னல்கள் குறித்து நடிகர் கமல் கருத்து!

பள்ளிவரும் பிள்ளைகள்,
பயின்றுவரும் கிள்ளைகள்;
தற்கொலைசெய்து சாவு!
இக்கொலையில் ஆசான்தானே காவு?
பள்ளி வருவது படிக்க- கூடாது
சுள்ளி எடுத்து அடிக்க,

மாற்றுத் திறனாளிகள் பிரச்னையை தீர்க்க மாதம் தோறும் குறைதீர் கூட்டம்.

'மாற்றுத் திறனாளிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காண, மாதம் தோறும், டி.ஆர்.ஓ.,க்கள் தலைமையிலும்; இரு மாதங்களுக்கு ஒருமுறை, கலெக்டர்கள் தலைமையிலும்; மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, மாநில அளவிலும், குறைதீர் கூட்டங்கள் நடத்தப்படும்,'' என, வருவாய் நிர்வாக ஆணையர், சத்யகோபால் தெரிவித்தார்.

விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தின் B.Ed பட்டம் எந்த ஆண்டிலிருந்து செல்லாது ? பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு எடுத்த நடவடிக்கை என்ன? RTI

புதன், 29 நவம்பர், 2017

பாராளுமன்றம் பற்றிய கூறும் முக்கிய விதிகள்:-

🏛 பாராளுமன்றம் பற்றி கூறும் விதிகள் - விதி 79 முதல் 123 வரை

🏛 விதி 79 - பாராளுமன்றம் என்பது குடியரசு தலைவர், ராஜ்யசபா, லோக்சபா உள்ளடக்கியது
🏛 விதி 80 - ராஜ்யசபா அமைப்பு
🏛 விதி 81 - லோக்சபா அமைப்பு
🏛 விதி 82 - ஒவ்வொரு சென்சஸ் பிறகும் தொகுதி மறுவரையறை செய்வது

தொடரும் கல்வி கொலைகளும் தீர்வுகளும்...


வேலூர் பகுதியில் நடந்து முடிந்திருக்கிறது, இந்த சமுதாயத்தின் அடுத்த கல்வி கொலை. இதில் யாரும் குற்றவாளிகளாக முடிவு செய்யப்பட போவதில்லை.

தமிழ் வழியில் படித்தற்கான முன்னுரிமை ( சான்றிதழ்) கேள்வியும் பதிலும்.

தமிழ் வழியில் படித்தற்கான முன்னுரிமை ( சான்றிதழ்) கேள்வியும் பதிலும்.

#நான் இளங்கலை பட்டம் வாங்கியுள்ளேன் குருப் 4 தேர்விற்கு தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் வாங்க வேண்டுமா? வாங்கலாமா?
வாங்கலாம் , பயன்படுத்தலாம் ஆனால் 10 ஆம் வகுப்பிற்கு மட்டுமே வாங்கி விண்ணப்பிக்க வேண்டும் , பட்ட்ப்படிப்பில் நீங்கள் வாங்கி இருந்து விண்ணப்பித்தால் இத்தேர்வுக்கு அது செல்லாது.

#ஏன் 10 ஆம் வகுப்புக்கு வாங்க வேண்டும்?

மாணவர்களின் தற்கொலைக்கு என்ன காரணம்? - ஆனந்த விகடன்.

வேலூர் மாவட்டம் அரக்கோணம் பகுதியில் அமைந்துள்ள பனப்பாக்கம் அரசுப் பள்ளி மாணவிகள் நான்கு பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தமிழக அளவில் அதிர்ச்சி அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.
அங்கும், இங்குமாகப் பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது பள்ளி ஆசிரியர்களுக்கு பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மாணவர்களின் இதுபோன்ற செயல்பாட்டுக்கு என்ன காரணம் என்று கல்வியாளர்களிடம் பேசினோம். 

வாக்காளர் பட்டியலில் சேரணுமா? இனி பேஸ்புக் அக்கவுண்ட் இருந்தால் போதும்!

18 வயது பூர்த்தியானவர்கள் வாக்காளர் பட்டியலில் சேரவேண்டும் என்றால் இனிமேல் நகராட்சி, மாநாகராட்சி அலுவலங்களுக்கு சென்று கால்கடுக்க நின்று விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

பணிப்பதிவேடு காணாமல் போனால் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள்(AEEO'S) மேல் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


குரூப் - 2 தேர்வு, 'ரிசல்ட்' வெளியீடு.

குரூப் - 2 உட்பட இரண்டு தேர்வுகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதியை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

4 மாணவியர் தற்கொலை: 18 தற்காலிக ஆசிரியர்கள் 'டிஸ்மிஸ்'.

வேலுார்: நான்கு மாணவியர் தற்கொலையை அடுத்து, அந்த பள்ளியில் பணியாற்றிய தற்காலிக ஆசிரியர்கள் அனைவரும் கூண்டோடு, 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டனர்.

வேலுார் மாவட்டம், அரக்கோணம் அடுத்த, பனப்பாக்கத்தில், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, 16 வயதுடைய நான்கு மாணவியர், பிளஸ் 1 படித்து வந்தனர். 

அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் போலீசார் வைத்த பெட்டியில் மாணவியர் சார்பில் 24 புகார்.

தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், மாணவியருக்கு ஏற்படும் தொந்தரவு குறித்த தகவல் தெரிவிக்க, போலீஸ் சார்பில் வைக்கப்பட்ட புகார் பெட்டி திறக்கப்பட்டது. இதில், 24 புகார் மனுக்கள் இருந்தன. தர்மபுரி, அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், மாணவியருக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு குறித்த தகவல் தெரிவிக்க, தர்மபுரி டவுன் மகளிர் போலீசார் சார்பாக, 15ம் தேதி, புகார் பெட்டி வைக்கப்பட்டது. 

நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க பள்ளிகளில், 'ஆன்லைன்' வசதி.

பிளஸ் 2 மாணவர்கள், உயர்கல்விக்கான நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க, அரசு பள்ளிகளில், இலவச, 'இ - சேவை' வசதி செய்து தர, தமிழக அரசுக்கு கோரிக்கை எழுந்துள்ளது.

செவ்வாய், 28 நவம்பர், 2017

8ம் வகுப்பு தனித்தேர்வு அறிவிப்பு.

'தனித்தேர்வர்களுக்கான, எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு, ஜன., 21ல் துவங்கும்' என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.  தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி இதற்கான உத்தரவை வெளியிட்டார். 

ஜன., 29 - தமிழ்;
          30 - ஆங்கிலம்;
          31 - கணிதம்;
பிப்.,1 - அறிவியல்;
பிப்.,2 - சமூக அறிவியல்
பாடங்களுக்கு தேர்வு நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது

Computer Instructor பணியிடங்களை PG Asst பணியிடமாக தரம் உயர்த்த கோரிக்கை.


வேலைவாய்ப்பு: தமிழக அரசில் பணி!

தமிழக அரசின் பல்வேறு துறையில் காலியாக உள்ள இளநிலை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 24

மார்ச் 2018 மேல்நிலைத் தேர்வு - பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளுதல் -வழிமுறைகள்.

DGE- மார்ச் 2018 மேல்நிலைத் தேர்வு - பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளுதல் சார்பு.

TRB மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள 195 பணி நாடுநர்களுக்கு அரசு உயர்நிலைப்பள்ளி/மேல்நிலைப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் செய்ய கலந்தாய்வு இன்று 28.11.17 நடைபெறுகிறது.


‘1098’ என்ற இலவச தொலைபேசி எண் அறிவிப்பு: மாணவ–மாணவிகளின் தற்கொலை எண்ணத்தை போக்க புதிய முயற்சி.

வேலூர் மாவட்டம் பணப்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் 11–ம் வகுப்பு படித்து வந்த 4 மாணவிகள் சமீபத்தில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர். அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் ஏற்படுத்திய பரபரப்பு அடங்கிவிட்டது.

திங்கள், 27 நவம்பர், 2017

TNPSC Exam - Online Apply - Must Follow This Stpes - தேர்விற்கு விண்ணப்பிக்கும் பொழுது கவனிக்க வேண்டியது!!

1. உங்களது பெயர், தகப்பனார் -தயார் மற்றும் திருமணமாகி  இருந்தால் துணையின் பெயர், விலாசம் போன்றவற்றை நிரந்தர பதிவு மற்றும் விண்ணப்பத்தில் சரியாகக் குறிப்பிடுங்கள்.

திருப்பதி லட்டு - விலையை உயர்த்த தேவஸ்தானம் முடிவு?

திருப்பதியில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டின் விலையை உயர்த்த தேவஸ்தானம் முடிவு எடுத்துள்ளது.

'நீட்' தேர்வு அறிவிப்பு எப்போது?

மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வுக்கு, அடுத்த மாதம் அறிவிப்பு வெளியிடப்படும் என, தகவல்கள் வெளியாகியுள்ளன. பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர, நீட் நுழைவு தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். ஆண்டுதோறும், மே மாதம், நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 

ஞாயிறு, 26 நவம்பர், 2017

10ம் வகுப்பு தமிழ் தேர்வு பிற மொழியினருக்கு விலக்கு.

பத்தாம் வகுப்பு பொது தேர்வில், தமிழை கட்டாய பாடமாக எழுதுவதில் இருந்து, பிறமொழி மாணவர்களுக்கு, விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில், ஒரு தரப்பினர், பிறமொழியை தாய் மொழியாக கொண்டவர்கள். பிற மாநிலங்களில் இருந்து வந்துள்ள மாணவர்கள், தங்கள் மாநில மொழியை தேர்வு செய்து, 10ம் வகுப்பில் படிக்கின்றனர்.

ஜே.இ.இ., பிரதான தேர்வு டிச.,1 முதல் பதிவு துவக்கம்.

தேசிய உயர்கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி.,யில், இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான, ஜே.இ.இ., நுழைவுத் தேர்வுக்கு, டிச., 1 முதல் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், ஐ.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்ற, உயர்கல்வி நிறுவனங்களில், இன்ஜி., படிக்க, நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

சனி, 25 நவம்பர், 2017

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் 20% இடஒதுக்கீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு.

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை செந்தில்குமார் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராஜா உத்தரவிட்டுள்ளார். தமிழ் வழியில் அரசு வேலை வழங்கும் அரசு உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டிசம்பர் 21-ல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர்  21ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் நவம்பர் 27ஆம் தேதி வேட்புமனு தாக்கல் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 4-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. டிசம்பர் 24 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

மருத்துவ விடுப்பு குறைந்தது படசம 2 நாட்கள் துய்க்கலாம் -RTI பதில்.

பரோடா வங்கியில் 427 சிறப்பு அதிகாரி வேலை!!

நாடு முழுவதும் பல்வேறு கிளைகளைக் கொண்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கியில், தற்போது காலியாக உள்ள 427 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய அரசு பள்ளிகளில் 683 பதவிக்கு நியமனம்.

மத்திய அரசின், நவோதயா பள்ளிகளில், எட்டு பதவிகளுக்கு, 683 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு, டிச., 13க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.மத்திய அரசின், நவோதயா வித்யாலயா பள்ளிகள், நாடு முழுவதும், 576 மாவட்டங்களில் செயல்படுகின்றன. 

JEE Main Exam டிச.,1 முதல் பதிவு துவக்கம்.

சென்னை: தேசிய உயர்கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி.,யில், இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான, ஜே.இ.இ., நுழைவு தேர்வுக்கு, டிச., 1 முதல் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், ஐ.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்ற, உயர்கல்வி நிறுவனங்களில், இன்ஜி., படிக்க, நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

உயிர் காக்கும் 51 மருந்துகளின் விலை குறைப்பு.

உயிர் காக்கும் 51 அத்தியாவசிய மருந்துகளுக்கான விலை, 6 சதவீதம் முதல் 53 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருந்துகள் விலையை நிர்ணயிக்கும், என்.பி.பி.ஏ., எனப்படும் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

டிச., 2ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை.

தமிழகத்தில், முதல் சனிக்கிழமையான, டிச., 2ல், வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. 

அஞ்சலக கணக்கு; ஆதார் கட்டாயம்.

அஞ்சலக சேமிப்பு வங்கி வாடிக்கையாளர்கள், டிச., 31க்குள் தங்களின் ஆதார், மொபைல் போன் எண் விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

பொது நிகழ்ச்சியில் மாணவர் பங்கேற்க 55 கட்டுப்பாடுகள் : அரசியல் நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை.

பள்ளி மாணவர்களை, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைக்க, 55 நிபந்தனைகளை தமிழக அரசு விதித்துள்ளது. அரசியல் நோக்கம் கொண்ட நிகழ்ச்சிகளில், மாணவர்களை அழைக்க அனுமதி இல்லை என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

+1 தனித்தேர்வர்களுக்கு அக மதிப்பீடு கிடையாது, அரசாணை வெளியீடு.

வியாழன், 23 நவம்பர், 2017

இரண்டு மணி நேரத்தில் ஏழுமலையான் தரிசனம்.

திருப்பதி: திருமலைக்கு வரும் அனைவரும், இரண்டு மணிநேரத்தில் ஏழுமலையானை தரிசிக்கும் நடைமுறையை, தேவஸ்தானம் அறிமுகப்படுத்த உள்ளது.

அரசுப் பணியாளர் வீட்டுக்கடன்” திட்டம் பற்றி அறியுங்கள்!

🍎அரசுப் பணியாளர் வீட்டுக்கடன்” திட்டம் பற்றி அறியுங்கள்!

🌻பொதுவாக அரசு ஊழியர்களுக்குக் சலுகைகள் அதிகம்தான். அவற்றுள் முதன்மையானது “அரசுப் பணியாளர் வீட்டுக்கடன்” திட்டம். காரணம், மிகக் குறைந்த வட்டி வீதம்; வட்டி கணக்கிடும் முறை; இன்னும் சில சிறப்பம்சங்கள்.

பழைய 500 மற்றும் 1000 ரூபாய்களை அடுத்து மோடி அரசு இதையும் தடை செய்யப் போகிறதாம்..!

ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்து ஒரே இரவில் மக்கள் விழிபிதுங்கினர்.
பண மதிப்பு நீக்க நடவடிக்கியினை அடுத்து நரேந்திர மோடி தலைமையிலான மோடி அரசு டிஜிட்டல் பரிவர்த்தனை முறையினைப் பிரபலப்படுத்தி வந்தது. தற்போது ஓர் அளவிற்கு இணையதள, டிஜிட்டல் மற்றும் வாலெட் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் நிலையி அடுத்தத் தற்போது செக் புக்குகளைத் தடை செய்யும் எண்ணத்தில் உள்ளதாக நமக்குக் கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன. 

சந்தைக்கு வருகிறது டிஜிட்டல் மாத்திரை.

உலகில் முதன் முறையாக டிஜிட்டல் மாத்திரை ஒன்றினை பயன்படுத்துவதற்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

சொத்துக்களுடன் ஆதாரை இணைப்பது கட்டாயமாகிறது - பிரதமர் மோடியின் அடுத்த அதிரடி.. ​

நாட்டில் கருப்புபணப் புழக்கத்தை ஒழிக்க சொத்துக்களுடன் ஆதார் எண்ணை இணைப்பதை மத்திய அரசு விரைவில் கட்டாயமாக்க உள்ளது.

நீதிபதியிடம் மன்னிப்பு கேட்ட ஆசிரியர் சங்க நிர்வாகிகள்.

உயர் நீதிமன்ற நீதிபதியை விமர்சித்ததற்காக, ஆசிரியர் சங்க நிர்வாகிகள், நேற்று, நீதிமன்றத்தில் ஆஜராகி, மன்னிப்பு கேட்டனர்.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன. ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து, நீதிபதி கிருபாகரன் கண்டித்தார். 

SCHOOL TEAM VISIT - குழு ஆய்வின் போது பள்ளிகளில் கண்டறியப்பட்ட குறைபாடுகள் பட்டியல் - தர்மபுரி மாவட்டம்.

மிலாடி நபி விடுமுறை டிசம்பர் 2 (02.12.2017)க்கு மாற்றம் அரசாணை வெளியீடு.

அரசாணை எண் 962 நாள்:21.11.2017- மிலாடி நபி விடுமுறை டிசம்பர் 2 (02.12.2017)க்கு மாற்றம் அரசாணை வெளியீடு.

சைனிக் பள்ளியில் சேர மாணவர்களுக்கு விண்ணப்பப் படிவங்கள் வரும் நவம்பர் 30-ம் தேதி வரை விநியோகிக்கப்படும்.

சைனிக் பள்ளியில் வரும் 2018-19 கல்வியாண்டில் 6 மற்றும் 9-ம் வகுப்பில் சேருவதற்காக மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

தேசிய திட்ட அமலாக்கத்துறையில் 1270 உதவி பேராசிரியர் பணியிடங்கள்.

தேசிய திட்ட அமலாக்கத்துறையில் 1270 உதவி பேராசிரியர்பணியிடங்கள் மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின்கீழ் செயல்பட்டு வரும் தேசிய திட்ட அமலாக்கத்துறையில்"National Project Implementation Unit" காலியாக உள்ள1270 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

TNPSC: தமிழகம் முழுவதும் நூலக பணியாளர்கள் பணிக்கான அறிவிப்பாணையை TNPSC வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நூலக பணியாளர்களுக்கள் பணிக்கான அறிவிப்பாணையை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது

விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 20 எனவும் அறிவிப்பு

பள்ளிக் கல்வியில் ஐக்கியமாகும் தேர்வுத்துறை: தமிழக அரசு புதிய திட்டம்.

தமிழக அரசுத்தேர்வு துறையை படிப்படியாக பள்ளிக் கல்வித்துறையுடன் இணைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

TN GOVT - TEACHERS HOME ADDRESS CHENNAI & TRICHY.

ஆசிரியர்கள் சென்னையில் தங்குவதற்கு ஆசிரியர் இல்லம்

ஆசிரியர்கள் சென்னையில் தங்குவதற்கு ஆசிரியர் இல்லம் 
சைதாப்பேட்டை பஸ்நிலையம் பின்புறம் உள்ளது.
ஒரு நபருக்கு ரூ  100 ஒரு நாளைக்கு கட்டில் மெத்தை கொண்ட 
தனி தனி அறைகள் உண்டு.தொடர்பு எண்கள்:

01-01-2016 முதல் 31-10-2017 வரை ஓய்வுபெற்ற மற்றும் பணியிடையே மரணமடைந்த அரசு ஊழியர் ஆசிரியர்கள் திருத்திய ஓய்வூதிய கருத்துருக்கள் பணிப்பதிவேட்டுடன் மாநிலகணக்காயர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்-அரசாணை வெளியீடு.


புதன், 22 நவம்பர், 2017

நோயாளிகள் இனி வரிசையில் நிற்க வேண்டாம்!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தின் நிம்ஸ் மருத்துவமனையில் நோயாளிகள் 
வரிசையில் நிற்பதைத் தவிர்க்கும் வகையில் புதிய மொபைல் ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் ஐதராபாத்தில் நிம்ஸ் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இங்குத் தினமும் ஏராளமானோர் உள் மற்றும் புற நோயாளிகளாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

CM CELL REPLY : 2009க்கு பின் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் 6 மற்றும் 7வது ஊதிய முரண்பாடு மனுவுக்கு CM பதில்.


TNPSC: தமிழகம் முழுவதும் நூலக பணியாளர்கள் பணிக்கான அறிவிப்பாணையை TNPSC வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நூலக பணியாளர்களுக்கள் பணிக்கான அறிவிப்பாணையை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது

விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 20 எனவும் அறிவிப்பு

ரூ 1000 ஊதிய உயர்வு ஏப்ரல் 2017 முதல் நிலுவை தொகையுடன் வழங்க அனுமதி!


'பாலிடெக்னிக்' விரிவுரையாளர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு திடீர் தள்ளிவைப்பு.

சென்னை: 'பாலிடெக்னிக்' விரிவுரையாளர் பணிக்கு, சென்னையில் 
நடக்கவிருந்த சான்றிதழ் சரிபார்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது 
குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., தலைவர், ஜெகநாதன் 
வெளியிட்ட செய்திக்குறிப்பு: பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான 
தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, இன்ஜினியரிங் பாடங்களுக்கு, 

மின் வாரிய தேர்வு மதிப்பெண் வெளியீடு.

மின் வாரியம், நேற்று முன்தினம் நடத்திய, கள உதவியாளர் தேர்வுக்கான நேர்காணல் மதிப்பெண் விபரம் வெளியிடப்பட்டு உள்ளது. மின் வாரியம், 900 கள உதவியாளர் பதவிக்கு, ஆட்களை தேர்வு செய்ய உள்ளது. இதற்காக, 2016ல் நடத்திய எழுத்து தேர்வில், அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு, நேற்று முன்தினம், நேர்காணல் துவங்கியது; இன்று வரை நடக்கிறது. இந்நிலையில், 20ம் தேதி நேர்காணலில் பங்கேற்ற வர்கள் வாங்கிய மதிப்பெண்ணை, மின் வாரியம், தன் இணையதளத்தில், நேற்று வெளியிட்டுள்ளது. 

மிலாடி நபி விடுமுறை டிசம்பர் 2 க்கு மாற்றம்....தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

டிசம்பர் 1ம் தேதிக்கு பதிலாக டிசம்பர் 2ம் தேதி மிலாது நபி விடுமுறைஅறிவித்து         அரசானை வெளியிடப்பட்டது. அரசின் தலைமை ஹாஜியின் வேண்டுகோளை ஏற்று மிலாதுநபி விடுமுறையை மாற்றி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

செவ்வாய், 21 நவம்பர், 2017

இணையதளத்தில் பிரச்னை: ஆசிரியர்கள் புதிய ஊதியம் பெறுவதில் சிக்கல்.

இணையதள சம்பளப் பட்டியல் ("வெப் பே ரோல்') வெளியிடப்படாததால் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் (உயர்நிலை), இடைநிலை ஆசிரியர்கள், துப்புரவாளர்கள் புதிய ஊதியம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இப்பிரச்னைக்கு தமிழக அரசு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என தமிழ்நாடு அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

10ம் வகுப்பு துணைத்தேர்வு: இன்று மறுகூட்டல், 'ரிசல்ட்'.

பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு, இன்று மறுகூட்டல் முடிவு வெளியாகிறது.

தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: பத்தாம் வகுப்புக்கு, அக்டோபரில் நடந்த துணை தேர்வில், 22 ஆயிரத்து, 665 தனித்தேர்வர்கள் பங்கேற்றனர். அவர்களில், 184 பேருக்கு, பல்வேறு பாடங்களில், 

383 விடைத்தாள்கள் மறுகூட்டல் செய்யப்பட்டன. இதில், 17 பேருக்கு மதிப்பெண் மாறிஉள்ளது. அவர்கள், தற்காலிக சான்றிதழை, www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், இன்று காலை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மதிப்பெண் மாறியவர்கள் பட்டியல், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய பாடத்திட்டம் பிப்ரவரியில் வெளியிடப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்.

தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அளித்த பேட்டி வருமாறு:-

ஒன்று முதல் 12-ம் வகுப்பு வரையிலான புதிய பாடத்திட்ட வரைவு வடிவமைப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தை ஒரு தொகுப்பாகவும், பிளஸ்-1, பிளஸ்-2 பாடத்திட்டத்தை மற்றொரு தொகுப்பாகவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இந்த வரைவு பாடத்திட்டத்தை 4 மாத காலத்தில் உருவாக்கியிருக்கிறோம் என்பது இந்தியாவே வியக்கத்தக்க வகையில், தமிழக வரலாற்றில் முக்கிய அம்சமாகும்.

TNPSC : 'குரூப் - 4' தேர்வு : வெளிமாநிலத்தவருக்கு வாய்ப்பு.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும், குரூப் - 4 தேர்வில், பொதுபிரிவினராக, வெளிமாநிலத்தவர் பங்கேற்க விதி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி., செயலர், விஜயக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பிளஸ் 1 செய்முறை தேர்வில் மாற்றம் : பள்ளிக்கல்வி அரசாணையில் திருத்தம்.

பிளஸ் 1 மாணவர்களுக்கு, இந்த ஆண்டு இறுதி தேர்வுடன், செய்முறை தேர்வும் நடத்தும் வகையில், தேர்வு முறையில் மாற்றம் செய்வதற்கான, அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர, நீட்; தேசிய உயர்கல்வி நிறுவனங்களில், இன்ஜி., படிக்க, ஜே.இ.இ., என்ற நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். 

புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கை வெளியீடு; 14 ஆண்டுக்கு பின் பள்ளிக்கல்வியில் விடிவு.

சென்னை,ஒன்று முதல் பிளஸ் 2 வரையுள்ள வகுப்புகளுக்கான, புதிய 
பாடத்திட்ட வரைவு அறிக்கையை, முதல்வர், பழனிசாமி நேற்று 
வெளியிட்டார். 

அதனால், 14 ஆண்டுகளுக்குப் பின், பிளஸ் 2 மாணவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் உருவாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க, மே, 22ல் தமிழக அரசு உத்தரவிட்டது. 

திங்கள், 20 நவம்பர், 2017

School Team Visit - சிறப்பு குழு பார்வையிடும் சமயத்தில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும் முக்கிய விபரங்கள்.

🔴காலை வழிபாட்டுக் கூட்டம் ( As per G O )
🔴பள்ளி வளாகத் தூய்மை, கழிப்பறை தூய்மை, குடிநீர் வசதி.

(முக்கியமாக பள்ளி சுற்றுப்புறம் தண்ணீர் தேங்காமல் கவனித்துக் கொள்ளவும்)

அரசாணை விபரமும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளும்!!!


ஒரு கோடி மதிப்புள்ள இடம் அரசுப்பள்ளிக்கு தானமாக வழங்கிய மாமனிதர்!!!


ஆன்லைன் பத்திரப்பதிவு : ஜனவரி 1க்கு தள்ளிவைப்பு.

தமிழகம் முழுவதும், ஆன்லைன் பத்திரப்பதிவை கட்டாயமாக்கும் திட்டம், ஜன., 1க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், சொத்து பரிமாற்ற பத்திரங்களை பதிவு செய்ய, 578 சார் - பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இங்கு, பத்திரங்கள் பதிவை முற்றிலும், ஆன்லைன் முறைக்கு மாற்ற, டி.சி.எஸ்., நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்தது. இந்நிறுவனம், 'ஸ்டார் - 2.0' என்ற பெயரில், புதிய மென்பொருளை உருவாக்கியது. இத்திட்டம் சோதனை முறையில், 154 சார் - பதிவாளர் அலுவலகங்களில் செயல்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, அனைத்து அலுவலகங்களிலும், இம்முறையை நவ., 15 முதல் கட்டாயமாக்க திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. ஆனால், திட்டமிட்டபடி நடைமுறைப்படுத்த முடியவில்லை.

தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சியில் புதியதாக ஆசிரியர் இல்லம் கட்டப்பட்டுள்ளது-முழு விவரம் மற்றும் DSE PROCEEDINGS.


எளிய அறிவியல் சோதனைகள்.


Click Here

தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு.

அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி பதவி உயர்வுக்கான பட்டியல் தயாரிக்க, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு, பணி மூப்பு, அனுபவம், கல்வித்தகுதி 

அடிப்படையில், பதவி உயர்வு வழங்கப்படும். அனுபவம் பெற்ற, தகுதியான தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட தொடக்க கல்வி அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது. இதற்கான பட்டியல் தயாரிக்க, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.

'நெட்' தேர்வுக்கு புது பாடத்திட்டம் ;10 ஆண்டுக்கு பின் மாறுகிறது.

பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தகுதி தேர்வுக்கான 
பாடத்திட்டம், 10 ஆண்டுகளுக்கு பின் மாற்றப்பட உள்ளது.

கல்லுாரிகள்,பல்கலைகள் பேராசிரியர் பணிக்கு, ஆராய்ச்சி 
படிப்புடன் கூடிய, முதுநிலை பட்டதாரிகள், தகுதி தேர்வில் 
தேர்ச்சி பெற வேண்டும்.இதற்காக, தேசிய அளவில், நெட் 
என்ற தகுதி தேர்வை, யு.ஜி.சி., நடத்துகிறது. ஆண்டுக்கு 
இரண்டு முறை நடத்தப் பட்ட இந்த தேர்வு, நடப்பு கல்வி
ஆண்டு முதல், ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்பட 
உள்ளது. 

ஞாயிறு, 19 நவம்பர், 2017

நம் பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் 52!

1.ஆசிரியர் வருகைப் பதிவேடு

2.மாணவர் வருகைப் பதிவேடு
3.மாணவர் சேர்க்கை நீக்கல் பதிவேடு
4.சேர்க்கை விண்ணப்பங்கள் தொகுப்பு
5.பதிவுத்தாட்கள் உண்மை நகல்

2017 உலக அழகியாக இந்தியப் பெண் தேர்வு!

2017-ம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி சீனாவில் நடைபெற்றது. இதன் இறுதிச்சுற்றுப் போட்டி சனிக்கிழமை நடத்தப்பட்டது.

சனி, 18 நவம்பர், 2017

தாமஸ் ஆல்வா எடிசன்...

சிறுவயதில் ஒர் நாள் பள்ளியிலிருந்து வந்த தாமஸ் ஆல்வா எடிசன் கையில் ஒரு கவருடன் வந்தார்... உள்ளே உள்ள கடிதத்தை தன் அம்மாவிடம் மட்டுமே கொடுக்கவேண்டும் என தன் ஆசிரியர் கூறியதாக சொல்லி கொடுத்தார்...

            அந்த கடிதத்தை அந்த தாய் கண்ணீரோடு சத்தமாக தன் மகன் கேட்கும்படி இப்படி படித்தாள்...

டீச்சர்.(சிறுகதை)

டீச்சர்.(சிறுகதை)

'பேரு சொல்லுங்க!''
       'கலைவாணி.''
'வயசு?''
          '30.''
'ஹஸ்பெண்டு பேரு... என்ன பண்றார்?''
         'இன்னும் கல்யாணம் ஆகலை.''

"கன்னிகாதானம்" என்றால் என்ன?

வயிற்றுப்பசியைப் போக்குகிற அன்னதானமே சிறந்தது என்று சொல்வார்கள்.

நிதானமே சிறந்தது என்பவர்களும் உண்டு.

ஆனால், தானங்களிலேயே மிகப் பெரியதாக, மகா தானமாக சாஸ்திரம் குறிப்பிடுவது கன்னிகாதானத்தைதான்!

ஓர் அற்புதமான சிற்பி...

ஓர் அற்புதமான சிற்பி, ஒருநாள் தெருவில் போய் கொண்டிருந்தவர் ஒரு கடையருகே கனத்த பாறாங்கல் ஒன்றைப் பார்த்தார். ஏதோ பெரிய புதையலைப் பார்த்த மகிழ்ச்சி, அதன் பின் அந்தக் கடைக்காரரிடம், 'ஐயா, இந்தப் பாறாங்கல் தங்களுக்குத் தேவையா அல்லது இதை நான் எடுத்துச் செல்லலாமா?' என்று கேட்டார்.

கஷ்டம், கஷ்டம், கஷ்டத்துக்கு மேல் கஷ்டம், தாங்க முடியலே…

கஷ்டம், கஷ்டம், கஷ்டத்துக்கு மேல் கஷ்டம், தாங்க முடியலே… 💐☝🏻😄

எதுக்குத் தான்பா இந்த கஷ்டம்… என்கிற கேள்வி மனதில் இல்லாதவர்கள் இல்லை. 🌷💐☝🏻😄

இந்தப் பதிவு அதற்கு விடையளிக்கக் கூடும்.💐

இந்தியர்களை தலை நிமிர வைத்த மகத்தான தலைவர் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் பயின்ற படிப்புகளின் விவரங்கள் தான் இவை...

Dr.AMBEDKAR (1891-1956)
B.A., M.A., M.Sc., D.Sc., Ph.D., L.L.D.,
D.Litt., Barrister-at-La w.
B.A.(Bombay University) Bachelor of Arts,
MA.(Columbia university) Master Of Arts,

அப்பாவும், மகளும் சேர்ந்து பட்டம் விட்டுக் கொண்டிருந்தார்கள்.

அப்பா கேட்டார்,
“மகளே!.. நூலோட வேலை என்னன்னு சொல்லு பார்க்கலாம்?”

மகள்....  கொஞ்சமும் தாமதிக்காமல் சொன்னாள் ..

“நூல்தாம்ப்பா பட்டத்தின் சுதந்திரத்தை தடுத்துக் கொண்டிருக்கிறது ”.

நாத்திகம் பேசிய...

நாத்திகம் பேசிய M.R ராதா இறக்கும் முன் காஞ்சி சங்கராச்சாரியாரை பார்த்து தஞ்சம் அடைந்தார்.

நாத்திகம் பேசிய கண்ணதாசன் இறக்கும் முன் அர்த்தமுள்ள இந்துமதம் எழுதி விட்டு உயிரை விட்டார்.

கர்ம வினை.

ஒரு சமயம் ஒரு அரசன் அந்தணர்களுக்கு உணவளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அப்படி ஒரு நாள் உணவளித்துக் கொண்டிருக்கையில் வானில் ஒரு கழுகு, தன் இரையான இறந்த பாம்பு ஒன்றை தன் கால்களில் பற்றிக் கொண்டு கடந்து சென்றது. பாம்பின் வாயிலிருந்து ஒரு சில துளிகள் விஷம் அரசன் வைத்திருந்த உணவுப் பாத்திரத்தில் விழுந்து விட்டது. எவரும் அதை கவனிக்க வில்லை.

பகவான் கிருஷ்ணரை மிகவும் நேசிக்கும் பெண் ஒருவர் ஒரு நாள் துவாரகையில் அவரிடம் சென்று, “உன் விருப்பப்படி நடந்துகொள்வதை தவிர எனக்கு வேறு மகிழ்ச்சி எதுவும் இல்லை கிருஷ்ணா. உனக்கு நான் என்ன செய்யவேண்டும் சொல்?” என்றார்.

பகவான் கிருஷ்ணரை மிகவும் நேசிக்கும் பெண் ஒருவர் ஒரு நாள் துவாரகையில் அவரிடம் சென்று, “உன் விருப்பப்படி நடந்துகொள்வதை தவிர எனக்கு வேறு மகிழ்ச்சி எதுவும் இல்லை கிருஷ்ணா. உனக்கு நான் என்ன செய்யவேண்டும் சொல்?” என்றார்.

அடிப்படையில் இவள் மிகவும் ஏழை. தாய் தந்தையர் யாரும் கிடையாது.

மனைவியை ஏன் இப்படி அழைக்கிறார்கள் என்று ஒரு அற்புதமான நேரத்தில் யோசித்தபோது நமது முன்னோர்கள் அதி புத்திசாலிதனம் புரிந்தது.

 நமது மனையில் வெற்றிகரமாக வீற்றிருப்பவள் என்பதால், "மனைவி" என்றும்...

நமது வாழ்வில் கடைசிவரை தொண தொணவென்று துணையாய் வருபவள் என்பதால், "துணைவி" என்றும்...

பொன் நகையை வாங்கி தருமாறு நம்மை ஆட்டி வைப்பதால் , "பொண்டாட்டி" என்றும்...

சிந்திக்க வைத்த பதிவு......

இது ஒரு உண்மைச் சம்பவம்
ஒரு ரயில் மிக வேகமாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில் ஜன்னல் வழியே காற்று ‘குபுகுபு’வென்று வீசிக் கொண்டிருந்தது. பெட்டியில் இருந்த பயணிகள் அனைவரும் காற்றின் ஜிலுஜிலுப்பை நன்றாக அனுபவித்துக் கொண்டிருந்தனர்.

பெரிய குரு இருந்தார். முற்றும் துறந்தவர். எல்லாம் கற்றவர்.

பெரிய குரு இருந்தார். முற்றும் துறந்தவர். எல்லாம் கற்றவர்.

அவரை ஒரு பிரசங்கம் செய்ய கூப்பிட்டிருந்தாங்க.
பத்தாயிரம் பேர் வருவாங்கனுசொல்லியிருந்தாங்க.

அவரை அழைச்சிட்டு வர ஒரு குதிரைக் காரன் போயிருந்தான்.அன்னிக்குன்னு பார்த்து ஊரில் பயங்கர மழை.

தனூத் மாதா தேவி கோவில் இந்திய எல்லையின் பாதுகாவலாக விளங்கும் அதிசயம்!

இராஜஸ்தானின் ஜெய்சல்மார் பகுதியில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் 10 கி.மீ தொலைவில் அமைந்துள்து தனூத் மாதா கோவில். சக்திவாய்ந்த தனூத் மாதா ஆலயத்தை உடைத்தெறியும் எண்ணத்தில் பாகிஸ்தான் ராணுவமானது 1965 ம் ஆண்டு போரில் 3000 க்கும் அதிகமான குண்டுகளை தொடுத்தது. ஆனால் தனூத் மாதாவின் சக்தியால் ஒரு குண்டு கூட வெடிக்காமல் செயல் இழந்தது.

கணவன் சோகமாக வீடு திரும்பினான்.

கணவன் சோகமாக வீடு திரும்பினான்.

மனைவி: "ஏன், என்ன ஆச்சு?"

கணவன்: "மத்தியானம் லஞ்ச் முடிச்சுட்டு ஒரு தம் போடலாம்னு ஆபீசை விட்டு வெளியே வந்தேன். எதிரே இருந்த பொட்டிக்கடையில் சிகரெட் பத்தவைக்கக்கூட இல்லை, எங்க ஆபீஸ் கட்டிடம் இடிஞ்சு விழுந்து ஆபீஸ்ல எல்லாமே குளோஸ், என்னைத் தவிர"

ஆறுபடை வீடும், ஆறுபடையப்பனை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகளும்..!!!

1. திருப்பரங்குன்றம் : இங்கு பரம்பொருளை வழிபட்டால் திருமணம் நடைபெறும்.
2. திருச்சரலைவாய் (திருச்செந்தூர்): இங்கு முருகப்பெருமானை கடலில் நீராடி பின் வழிபடுதல் நல்லது. விடயாதி, பகை ஆகியன நீங்கும். மனம் தெளிவு பெறும்.

சமீபத்திய தஞ்சை பயணத்தின் போது, பொறியாளர் ஒருவர் மூலம் நாம் பெற்ற, தஞ்சை பெரியகோவில் கட்டுமானம் பற்றிய ஒரு தகவல்..

கோபுர உச்சியை உற்று நோக்குங்கள்..

கோபுரஉச்சியை நன்கு உற்று நோக்குங்கள்.
பிரம்மாந்திர கல் எனப்படும் ஸ்தூபிக்கல்.
இது ஒரு கல்லோ,  அல்லது பல கற்களின் சேர்க்கையோ இதன் எடை 80 டன்.. இந்த பிம்மாந்திர

நடராஜர் கோயில் கோபுரங்கள் ஏன் நேர் எதிரே இல்லாமல் உள்ளது??

இதற்கான காரணம் கோயில் ஸ்வஸ்திக் வடிவில் அமையப்பெற்ற ஸ்தலம். ஸ்வஸ்திக் கோடுகள் ஆரம்பிக்கும் இடம் கோபுர வாயிலாகும், அந்த இரண்டு கோடுகளும் இணையும் இடத்தில் தான் மூல ஸ்தானமான திருச்சிற்றம்பலம் அமைந்துள்ளது.

பைரவரை வழிபாடு செய்வது எப்படி?

அந்தகாசுரன் என்னும்சிவபக்தன் நீண்ட வலிய தவம் புரிந்து, சிவ பெருமானிடம் வரம் பெற்றான்.அந்தவரத்தின் சக்தியால் மும்மூர்த்திகளையும்,மற்ற தேவர்களையும்துன்புறுத்தினான்.அவர்களை சேலை அணிந்து,கையில் வளையிட்டு,கண்ணில் மைதீட்டி,பெண்வேடத்தில் தனக்கு சாமரம் வீசி பணிபுரியச்செய்து,இழிவு படுத்தினான்.அந்தகாசுரன்இருள் என்னும் சக்தியைப் பெ

சித்தர்களுக்கு எல்லாம் சித்தன் முருகனை பற்றிய வித்தியாசமான ஆய்வு ......

வாசித்து பாருங்கள் .... வியந்து போவீர்கள் .......

ஏறத்தாழ 9000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மகான் ஆகக் கருதப்படுபவர் முருகக் கடவுள்.
தமிழ் மொழியை வடிவமைத்ததால் தமிழ்க் கடவுள் என்ற சிறப்பு உண்டு. வயதாகும் நிலையை அதாவது Aging Process -ஐ நிறுத்தி, என்றும் குமரனாக, அழகனாக நீண்டகாலம் ஏறத்தாழ 4000 ஆண்டுகள் பூதஉடலுடன் வாழ்ந்து காட்டிய மகான் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

ஒரு வரி உண்மைகள்....

*சாவியை நான் தொலைத்துவிட்டு, தண்டனையை பூட்டுக்குக் கொடுத்தேன்…

*வாசிக்காமல் வைத்திருப்பது, ஒரு புத்தகத்துக்குச் செய்யப்படும் மிகப் பெரிய வன்முறை!!

*எல்லாரையும் நம்புங்க, துரோகம் பழகிடும்.

Happy daughter's week.

Daughter is not equal to tension
But
In today's world
Daughter is equal to
Ten son' s
🙍👭🙍👭

A FATHER Asked His DAUGHTER:

1-4 வகுப்பு ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டிய பதிவேடுகள் குறித்து அரசாணைகள் உள்ளதா??? RTI பதில்.


ஈரோடு மாவட்டம்- பெருந்துறை ஒன்றியத்துக்கு HRA உயர்வு.


வெளி நிகழ்ச்சிகளுக்கு பள்ளி மாணவர்களை அழைத்து செல்லுதல் குறித்து அரசு அதிரடி உத்தரவு.

அரசாணை -224-நாள் 04.11.2017- பொது நிகழ்ச்சிகள்,கண்காட்சிகளுக்கு மற்றும் பல வெளி நிகழ்ச்சிகளுக்கு பள்ளி மாணவர்களை அழைத்து செல்லுதல் குறித்து -சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டலின் படி பள்ளிக்கல்வி துறைக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு

PERIODICAL ASSESSMENT TOOLS ( மாணவர்களின் கற்றல் அடைவுநிலை ) மதிப்பீடு - 2016-17.

தமிழ் மெல்லக் கற்பவருக்கான கற்றல் அட்டைகள்.

அரசுஊழியர்களுக்கு சாதகமான அரசானைகள்!!!

1)GO.MS.200 P&AR dt 19.4.96

     உயர்கல்வி பயில அனுமதி கோரிய அரசு ஊழியரின் விண்ணப்பத்தின் மீது 15 நாட்களுக்குள் துறைத்தலைவா் அனுமதிதராவிட்டால்,அனுமதி அளித்ததாக கருதி மேல்படிப்பை தொடரலாம்.

2)GOVT Leter no 14735/s/10/ dt 08.042010

வெள்ளி, 17 நவம்பர், 2017

நீதிபதி கிருபாகரனை விமர்சித்த 11 ஆசிரியர்கள் பணி இடைநீக்கம்.

கடந்த செப்டம்பர் மாதம் 7–ந்தேதி முதல் தமிழகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஆசிரியர்கள்–அரசு ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன், ஆசிரியர்கள் நடத்திய போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்தது மட்டுமில்லாமல், சில கேள்விகளை எழுப்பி உத்தரவுகளையும் பிறப்பித்தார்.

பட்டியலில் சிவகங்கை, தேவகோட்டை நீக்கம் : அரசு ஊழியர் வீட்டு வாடகைப்படி(HRA) குறைப்பு.

சிவகங்கை, தேவகோட்டையை கிரேடு '2' நகராட்சிகளின் பட்டியலில் இருந்து நிதித்துறை நீக்கியதால், அரசு ஊழியர், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பணிபுரியும் இடங்களின் அடிப்படையில் வீட்டு வாடகைப்படி நிர்ணயிக்கப்படுகிறது. கிரேடு (1ஏ) ல் சென்னை உள்ளது. 

தலைமை ஆசிரியர்களுக்கு எகிறும் சம்பளம் : கூடுதல் பொறுப்பு வழங்க அரசு திட்டம்.

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள், 1.25 லட்சம் ரூபாய் சம்பளம் பெற உள்ளனர். அதனால், அவர்களுக்கு கூடுதல் பணி வழங்க, தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.

RTI- தகுதிகாண் பருவம் முடிப்பதற்கு முன் உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு மற்றும் ஆண்டு ஊதிய உயர்வு பெற தகுதி உண்டு.

வியாழன், 16 நவம்பர், 2017

தொடக்கக்கல்வி - நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆன பின் B.ED தேர்ச்சிக்கு ஊக்க ஊதியம் பெற்றிருந்தால் அதனை திரும்ப பெற வேண்டும் - DEEO உத்தரவு - செயல்முறைகள்.


.B.Lit..B.ed ..incentive பெற்றிருந்தால் அந்த  கூடுதல் ஊதியத்தை கணக்கீடு செய்து அரசு கணக்கில் செலுத்தினால் தான் 7 th  Pay ஊதியம் பெறலாம்....திருவள்ளூர் மாவட்ட DEEO ஆணை.

STATE LEVEL SCHOOL TEAM VISIT - பள்ளி குழு பார்வையின் போது கடைபிடிக்க வேண்டியவை - SSA அறிவுரைகள்.

சேலம் மாவட்டம் (SSA ) கூடுதல் முதன்மை கல்வி அலுவலரின் மாநில திட்ட இயக்குநர் குழு பார்வை ( STATE LEVEL TEAM VISIT ) பள்ளிகளை தயார் படுத்துதல் சார்ந்த செயல்முறைகள்.

பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை.

பள்ளிக்கல்வி - 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2017/18 -பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - இயக்குனர் செயல்முறைகள்.

வேலைவாய்ப்பு அலுவலக நடைமுறை 2011- 2015 ஆண்டுக்கான பதிவு புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை ஆணை.


டிசம்பர் 15-ந் தேதிக்குள் அனைவருக்கும் ‘ஸ்மார்ட் கார்டுகள்’ வழங்கப்படும் தமிழக அரசு தகவல்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னை தலைமைச் செயலகத்தில் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நிர்வாக இயக்குனர், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் ஆகியோருடன் பொது வினியோகத் திட்டம் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.

TNPSC Group 4 Exam - 9,351 காலி இடங்கள்!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு: கிராம நிர்வாக அலுவலர், குரூப்-4 பணிகளில் 9,351 காலி இடங்கள் அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் வரித்தண்டலர், வரைவாளர் மற்றும் நில அளவர், என மொத்தம் 9,351 காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்வதற்காக, எஸ்.எஸ்.எல்.சி கல்வித்தரத்திலான ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-4 (குரூப்-4) நடத்துவதற்கான அறிவிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது.

இத்தேர்வுக்கான கல்வி மற்றும் பிற தகுதிகள் வருமாறு:-
 

பள்ளி மாணவியருக்கு 'சட்ட சேவை பெட்டி'

மாணவியருக்கு சட்ட உதவி செய்வதற்காக, தமிழகத்தில் முதன்முறையாக, ராமநாதபுரம் மகளிர் பள்ளியில், 'சட்ட சேவை பெட்டி' திட்டம் துவக்கப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம், புனித அந்திரேயா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், 'சட்ட சேவை பெட்டி' திறப்பு விழா நடந்தது. மாவட்ட நீதிபதி, கயல்விழி திறந்து வைத்தார்.

சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் இடைநிலை ஆசிரியர் பணியிடம், பட்டதாரி பணியிடமாக மாற அரசின் அனுமதி தேவை இல்லை உயர் நிதி மன்றம் உத்தரவு.


அரசு பள்ளியும், மாணவர் சேர்க்கையும்…

அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வழிவகைகளை கல்வித்துறை செய்துகொண்டுதான் இருக்கிறது. ஆன போதிலும், தமிழகத்தில் உள்ள 37,141 (2014-15) அரசு பள்ளிகளில் 1 – 5 ஆம் வகுப்பில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 24,73,356 பேர். ஆனால் 57,192 தனியார் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 32,73,884 பேர். இதேபோன்று 6 முதல் 8 வகுப்பு மாணவர்களும் அரசு பள்ளியை விட தனியார் பள்ளிகளில் தான் மாணவர் சேர்க்கை அதிகளவு உள்ளது.

கருணை அடிப்படையில் பணி நியமனம் யாருக்கு வழங்கப்படுகிறது?

இறந்த அரசு ஊழியரின் மனைவி / கணவர் / மகன் / மகள் / தத்து எடுக்கப்பட்ட மகன் / மகள்.  விவாகரத்து பெற்ற மகள் / விதவையாக உள்ள / கணவரால் கைவிடப்பட்ட மகள் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.


# கருணை அடிப்படையில் பணிநியமனம் கோர கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா?

மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு.

மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு, 3 புதிய வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பல்வேறு சேவைகளுக்கு ஆதார் எண் அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், மொபைல் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்கான அவகாசம், 2018, பிப்., 6 வரை வழங்கப்பட்டுள்ளது. 

புதன், 15 நவம்பர், 2017

திறந்தநிலை பல்கலை பட்டம் அரசு வேலைக்கு தகுதியானது.

 'தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் படித்த பட்டம் செல்லும்; அரசு வேலைக்கும் தகுதியானது' என, பல்கலை அறிவித்துள்ளது. 

இது குறித்து, பல்கலையின் பதிவாளர், விஜயன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திறந்தநிலை பல்கலை, தமிழக அரசின் பல்கலையாகும். பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அனுமதியுடன், பட்டயம் முதல் ஆராய்ச்சி படிப்பு வரை 

நடத்தப்படுகிறது. இந்த பல்கலையில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்த பின், இளநிலை பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு, அரசு நிறுவன வேலைவாய்ப்புகளில் சேர, தகுதி உடையவர்கள் என, அரசு அறிவித்து உள்ளது. இந்நிலையில், 'திறந்தநிலை பல்கலையில் படித்த பட்டங்கள் செல்லாது' என, எதிர்மறையான தகவல்கள் பரவுகின்றன. 

புதிய பேராசிரியர்கள் நியமனத்துக்கு தடை நீடிப்பு.

பல்கலைகள் மற்றும் அரசு கல்லுாரிகளில், புதிய பேராசிரியர்கள் நியமனத்துக்கான தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசின் பல்கலைகள் மற்றும் அரசு கல்லுாரிகளில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.

பல ஆண்டுகளாக, பல்கலைகளில் நிதி வரவு - செலவை சரியாக நிர்வகிக்காததால், பல்கலைகளில் கடும் நிதிச்சுமை ஏற்பட்டு உள்ளது. அதே நேரம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில், 1,000க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் உட்பட, 8,000க்கும் மேற்பட்டோர், வேலையின்றி சம்பளம் பெறுவதால், அந்த பல்கலைக்கு அதிக செலவு ஏற்பட்டுள்ளது.