ஞாயிறு, 16 ஜூலை, 2017

ஆசிரியர் காமெடி.......ஹாய் பிரண்ட்ஸ். சிரிப்புக்காக மட்டும்..😃🤝🤝

தோழி : - 1  என்னடி  காலையிலேயே போண் பண்ணுயிருக்க என்ன விஷயம்  ?.

தோழி  2 :- வீட்டில மாப்பிள்ளை  பார்க்கலாமுன்னு ரெஜிஸ்டர்  பண்ணியிருந்தாங்கடி 😳.நிறைய  ஜாதகம்  வந்து  இருக்கு.அதுல ஐந்து ஆறு   பொருத்தமாக இருக்கு.👨🏻👴🏻👨🏻‍⚕👨🏻‍💼🤵🏻👨🏻‍⚖ அதுல எதை செலக்ஷன் பண்ணு றது  தெரியல . கொஞ்சம்  குழப்பமாக இருக்குடி. 😇😍

தோழி  1 :-  அதுல என்ன  குழப்பம்  ?.


தோழி 2 :-  வாத்தியார்  ஜாதகம்  தான்  நிறைய  வந்து இருக்கு. அதான் செலக்ஷன் பண்ணு றது  கொஞ்சம்  ஐடியா சொல்லுடி..😌😒

தோழி 1:- ஓ.கே. ஓ.கே...சொல்லிட்டா  போகுது.  அவுங்க  என்ன போஸ்டிங்ல  இருக்காங்கண்ணு  மட்டும்  சொல்லு.😎🤠

தோழி 2:- முதல்  மாப்பிள்ளை  நடுநிலை தலைமை ஆசிரியர். 👴🏽

 தோழி 1:- ஐய்யய்யோ.இந்த  ஆள் கல்யாணம் பண்ணிக்காம  இவ்வளவு  நாள்  என்ன பண்ணுனாரு?. ஸ்கூல் ஸ்கூல் ன்னு  மீட்டிங் மீட்டிங்ன்னு  ஓடியிருப்பாரு... அதான்.😜😃

  தோழி 2:- போட்டோவில்  அப்படி  தெரியலடி. 😎

தோழி 1:- ஏமாந்து  விடாதிடி .  பத்து வருஷத்துக்கு  முன்னாடியே  எடுத்த போட்டோவாக  இருக்கும் .👱🏼

தோழி 2:- சரிடி  அது வேண்டாம்.  அடுத்த  மாப்பிள்ளை பி. ஆர். டி..  (B.R.T).👨🏻

தோழி 1:- அடியே  .நீ என்ன தான்  சமைத்தாலும் குறை தானடி  சொல்லுவாரு..நல்லா  சமைத்து  இருக்கிற  என்று  ஒரு  நாளும் பேர்  வாங்க முடியாதுடி.அதுமட்டுமல்லடி  குழந்தைங்க  குரூப்பா உட்கார்ந்து தான்  சாப்பிடனுமுன்னு சொல்லுவாருடி. 😄😄😜

தோழி  2:- என்னடி  இப்படி சொல்லுற ?.😌

தோழி 1:- ஆமாண்டி. தெரியாம மாட்டிக்காத.

தோழி 2:- சரிடி. அடுத்த மாப்பிள்ளை.கணித பட்டதாரி ஆசிரியர். 👩🏻‍🌾👨‍🎓

தோழி 1:-எல்லாத்துக்கும்  கணக்கு  பார்ப்பாரே.வெங்காயம் கூட  எண்ணிப்பார்த்து  வாங்கி  வருவாரே. பட்ஜெட்  மாப்பிள்ளை  ஆயிடுச்சே.😜😜

தோழி 2:- அப்போ  இதுவும்  வேண்டாம்.  அடுத்த மாப்பிள்ளை  ஆங்கில  பட்டதாரி ஆசிரியர். 🤵🏻🎓

தோழி 1: -  ஓவர்  பில்டப் 🤷🏻‍♂ கொடுப்பாரே .எல்லா   எனக்கு தெரியும் என்று  சொல்லுவாரு. பெண் ஆசிரியரை பார்த்தவுடன்  இங்கிளீஸ்ல விட்டு அடிப்பாருடி  .அப்புறம் உன் கதி  ஆதோகதிடி.😜😜

தோழி 2:- அப்போ  அறிவியல் பட்டதாரி   ஆசிரியர். 🙍🏻‍♂🎓

தோழி 1:-  அதுக்கு கல்யாணம் பண்ணிகாமே  இருக்கலாம். 😏

தோழி 2:- ஏண்டி  .

தோழி 1: - நீ  என்ன தான்  விதவிதமாக சமைத்து   போட்டாலும்  ஆராய்ச்சி மையம்  அமைத்து  ஆய்வு 🐓🦈🐐🌿 பண்ண ஆரம்பித்து விடுவார். உன்னோட லிஸ்டில் இடைநிலை   ஆசிரியர்  இருக்காரான்னு  பாரு. 🙎‍♂

தோழி 2:- ம் ம்...ம்  இருக்காரு  ஒருத்தர்.  அவரு  சங்க பொறுப்பில்இருக்காரே..... எப்படி  ஒத்து வரும்....?.🤣

தோழி 1: - பரவாயில்லைடி.  நீ சொல்லுற லிஸ்டில்  இடைநிலை ஆசரியர்  தான்  நமக்கு  ஒத்து  வரும்டி.🤝  பாதி நாட்கள் கொடி பிடிக்க  போய்விட்டாலும்   🎌🏳  மீதி  நாள்  சங்கத்தில்    மாதிரியே  வீட்டிலும்  பொறுப்பாக  இருப்பாருடி.🏠  எவ்வளவு  டார்ச்சர் கொடுத்தாலும்  மாலையில் கண்டிப்பாக  வீட்டுக்கு வந்து தான்  ஆகணும். 😄
 கண்டிப்பாக பள்ளி  மூடி  விடுவார்கள்.😄 வந்தபின் வீட்டில் குழந்தைகளுக்கும்  பாடம்  சொல்லிக்கொடுத்து  விடுவார்.  அதையெல்லாம் தாண்டி  இவுங்க தானடி  எவ்வளவு  டார்ச்சர்  கொடுத்தாலும்  தாங்கிப்பாங்கடி..😜 பணிக்கு  வந்து  பத்து  பதினைந்து வருடங்கள் ஆனாலும்  அம்மா  மடியில்  இருந்து  வரும்  குழந்தைகளை  அன்போடு  பார்த்துப்பாங்க.😜 பணி நிரவல்....கிரீன்  சிகினல்....  எவ்வளவு தான்  டார்ச்சரை  கொடுத்தாலும்  தாங்கிக்கிறவங்கடி .  ரொம்ப ரொம்ப நல்லவங்கடி ..😃😃😜😜


          எப்புடி   நம்ம  ஐடியா. ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக